பிரத்தியட்சம் என்பது என்ன?

குறிப்புகள்

[ ஊக்கம் ]

What is exclusivity? - Tips in Tamil

பிரத்தியட்சம் என்பது என்ன? | What is exclusivity?

புலன்கள் நம்பத்தக்கவையாக இருக்க முடியாது. புலன்கள் வெறுமனே எந்திரத்தனமான கருவிகளே.


பிரத்தியட்சம் என்பது என்ன?

🌷

 

நியூயார்க்கில் ஒரு பெண் பதினாறாவது மாடியில் இருந்து குதித்து விட்டாள். ஏனென்றால் அவள் உட்கொண்ட போதையில் இப்போது தன்னால் பறக்க முடியும் என்று அவள் எண்ணிவிட்டாள்.அவள் இறந்து போனாள் என்பது வேறு விசயம்.

 

ஆனால் போதைப் பொருளின் பாதிப்பினால்தான் தன் புலன்கள் தன்னை இவ்வாறு ஏமாற்றிவிட்டன என்பதை இனி அவள் ஒருபோதும் அறியப் போவதில்லை.

 

போதைப் பொருள்களை உட்கொள்ளாத நிலையிலும் நமக்கு பிரமைகள் ஏற்படவே செய்கின்றன.

🌷

ஒரு இருண்ட வீதியின் வழியாக நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென நீங்கள் பீதி அடைகிறீர்கள்.

 

ஒரு பாம்பை அங்கே காண்கிறீர்கள். உடனே ஓடத் தொடங்குகிறீர்கள் அங்கே பாம்பு எதுவும் இல்லை. ஒரு கயிறுதான் அங்கே கிடக்கிறது என்பதைப் பிறகுதான் அறிய வருகிறீர்கள்.

🌷

ஆனால் அங்கு இருந்தது பாம்புதான் என்று நீங்கள் உணர்ந்த போது, அங்கு ஒரு பாம்பு இருந்தது.

 

அங்கு ஒரு பாம்பு இருப்பதாகவே உங்கள் கண்கள் உங்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தன.

 

நீங்களும் அதற்கேற்ப செயல்பட்டீர்கள். அந்த இடத்தைவிட்டுத் தப்பி ஓடினீர்கள்.

🌷

உங்களின் கண்கள் உங்களுக்குத் தவறான தகவல் தந்துவிட முடியும்.

 

உங்களின் காதுகள் தவறாக அறிவித்துவிட முடியும். எதையும் நம்பிவிடக் கூடாது.

 

எந்த புலன் அறிக்கையையும் நம்பி விடக்கூடாது. ஏனெனில் புலன் அறிக்கை என்னும் இடையீட்டாளரை நீங்கள் சார்ந்திருக்க முடியாது.

 

உங்கள் கண்கள் நோய் வாய்ப்பட்டிருந்தால் அவை வேறுவிதமாகத் தெரியப்படுத்தும்.

🌷

உங்கள் கண்களில் போதை ஏறினால் அவை வேறுபாடான அறிக்கை தரும்.

 

ஏற்கனவே உள்ள அனுபவத்தால் உங்கள் கண்கள் நிரம்பி இருந்தால் அவை வேறுவிதமாகவே தெரியப்படுத்தும்.

🌷

எனவே புலன்களின் அறிக்கை நம்பகமானவை அல்ல.

 

காதுகளின் வழியாக நீங்கள் கேட்கிறீர்கள் காதுகள் வெறும் கருவிகளே.

 

தவறாகவும் அவை செயல்பட முடியும்.

 

சொல்லப்பட்டிராத ஒன்றை அவை கேட்கவும் முடியும் சொல்லப்பட்ட ஒன்றை அவை தவறவிடவும் முடியும்.

🌷

புலன்கள் நம்பத்தக்கவையாக இருக்க முடியாது. புலன்கள் வெறுமனே எந்திரத்தனமான கருவிகளே.

🌷

🌿அப்படியானால் 'பிரத்தியட்சம்' என்பதுதான் என்ன? நேரடியாக அறிதல் என்றால் எது?

 

🌿புலன்கள் உணர்த்துவதை உடனடியாக நம்பாமல் இருப்பது.

 

🌿புலன்களை தவிர்த்து உங்கள் உள் உணர்வின் மூலம் நேரடியாக காண்பது.

🌷

புலன்கள் உட்பட்ட இடையீடு எதுவும் இல்லாதபோது மட்டுமே நேரடி அறிவு இருக்க முடியும்.

 

"அப்போதுதான் அது சரியான அறிவு" என பதஞ்சலி கூறுகிறார்.

 

இதுவே சரியான அறிவின் முதல் ஆதாரம் ஆகும்.

 

💐நன்றி🙏

 

🌷தமிழர் நலம்🌷



கற்போம் கற்பிப்போம்!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஊக்கம் : பிரத்தியட்சம் என்பது என்ன? - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : What is exclusivity? - Tips in Tamil [ Encouragement ]