சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

What is Siddha Medicine? - Siddha medicine in Tamil

சித்த மருத்துவம் என்றால் என்ன? | What is Siddha Medicine?

ஒருவன் நோயாளியாக வாழ்கிறான். அது அவனுக்கு நரக வாழ்வு. நோய்களை குணமாக்கி நரக வாழ்விலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும்.

சித்த மருத்துவம் என்றால் என்ன?

ஒருவன் நோயாளியாக வாழ்கிறான். அது அவனுக்கு நரக வாழ்வு. நோய்களை குணமாக்கி நரக வாழ்விலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும். அதுதான் ஒவ்வொரு மருத்துவத்தின் பணியாகும். மருத்துவத்தில் பொய், ஏமாற்று சிறிதும் இருக்கக்கூடாது. இயற்கை உண்மை வழியில் செயல்படுகிறது. அதுபோல் தான் இயற்கை மருத்துவம் செயல்படுகிறது. இயற்கையை நம்பி வாழலாம். உலக உயிர்களின் வாழ்க்கையே இயற்கையின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அதுபோல் நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதும் இயற்கை மருத்துவம் தான்.

சர்க்கரை நோயை நோய்களின் தலைவன் என்று சொல்லி இருக்கிறேன். சர்க்கரை நோய் மட்டும் மனிதர்களுக்கு வரக்கூடாது. இது என் அனுபவ கருத்தாகும். இளம் வயதில் வருவது பெருங்கொடுமை. இளம் வயதில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது பெற்றோர்களின் கடமை. இந்த உண்மை எல்லா பெற்றோர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். மற்ற நோயாளிகள் தீய உணவுகளும் அதிகப்படியான உணவுகளும் சூழ்நிலை காரணமாக ஒருவேளை சாப்பிட்டு விட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்காது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் தவறான உணவோ அல்லது அதிகப்படியான உணவோ ஒரு வேளை சாப்பிட்டு விட்டாலும் உடனே சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்து உடல் உறுப்புகள் அனைத்தையும் சோர்வடையச் செய்யும். ஒரு வேளை உணவில் தவறு செய்தாலும் சற்றும் தாமதிக்காமல் உடனே தண்டனை வழங்குவது சர்க்கரை நோய் மட்டும்தான். அதனால் தான் சர்க்கரை நோயை மட்டும் நோய்களின் தலைவன் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

உலக உயிர்கள் அனைத்தும் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. ஆகவே உணவே நம் கடவுள். நல்ல உணவுகள் சாப்பிட்டால் ஆரோக்கியத்தை உருவாக்கும். தீய உணவுகள் நோய்களை உருவாக்கும். சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு மட்டும் சர்க்கரை நோய் வந்தது. இன்றைய நிலை என்னவென்றால் சுமார் 25 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் வந்து கொண்டிருக்கிறது. இவர்களில் சில ஆண்கள் ஆண்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் அடுத்தபடியாக வயது 10 முதல் 20 வயது வரை உள்ள இளம் வயதினருக்கும் சிலருக்கு சர்க்கரை நோய் வந்து கொண்டிருக்கிறது அடுத்து சிறுவர்களுக்கும் சர்க்கரை நோய் வந்து கொண்டிருக்கிறது. இனி மனித இனத்தையே ஆட்டிப்படைக்கப் போகிறது. ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று சொன்னார்கள். சர்க்கரை நோய் பணக்காரர்களுக்கு மட்டும் தான் வந்ததாம். இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் தங்கள் பணபலத்தால் அதிகப்படியான உணவுகளும் தீய உணவுகளும் அளவில்லாமல் சாப்பிட்டதால் கணையம் பழுதடைந்து சர்க்கரை நோய் வந்தது. அதனால் தான் சர்க்கரை நோய் பணக்கார நோய் என்று அன்று பெயர் பெற்றது. ஆனால் இன்றைய வாழ்வில் பணக்காரர்கள் முதல் கூவித்தொழிலாளிகள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் வந்து கொண்டிருக்கிறது. இளம் வயதினர்கள், நடுத்தர வயதினர்கள், சிறுவர்கள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. பணக்கார வியாதி என்று பெயர் பெற்ற சர்க்கரை வியாதி இன்று ஏன்? எல்லா தரப்பு மக்களுக்கும் வருகிறது? இதற்கு பதில் என்னவென்றால் எல்லோருமே இன்று பணக்காரர் ஆகிவிட்டார்கள். இன்று எல்லோரிடமும் பணம் இருப்பதால் தான் உடல் நலம் கெடுக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட்டு நோயாளியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை என்னிடம் கேட்டால் இன்று ஏழைகளே இல்லை என்று சொல்லலாம். ஏழை எளிமையான உணவும் கஞ்சியும் குடிப்பார்கள். கஞ்சி குடிப்பவன் நோய்களே வா என்று கூப்பிட்டாலும் வராதே கஞ்சி குடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் நோயாளிகளாக வாழவில்லை. அன்று பணத்தின் ஆதிக்கம் வரவில்லை. இன்று தான் பணம் என்னும் காகிதப் பிசாசு மனித இனத்தின் மகிழ்ச்சியை பல வகைகளில் அழித்துக் கொண்டிருக்கிறதே. நான் சிறுவனாக இருந்த போது இரண்டு பைசா எனக்கு கிடைக்காது. ஆனால் இன்றைய சிறுவர்கள் பைகளில் பணம் தாராளமாக இருக்கிறது. இந்த பணத்தால் வந்த வினை தானே இன்றைய இத்தனை நோய்களும் குழப்பமான வாழ்வும், மனித இனத்தின் ஒற்றுமையை அழித்ததும் காகிதப் பணம் தான். சர்க்கரை நோயாளிகள் உணவில் ஒரு வேளை தவறு செய்தாலும் உடனே ஈவு இரக்கமின்றி உடனே தண்டனை வழங்கும். ஆகவே சரியான உணவுப் பழக்கத்தில் அவர்களின் ஆயுள் உள்ள வரை வாழ வேண்டும். அதற்கு இதுவரை எந்த மருத்துவமாவது வழி காட்டியிருக்கிறதா? இதுவரை வழிகாட்டவில்லை. இனி மேலும் வழிகாட்டாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவு சர்க்கரையின் அளவை அதிகரிக்க விடாமலும், உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து உடலுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த உணவு முறைகளை தெரிந்து கொண்டால் நீங்கள் சர்க்கரை நோயாளி இல்லை. இன்று மற்ற மருத்துவர்கள் சொல்லும் உணவுப்பழக்கம் என்னவென்றால் காலையில் மூன்று அல்லது நான்கு இட்லிகள் சாப்பிடுங்கள். தேங்காய் சட்னி சேர்க்காதீர்கள். இனிப்பில்லாமல் காபி, டீ சாப்பிடுங்கள். மதிய உணவாக அரிசி சாதம் குறைவாகவும் காய்கள் கீரைகள் அதிகமாகவும் சேர்த்து சாப்பிடுங்கள். இரவு உணவாக கோதுமை அல்லது கேழ்வரகில் தயார் செய்து சாப்பிடுங்கள். மாட்டுப்பால், தயிர், மோர் சாப்பிடலாம் என்கிறார்கள். மாமிசங்கள் சாப்பிட விரும்புபவர்களை குறைவாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இனிப்பு குறைவான பிஸ்கட் வகைகள் ஹார்லிக்ஸ் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சில நாகரீக உணவுகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.

அடுத்த படியாக சொல்வது என்னவென்றால் தேங்காய், பழவகைகள் பூமிக்கு அடியில் விளையும் உணவுகள் இவைகளை உங்கள் ஆயுள் உள்ளவரை அதாவது நீங்கள் வாழும் காலம் வரை உண்ணாதீர்கள் என்று சொல்கிறார்கள். இன்றைய மக்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் சொல்லும் உணவு முறைகளை கடைப்பிடித்து இதுவரை எந்த நோயாளியும் நோய்களிலிருந்து விடுபடவில்லை. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லும் உணவுகளால் உங்கள் உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகுமா? உற்பத்தி ஆகாது. உயிரணுக்கள் மிக மிக குறைவான ஆரோக்கியமில்லாத நீர்ச் சத்துள்ள ரத்தம் தான் உற்பத்தியாகும். இப்படி ரத்தம் சுறுசுறுப்பைத் தராது. நோயில்லா வாழ்வையும் தராது. சமைக்கப்பட்ட சைவ உணவுகளையும், மாட்டுப்பால் பொருள்களையும், மாமிச வகைகளையும், மற்றும் நாகரீக உணவுகளையும் இன்றைய சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வாழ்வதால் அவர்களின் உடலில் நோய்க்கிருமிகள் அதிகம் இருக்கும். பலரின் சிறுநீரும் மலமும் அதிக நாற்றமாக இருக்கும். இவர்கள் இயற்கை மருத்துவம் பார்த்து நல்ல உணவு பழக்கத்துக்கு வந்து விட்டால் மலம் சிறுநீர் நாற்றமெடுக்காது. உணவில் உள்ள இயற்கை மணங்கள் உடலில் இருக்கும். மணமாக இருக்கும் உடலில் நோய்கள் இருக்காது இப்படிப்பட்ட தூய்மையான மணமுள்ள, உடலை இயற்கை மருத்துவத்தால் தான் உருவாக்க முடியும். மணமுள்ள உணவுகள் உடலில் நறுமணத்தையும், தீய உணவுகள் உடலில் துர்நாற்றத்தையும் உருவாக்கும் என்பதை நாம் நமது அறிவால் உணர்ந்து பார்க்க வேண்டும். இனிமேலாவது உணர்ந்து பார்ப்பீர்களா? இயற்கை மருத்துவத்தில் பத்தியம் இல்லை. பூமியில் விளையும் எல்லா உணவுகளையும் எல்லோரும் சாப்பிடலாம். இயற்கை அன்னை வழங்கும் எல்லா வகையான பழங்களையும் தினமும் சாப்பிடலாம். சுத்தமான புதிய ரத்தத்தை உடலில் உருவாக்குவது இயற்கை உணவுகள் மட்டும்தான். அதற்காக மூன்று வேளைகளும் இயற்கை உணவுகள் தான் உண்ண வேண்டும். என்று சொல்வோம் என்று யாரும் மனபயம் கொள்ள வேண்டாம். ஒருவேளை இயற்கை உணவு. ஒரு வேளை அரிசி உணவு. ஒரு வேளை தானிய உணவு. இப்படி சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இரு வேளை இயற்கை உணவுகள் சாப்பிடலாம். இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட்டால்தான் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும். இதற்கு உதாரணம் ஆதிமனிதர்கள். நலம் தரும் உணவுகளும் அளவான உணவும் தான் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாது. இயற்கை உணவு சாப்பிடும் போது சமையல் உணவு சிறு சமையல் உணவு துளியும் சாப்பிடக்கூடாது. ஆனால் சமையல் உணவை சாப்பிடும்போது இயற்கை உணவுகளையும் சேர்த்து கட்டாயம் சாப்பிட வேண்டும். பலகீனமான உணவு. சமையல் உணவின் பலனகீனத்தை இயற்கை உணவுகள் சரி செய்துவிடும். இயற்கை மருத்துவத்திற்கு வரும்முன் நீங்கள் சமைத்த உணவுகளை மட்டும்தான் சாப்பிட்டு வாழ்ந்திருப்பீர்கள். அதனால் உடல் பலகீனமாகவே இருக்கும். இதனால் சிலருக்கு பசியை தாங்க முடியாது. சிலருக்கு உணவு சற்று அதிகமாகவே தேவைப்படும். இயற்கை மருத்துவம் பார்த்தபின் பல மூலிகைகளின் சத்துக்களும் இயற்கை உணவிலுள்ள உயர்ச்சத்துக்களும் உடலில் தேவையான அளவு சேர்ந்து விடும். இதனால் அதிகப் பசி வராது பசியை தாங்கும் சக்தியும் உடலுக்கு, வந்துவிடும். சற்று குறைவான உணவே போதும் என்று உங்கள் உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளும். இடைத்தீனியாக எதையும் கேட்காது. ஆரோக்கியமான உணவை நாம் அளவுடன் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு சாப்பிட்ட பின்பும் அதிகரிக்காமல் சரியான அளவில் இருக்கும். இயற்கை மருத்துவத்திற்கு வந்தபின் முன்பு இருந்த உடல் பலகீனம் போய் புதிய சக்தி உடலுக்கு எப்படி வருகிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : சித்த மருத்துவம் என்றால் என்ன? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : What is Siddha Medicine? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்