தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What is donation? What is Dharma? - Tips in Tamil

தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? | What is donation? What is Dharma?

தானம் வேறு தர்மம் வேறு. தானம், தர்மம் என்கிறார்களே? அப்படியென்றால் என்ன? இந்த கதையை படியுங்கள்...

தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன?

தானம் வேறு  தர்மம் வேறு.

தானம், தர்மம் என்கிறார்களே?

அப்படியென்றால் என்ன?

இந்த கதையை படியுங்கள்...

 

சூரியபகவான் சிவ பெருமானிடம் கேட்டார்.

பரம்பொருளே

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணன் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால்

 

அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

 

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது

இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

 

இறை சிரித்தது.

 

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.புண்ணியக் கணக்கில் சேராது.

 

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும்.

 

பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.

 

அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான்.

 

ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

 

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்

 

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க

ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

 

கேட்டு கொடுப்பது தானம் ! 

கேட்காமல் அளிப்பது தர்மம் !

ஓ மனிதனே இதைப் படித்து நீ திருந்திக் கொள் இக்கதையில் ஓர் உண்மை இருக்கிறது

 

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.

 

தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டு நாய்களுக்கு இரையாக்குவார்.

 

 ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.

 

இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன்,

நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா

தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ”

ராஜா ஒப்புக்கொண்டார். அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.

காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.

அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.

அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.

பத்து நாட்கள் முடிந்தது. வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.

அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.

இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!

 

இதைப் பார்த்து திகைத்த அரசன்,

"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான்.

வேலைக்காரன் பதிலளித்தான், "நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை.

நான் உங்களுக்கு பத்து வருடங்கள்  சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து

என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"

அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.

நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.

ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை.

இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித சுபாவம்.

 இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••

 

மன்னிப்போம்•••மறப்போம்•••!

கடவுள் எங்கே இருக்கிறார்?...

குட்டி கதை.....

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.

 

அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது.

உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக்காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

 ''அம்மா! நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.

 

அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் எதுவென்று தெரியவில்லை.

 

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது.

அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது.

 

பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.

 

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது.

 

குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது.

 

அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது.

 

அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

 

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவிலும் நிறைந்து இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை.

 

எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை.

 

கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்...✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What is donation? What is Dharma? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்