பிரதோஷ தினத்தன்று அதாவது கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சத்தில் பிரதோஷம் வரும் நாட்களில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அரனை மனதில் இருத்தி, பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
பிரதோஷ விரதம் என்றால் என்ன? பிரதோஷ தினத்தன்று அதாவது கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சத்தில் பிரதோஷம் வரும் நாட்களில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அரனை மனதில் இருத்தி, பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள், சிறிதளவு பால், பழம் எதையேனும் அருந்தலாம். மாலை வரை மகேசனை மனதால் வழிபட்டு விட்டு, பிரதோஷ காலம் தொடங்கும் சமயத்தில், அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று சிவ தரிசனம் செய்தல் வேண்டும். அந்த சமயத்தில், ஆலயத்தில் இறைவனுக்கும். நந்திக்கும் நடைபெறும் சிறப்பு பூஜைகளைக் கண்டு, மனதார வணங்க வேண்டும். ஆலயத்தை வலம் வரும் முறை, அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சாதாரண நாட்களைப் போலன்றி பிரதோஷ நாளில், பிராகாரத்தில் பிரதட்சணம் செய்வதற்கு பிரத்யேக முறை ஒன்று உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிலும் பலருக்கு, ஏன் அப்படிச் சுற்றி வர வேண்டும் என்பது புரிந்திருக்காது. பிரதோஷ பிரதட்சணம் எப்படிச் செய்வது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான், அப்படிச் சுற்றுவதன் சூட்சுமம் புரியும். பிரதோஷ கால பிரதட்சணத்துக்கு, புராணம் கூறும் பெயர் தான், சோம சூத்திரப் பிரதட்சணம். அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த தேவர்கள், மத்தாகிய மலையை அசைப்பதற்காக, அதாவது பாற்கடலைக் கடைவதற்காக, முன்னும் பின்னுமாக நகர்ந்து நகர்ந்து மாறி மாறி இயங்கினார்கள். அந்த சமயத்தில்தான், நஞ்சு வெளிப்பட்டது. பயந்தவர்கள் பரமனைத் தேடி ஓடினார்கள். அவர்கள் பரமனைக் கண்ட இடம், மலை.... அதுவும், பனிபடர்ந்த வெள்ளி(ளை) மலை... பரமனின் கழுத்திலோ பாம்பு. அரனை வேண்டி வலம் வர நினைத்த தேவர்கள், அரவத்தையும் மலையையும் பார்த்ததும். குழம்பிப் போனார்கள். பயத்தோடு பதற்றமும் இருந்ததால், எதற்காக வந்தோம் என்பதையும் மறந்து போனார்கள். மலையும் பாம்பும், பாற்கடல் கடையும் ஞாபகத்தை ஏற்படுத்த, வலம் வருவதற்காக முன்னோக்கி நடந்தவர்கள், திரும்ப பின்னோக்கி நகர்ந்தார்கள். வழியில் நந்தி தேவனைக் கண்டார்கள்... ஈசனின் திருச்சடையிலிருந்து வழியும் கங்கை நீர் பட்டதும் மீண்டும் தெளிந்து முன்னோக்கி நடந்தார்கள்... மீண்டும் குழம்பினார்கள்... இப்படி முன்னும் பின்னுமாக ஓடியபடியே தேவர்கள் தேவதேவனை தரிசித்ததை நினைவு படுத்துவதுதான். சோமசூத்திரப் பிரதட்சணம். இறைவனிடமிருந்து உருவாகும் உயிர்கள், எந்த திசையில் சென்றாலும் பின்னர் வந்தடைவது அவனைத் தான் என்பதை உணர்த்துவதுதான், சோமசூத்திர பிரதட்சணத்தின் தத்துவம். ஆலயத்தினுள் நுழைந்ததும், சிவலிங்க தரிசனமும், நந்தி தரிசனமும் செய்து வணங்க வேண்டும். பின்னர், அப்பிரதட்சணமாக சண்டீசர் சந்நதி வரை செல்ல வேண்டும். சண்டீசரை வணங்கிவிட்டு, திரும்பி வந்து முன்பு போல் இறைவனையும் இடபதேவரையும் பணிந்து விட்டு, பிரதட்சணமாக வலம் வரவேண்டும். அப்போது இறைவனின் அபிஷேக நீர் விழும் நிர்மால்யத் தொட்டி (கோமுகம்)யைக் கடந்து செல்லாமல், வந்த வழியிலேயே திரும்பி அப்பிரதட்சணமாக வந்து ஈசனையும் நந்தீசனையும் வணங்க வேண்டும். இப்படி மும்முறை செய்தல் வேண்டும். இப்படி மூன்று முறை வலம் வந்து இறைவனைப் பணிவதால், ஆயிரம் அசுவ மேத யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். (இந்த வகை வலம் வரும் முறை சில சிவாலயங்களில் கடைப்பிடிக்கப் படுவதில்லை. அங்கங்குள்ள சம்பிர தாயப்படி அனுசரிக்கலாம். தவறில்லை.) மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பிரத்யேக பிரதட்சணம்
சோம சூத்திரப் பிரதட்சணம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ விரதம் என்றால் என்ன? - பிரத்யேக பிரதட்சணம், சோம சூத்திரப் பிரதட்சணம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : What is Pradosha fast? - Pratyeka Pratsana, Soma Sutra Pratsana in Tamil [ spirituality ]