ஒரு ஊரில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் ஒரு மகானிடம் சென்று தன்னுடைய பிரச்சனையை பற்றி சொல்கிறாள்.
அன்பு என்றால் என்ன?
ஒரு ஊரில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் ஒரு மகானிடம் சென்று
தன்னுடைய பிரச்சனையை பற்றி சொல்கிறாள். "என்னுடைய கணவர் என்னுடன் எப்பவுமே சண்டை போடுகிறார்.
என்னை பற்றிய புரிதல் தன்மை கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. எங்களுடைய பிரச்சனை
முடிவுக்கு ஒரு வழி சொல்லுங்கள் தீராத தலை வழியாய் இருக்கிறது. மேலும் என்னுடைய
திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு
கண்டிப்பாய் ஒரு தீர்வு சொல்லி ஆக வேண்டும் என்று வற்புறுத்த, சற்று நேர ஆழ்ந்த
சிந்தனைக்கு அப்புறம் மகான் அவர்கள் நான் ஒன்று சொல்கிறேன் கேள் என்று சொல்கிறார்...
நமது ஊரை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் அந்த காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு ஒரு மாதம் அதற்கான உணவு
கொடு... பின்னர் ஒரு மாதம் கழிந்த பிறகு என்னை நேரில் வந்து பார்க்க வேண்டும் மேலும்
உன் பிரச்சினைக்கான தீர்வை சொல்கிறேன்!" என்று கூறி விட்டார். அந்த
பெண்மணியும் சற்று குழப்ப மனநிலையில் சரி எதோ ஒன்று தீர்வு கிடைத்தால் சரி என்று
மகான் சொன்னபடி செய்வோம் என்று தைரியத்துடன் புறப்பட்டு சென்றாள்.
மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான்
கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு
பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு
இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம்
வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில்
புலி படுத்திருந்தது... அந்த பெண்மணியை பார்த்த புலி ஒன்றும் செய்யவில்லை... மாறாக
அந்த புலி அவளுக்கு பணிவுடன் நடந்தது. அந்த பெண்மணியோ உணவான மாமிசத்தை
வைத்துவிட்டு விரைவாக ஓடிவிட்டாள்... இதை தொடர்ந்து செய்து வந்தாள். கொஞ்ச நாள்கள்
அப்படியே சென்ற பிறகு புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்து வந்தாள்.
புலியும் கொஞ்ச நாள்களிலே நன்றாக சாப்பிட்டு விட்டு அந்த
பெண்மணி மடியிலே பாசமாக படுத்துக்கொண்டது...
அந்த மாத கடைசி நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள்
வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை. அந்த புலி
ஆனது பூனை போல அந்த பெண்மணி கால்களை
சுற்றியே வந்தது. இது என்ன புது கொடுமை என்று மகானிடம் கேட்கலாம் என்று செல்லும்
பொழுது ஊர் மக்கள் அனைவரும் புலியை கண்டு
அலறி ஓடினார்கள்.
"பார்த்தீர்களா
குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய
பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி
வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்...
பெண்ணே! மிருகக் குணம் கொண்ட ஒரு புலியே உன் அன்பினால் உன்
கால்களில் சரண் அடைந்து கிடக்கிறது. மேலும் அந்த புலியை கூட உன்னுடைய அன்பினால்
பூனையாக மாற்றிவிட்டாய், இப்போது சொல்கிறேன் கேள். உன்னுடைய கணவர் இந்த புலியை விடவா
மிருகக் குணம் கொண்டவர்!" என்றார்.
மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்பு தான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை
உணர்ந்தாள்.
இன்னொரு பெண்மணியிடம் அதாவது 5௦ வருட இல்லற வாழ்க்கை அனுபவம்
கொண்ட தம்பதியர்களிடம் மகான் கேட்கிறார். நீங்கள் சந்தோசமாக, மகிழ்ச்சியாக இருந்தீர்களா
என்று கேட்கும் பொழுது, அந்தப் பெண்மணியின் வார்த்தைகளை அவளுடைய கணவரும் ஆவலுடன்
பார்த்துக் கொண்டு இருந்தார். கணவர் சந்தோசமாகத் தான் வைத்து இருந்தோம் என்ற நம்பிக்கையில்.
ஆனால் அந்த பெண்மணி சொன்ன பதில் தான் நமக்கு ஹை லைட்டே. ஆம் நண்பர்களே. அவர் என்னை
மகிழ்ச்சியாக வைத்தார். வைக்க வில்லை என்பது இரண்டாம் நிலை தான். ஆனால் சந்தோஷமாக இருப்பது
என்பது என்னை சார்ந்த விஷயம். என் மனதை பொறுத்த விஷயம். என் மனதை மகிழ்ச்சியாக
வைத்து இருப்பது என்பது எனக்கானது. என் வாழ்க்கைக்கானது. எனது மகிழ்ச்சியை என்
மனதில் நிரப்பத் தான் நான் எப்போவும் பார்ப்பேன். அதனால் எப்போதும் மகிழ்ச்சியாய்
இருக்கிறேன். இது புரிதல் தன்மைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் அழகான விஷயம்.
இந்தக் கலையை நீங்கள் கற்றுக் கொண்டால் நீங்கள் மாத்திரம் அல்ல உங்களை சுற்றி உள்ள
மனங்களும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது சத்தியமாக சாத்தியம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : அன்பு என்றால் என்ன? - ஊக்கம் [ motivation ] | Encouragement : What is love? - Encouragement in Tamil [ முயற்சி ]