காளீஸ்வர என்றால் சிவபெருமான். இறைவனுக்கு, காலனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் முத்திரை இது. நம்மை தனித்தன்மையுடன் விளங்க வைக்கக்கூடிய, கெட்ட பழக்கங்களை அகற்றக்கூடிய முத்திரை இது.
காளீஸ்வர முத்திரை என்றால் என்ன?
காளீஸ்வர என்றால்
சிவபெருமான். இறைவனுக்கு, காலனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் முத்திரை இது.
நம்மை தனித்தன்மையுடன் விளங்க வைக்கக்கூடிய, கெட்ட பழக்கங்களை
அகற்றக்கூடிய முத்திரை இது.
நம்மிடமுள்ள முரண்பாடான
எண்ணங்களை நீக்கி நம்மை அமைதியான ஒரு மனிதனாக ஆக்குகிறது. வெள்ளம்போல் வரும்
எண்ணங்களையும்,
எரிச்சலை ஏற்படுத்தும்
எண்ணங்களையும் மாற்றும் தன்மை உடையது. இதன்மூலம் நம்மை நாமே புரிந்து கொண்டு
செயல்பட முடியும். இந்த புரிந்துணர்வு, நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும்
நிலையை உருவாக்கும்.
ஒழுங்கற்ற முறையில்
இருக்கும் ஒரு பெரிய கல்லை உளி கொண்டு செதுக்கி, எப்படி அழகிய சிலையை சிற்பி
உருவாக்குகிறானோ, அதே முறையில் நம்மைச் சிறந்த மனிதனாக இந்த முத்திரை உருவாக்குகிறது.
இது, சண்டைக்கான முத்திரை
அல்ல; வழிகாட்டி முத்திரை.
நமது வாழ்க்கைப் பயணத்தில், நம்மைச் சரியான பாதைக்கு அழைத்துச் சென்று முன்னேறச் செய்கிறது.
இரண்டு கைகளிலுள்ள நடு
விரல்களின் நுனிப் பகுதி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு வைக்க வேண்டும்.
ஆட்காட்டி விரலின் முதல் இரண்டு அங்குலாஸ்தியும், கட்டை விரலின் முதல் இரண்டு
அங்குலாஸ்தியும் மற்றொரு கையில் உள்ள ஆள்காட்டி மற்றும் கட்டை விரல்களைத்
தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சுண்டு விரலும், மோதிர விரலும் வளைந்த நிலையில் இருக்க வேண்டும். கட்டை
விரல்கள் நமது மார்புப் பகுதியை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கை வெளியே
நீட்டியபடி இருக்க வேண்டும்.
இப்போது மூச்சை
உள்ளேயும்,
வெளியேயும் இழுத்து விட
வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். பின் மூச்சை மெதுவாக நிறுத்தி, பின் மீண்டும்
உள்ளிழுத்து பின் வெளியே விட வேண்டும்.
இந்த முத்திரையை நின்ற
நிலையில் செய்வது சிறந்தது. தினமும் இந்த முத்திரையைக் குறைந்தது 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை
செய்யலாம்.
1. மனம் அமைதியாக
இருக்கும்.
2. நம்மை தனித்தன்மையுடன்
திகழவைக்கும்.
3. நம்மிடமுள்ள தேவையற்ற
தீய குணங்கள் மாறும்.
4. முரண்பாடான எண்ணங்கள்
நீங்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : காளீஸ்வர முத்திரை என்றால் என்ன? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : What is Kaliswara Stamp? - Recipe, time scale, benefits in Tamil [ ]