ஆன்மீகம் என்றால் என்ன?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What is spirituality? - Tips in Tamil

ஆன்மீகம் என்றால் என்ன? | What is spirituality?

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும்,

ஆன்மீகம் என்றால் என்ன?

 

💐 ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும்,

 

💐 உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.

 

💐 தன்னையறியத் தனக்கொரு கேடில்லை

தன்னையறியாமல்தானே கெடுகின்றான்’ என்றும்,

 

’தன்னை அறிவதே அறிவாம் அஃதன்றிப்

பின்னை யறிவது பேயறிவாகுமே ! என்றும் திருமூலர் கூறுவார்.

 

🙏 உடம்புக்கு ’மெய்’ என்று பெயர். ஆனால் அந்த உடல் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் பிணி, மூப்பு, சாவை அடையும் போது அது மறைந்து பொய்யாகி விடுகிறது. இப்படிப் பொய்யாகிவிடும் உடம்புக்கு ஏன் மெய் யென்று பெயர் வைத்தனர் ?

 

🙏 உடம்புக்குள்ளே என்றும் அழிவற்றதும், ஆண்டவனுக்கு ஏகதேசமானதுமான ஆன்மா இருந்து கொண்டு, கருவி கரணங்களை இயக்குகின்றது.

 

💐 ஆன்மாவைப் பற்றிக் கீதை கூறுகிறது.

 

💐ஆயுதங்கள் ஆன்மாவை வெட்டமாட்டா. தீ அதனை எரிக்காது. நீர் அதனை நனைக்காது. காற்றும் அதனை உலர்த்தாது என்று கீதை குறிப்பிடும். இத்தகைய ஆன்மா ஏன் இந்த உடம்புக்குள்ளே வந்து அகப்பட்டுக்கொண்டு சுகம், துக்கம், பசி, தாகம், நித்திரை, பிணி, மூப்பு, சாவு இவைகளை அடைந்து செத்துச் செத்து மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறது என்பதை அறிவதே ஆன்ம ஞானம்.

 

🙏 ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தால் தான் ஆண்டவனின் உண்மை நிலையை அறியலாம்.

 

🙏 ஆண்டவனும், ஆன்மாவும் ஏகதேசம்.

 

💐 ஆன்மாவை வினையில் இருந்தும், அழிவிலிருந்தும் மீட்பது எப்படி என்பதை அறிவதே ஆன்மீகம். பிரம்மத்தை அறிவது பிரம்ம ஞானம்.

 

💐 ஆன்மீகம் = ஆன்மாவை மீட்பது. ஆன்மா உடம்பு அழிந்துவிட தனக்கு வேறொரு உடம்பு தேவைப்படுகிறது. அதனால் அதற்கு ஒரு புது உடம்பு தேவைப்படுகிறது. புது உடம்பு கிடைக்கவே, அதில் குடிபுகுந்து வாழ்ந்து அந்த உடம்பையும் நோய், மூப்பால் இழந்து விடுகிறது. இப்படி பல உடம்புகளில் புகுந்து ஆன்மா உலகவாழ்வைத் தொடராமல் ஆன்மா தான்தானாக இருந்து கொள்ள அறிவதுவே ஆன்மீகம்.🙏


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ஆன்மீகம் என்றால் என்ன? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What is spirituality? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்