கோத்திரம் என்றால் என்ன? ஆண் வாரிசு இல்லாமால் போவதற்கு என்ன காரணம்?

பிரவர்த்தகர்கள், விஸ்வகர்மா

[ சுவாரஸ்யம்: தகவல்கள் ]

What is gotra? What causes male heirlessness? - Pravarthakars, Vishwakarma in Tamil

கோத்திரம் என்றால் என்ன? ஆண் வாரிசு இல்லாமால் போவதற்கு என்ன காரணம்? | What is gotra? What causes male heirlessness?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள்.. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.

கோத்திரம் என்றால் என்ன? ஆண் வாரிசு இல்லாமால் போவதற்கு என்ன காரணம்?

 

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள்.. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.

 

கோத்திரம் என்பது இவர்கள் எந்த முனிவருடைய வழியில் வந்தவர்கள் என்பதைக் குறிக்கும். இந்துக்கள் எல்லோருமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு.

 

இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு

1. பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்

 

பிரவர்த்தகர்கள்

ஒரு சில கோத்திரங்கள் ஒரு ரிஷியையும் சில இரண்டு ரிஷிகளையும் சில மூன்று ரிஷிகளையும் சில ஐந்து ரிஷிகளையும் சில ஏழு ரிஷிகளையும் பிரவரமாகக் கொண்டவை.

 

கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

 

இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

 

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 

ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும். ஆண் மற்றும் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

 

பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.

 

உதாரணத்திற்கு ஒன்றைக் காட்டலாம். ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.

 

ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கோத்திரப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும்.

 

ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 

விஸ்வகர்மா

 

கோத்திரங்கள் பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன.

 

தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

 

இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர்.

 

1) இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள் – சானக ரிஷி கோத்திரம்

 

2) மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்

 

3) உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்

 

4) கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்

 

5) பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்

 

இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்

 

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

 

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

 

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

 

4) கர்நாடகம்:

 

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

 

5) கோவா:

 

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

 

6) ராஜஸ்தான்:

 

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள்..

 

தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

 

கோத்திரம்

 

நமது கோவிலில் ஐந்து கோத்திர குடி மக்கள் உள்ளனர். அவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ வீரிய பெருமாள் ஸ்வாமி வழி வந்தவர்கள்

தென்னவராயன் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் வழி வந்தவர்கள்

பயிராலழக மகரிஷி கோத்திரம் - நமது பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று பின்னாளில் இணைந்தவர்கள்

பாக்குடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்

 

மாத்துடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் விரிப்பு , ஜமுக்காளம் கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்

 

விஞ்ஞான ரீதியிலேயே கோத்திரம்

 

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

 

பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது.

 

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.

 

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

 

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.

 

பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

 

இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை

 

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. .

 

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.

 

பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.

 

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

 

பெண்கள் மட்டுமே பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும். இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

சுவாரஸ்யம்: தகவல்கள் : கோத்திரம் என்றால் என்ன? ஆண் வாரிசு இல்லாமால் போவதற்கு என்ன காரணம்? - பிரவர்த்தகர்கள், விஸ்வகர்மா [ ] | Interesting: information : What is gotra? What causes male heirlessness? - Pravarthakars, Vishwakarma in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்