தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன

குறிப்புகள்

[ தன்னம்பிக்கை ]

What is the definition of a failure - Notes in Tamil



எழுது: சாமி | தேதி : 10-08-2024 08:36 pm
தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன | What is the definition of a failure

வாழ்க்கையில் அனைவரும் அனைவரது செயல்களும் வெற்றியடையும் சாத்தியம் இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம். மனித வாழ்க்கை என்பது அவருக்கு ஏற்ற சூழலோடு (இடம் காலம்) அவரவரின் உறவு சார்ந்து அமைகிறது. ஒவ்வொருவருடைய குணங்களை மரபு சார்ந்த பண்புகளும் வளர்ப்பு முறைகளும் நிர்ணயிக்கிறது.

தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன?

 

வாழ்க்கையில் அனைவரும் அனைவரது செயல்களும் வெற்றியடையும் சாத்தியம் இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

 

மனித வாழ்க்கை என்பது அவருக்கு ஏற்ற சூழலோடு (இடம் காலம்) அவரவரின் உறவு சார்ந்து அமைகிறது.

 

ஒவ்வொருவருடைய குணங்களை மரபு சார்ந்த பண்புகளும் வளர்ப்பு முறைகளும் நிர்ணயிக்கிறது.

 

அவரவருடைய வாழ்க்கையை அவர் எதிர்கொண்டு கையாள்வதில் செயல்பாடுகளில் வெற்றியோ தோல்வியோ நிகழ்கிறது.

 

வெற்றியை கொண்டாடும் நாம் தோல்வியடைந்தால் துவண்டு விடுகிறோம்.

 

வெற்றியை போல தோல்வியும் ஒரு அனுபவம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

முயற்சியில் போதாமை சரியான சாதகமான சூழல் அமையாமை போன்ற காரணங்களால் தோல்வி ஏற்பட்டு இருக்கலாம்.

 

எனவே தோல்வியை ஒரு அவமானதாகவோ வெறுப்பானதாகவோ நினைக்க தேவையில்லை. தோல்வி நிரந்தரமான தில்லை. தற்காலிகமானது.

 

வென்றவனை விட தோற்றவனுக்கு பல அனுபவங்கள் பல கருத்துகள் கிடைக்கும்.

 

அதனால் முன்பை விட சுறுசுறுப்புடன் உற்சாகத்துடன் இயங்கி தொடர் வெற்றிகள் கிட்டும் வாய்ப்புகள் உண்டாகும்.

 

எனவே மனித வாழ்க்கையின் வளர்ச்சிகள் அனைத்துமே தோல்வியில் தொடங்கியதே.

 

பிறகு தொடர் முயற்சிகள் பயிற்சிகளால் தான் இன்றைய சாதனைகள் வளர்ச்சிகள் சாத்தியமானது.

 

மனித வாழ்க்கை வெற்றி தோல்வி லாப நட்டம் ஏற்ற தாழ்வுகள் பிறப்பு இறப்புகள் சிரிப்பு அழுகை மகிழ்ச்சி சோகம் போன்ற

 

முரண்பாடுகளோடு கலந்து உள்ளது. எனவே இந்த புரிதலோடு வாழ்வோம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

தன்னம்பிக்கை : தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன - குறிப்புகள் [ ] | தன்னம்பிக்கை : What is the definition of a failure - Notes in Tamil [ ]



எழுது: சாமி | தேதி : 08-10-2024 08:36 pm

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்