
காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும். நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள். ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம். வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.
காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன? விளக்கம் மற்றும் ஓரு மாறுபட்ட பரிகார ஸ்தலம்
 
காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள்
எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. 
திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும்
என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும். 
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை  என்ற
முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள். 
ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். 
பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை
என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். 
அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும்
திருநாகேஸ்வரம்.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்?  என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை.
அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ
அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். 
மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில்
இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. 
அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி
என்ற நாமம் சூட்டப்பட்டது. 
திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே
இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டே இருக்கும்.
சிவபெருமானின் மூச்சு காற்றுபட்டு தீப சுடரொலி
அசைகிறது. 
திருக்காளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான
வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். 
இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும்
போக்கி கொண்டார் என்கிறது புராணம்
ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள்
என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி
ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள்
நம் அன்னை. 
திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும்
முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும். 
எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு
முன்போ அல்லது பின்போ  அலமேலுமங்கை தாயாரையும்
பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப
தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான்
பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம். 
ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும்
தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். 
கேது தோஷம் நீங்கிட காளஹஸ்திக்கு சென்று பரிகாரம்
காண வேண்டும. 
ராகு தோஷத்த்திற்கு திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம்
காண வேண்டும. 
கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி
தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும். ஞானம் என்பது அறிவு.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம்
கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். 
இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்
பாருங்கள்.
“சந்திரர்
சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின்  ஐந்தலை
அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில்
உள்ளது.
       
இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்… 
“மாயனும்
மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே  காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய்
நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு
நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”
திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் 
திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும். 
ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை
நல்ல தெளிவான புத்தியும் அமையும். 
ஞானமும், செல்வமும் சேர வேண்டும். 
அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி
எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள்.
அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை
செய்யும்...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன? விளக்கம் மற்றும் ஓரு மாறுபட்ட பரிகார ஸ்தலம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : What is Kalasarpa Dosha Explanation and a different place of remedy - Notes in Tamil [ ]