தாரகமந்திரம் என்றால் என்ன

குறிப்புகள்

[ இராமாயணம்: குறிப்புகள் ]

What is Tara Mantra? - Tips in Tamil

தாரகமந்திரம் என்றால் என்ன | What is Tara Mantra?

ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை பயிற்சி செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி குறைந்து விடும். நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

தாரகமந்திரம் என்றால் என்ன?

 

ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை பயிற்சி செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி குறைந்து விடும்.

 

நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

 

தர்மம் செய்ய நினைத்தால் பலன்களை எதிர்பார்த்து செய்யக் கூடாது. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது நம்

வேலையல்ல. அது ஈஸ்வரன் வேலை என்கிறது உபநிஷதம்.

 

இயற்கையில் மாறுதலுக்கு உட்படாதது என்று எதுவுமே இல்லை. சகலமும் மாறிக்கொண்டே தான்

இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மலையும், சமுத்திரமும் கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.

 

ராம நாமத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுவார்கள். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்கி மேன்மைப்படுத்துவது' என்று பொருள். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை விடாது ஜெபியுங்கள்.

- மஹா பெரியவா

 

ராம ராம ராம ராம ராம...🌹

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இராமாயணம்: குறிப்புகள் : தாரகமந்திரம் என்றால் என்ன - குறிப்புகள் [ ] | Ramayana: Notes : What is Tara Mantra? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்