நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?

ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா?

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

What is disease? Why do people get sick? - Is this the cause of reduced life expectancy? in Tamil

நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? | What is disease? Why do people get sick?

இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.

நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?

ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா?

🟠 இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.

 

🟠 எனவே, நாம் உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல நீராக இருக்க வேண்டும்;

 

🟠 சுவாசிக்கும் காற்று நல்ல காற்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் நாம் உடல் லத்தோடு வாழமுடியும்.

 

🟠 ஆனால் நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ,

தவறான உணவுகளை உட்கொண்டு விடுகிறோம்.

 

🟠 அழுக்கான நீரைக் குடித்து விடுகிறோம்.

 

🟠 அசுத்தமான காற்றைச் சுவாசித்து விடுகிறோம்.

 

🟠 அப்பொழுது,

நாம் உண்ட உணவு, குடித்த நீர், சுவாசித்த காற்று இவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் நம் உடம்பினுள்ளே போய்ப் படிந்து விடுகின்றன.

 

🟠 அவ்வாறு படிந்துவிட்ட நச்சுப் பொருள்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவற்றை வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றும் முயற்சி செய்வதும் இல்லை. எனினும், நம் உடம்பானது, தானாகவே அந்த முயற்சியைச் செய்கிறது.

 

🔴🔴🔴🔴🔴🔴🔴

உடம்பு செய்யும் அந்த நன்முயற்சிக்குத்தான் நோய் என்று பெயர்

 

நாம் தவறான உணவுகளை உண்ணாமலும் அழுக்கான நீரைக் குடிக்காமலும், அசுத்தமான காற்றைச் சுவாசிக்காமலும், மிக மிக விழிப்போடு நடந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

 

🟠 அப்போதுகூட, நமக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படியென்றால்,

 

🟠 நாம் எவ்வளவு நல்ல உணவை உண்டாலும், நாம் உண்ணும் உணவு முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

 

🟠 நாம் எவ்வளவு நல்ல தண்ணீரைக் குடித்தாலும் நாம் குடிக்கும் தண்ணீர் முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

 

🟠 நாம் எவ்வளவுதான் நல்ல காற்றைச் சுவாசித்தாலும், நாம் சுவாசிக்கும் காற்று முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

 

🟠 ாம் உண்ணும் உணவிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

 

🟠 நாம் குடிக்கும் நீரிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

 

🟠 நாம் சுவாசிக்கும் காற்றிலே தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

 

🟠 இந்தக் கழிபொருள்கள் தாம் நாம் வெளிவிடுகிற மூச்சுக் காற்றாகவும், வியர்வையாகவும், சிறுநீராகவும். மலமாகவும், நமது உடம்பினின்று வெளித் தள்ளப் படுகின்றன.

 

எனவே, நம் உடம்பினுள்ளே இரண்டு வகையான இயக்கங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, உள்ளிழுக்கும் இயக்கம்.

 

மற்றொன்று, வெளித்தள்ளும் இயக்கம்.

 

🟠 உள்ளிழுக்கும் இயக்கத்தை ஆங்கிலத்தில் (Assimilation) என்று சொல்லுவார்கள். வெளித்தள்ளும் இயக்கத்தை எலிமினேஷன் (Elimination) என்று சொல்லுவார்கள்.

 

இவ்விரண்டு இயக்கங்களும் சீராக நடைபெற்று வருமானால், நமக்கு நோயே வரமாட்டாது. நோயே மட்டுமன்று, நமக்கு மரணமேகூட வரமாட்டா.

 

🟠 இந்த இயக்கங்களில் சீர்கேடு ஏற்படும்போதுதான், நமக்கு நோய் தோன்றுகிறது. மரணமும் நேருகிறது! இவ்வியக்கங்களை நடத்தும் சக்திக்கே பிராணசக்தி (Life Force) என்று பெயர்.

💐

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? - ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா? [ ] | Health Tips : What is disease? Why do people get sick? - Is this the cause of reduced life expectancy? in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்