லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு.
லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?
லட்சுமி வீட்டிலேயே
இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு.
இந்த பொண்ணு
லட்சுமிகரமாக இருக்கா! இந்த வீடு மங்களகரமாக இருக்கு! என்றெல்லாம் சொல்வார்கள்.
மாவிலைத் தோரணம், திருவிளக்கு, மாக்கோலம்,துளசிமாடம், மாட்டுக்கொட்டில்
போன்றவற்றில் எல்லாம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
பணம் இருந்தால் மட்டும்
லட்சுமிகரம் வந்து விடாது. சில பணக்கார வீடுகள் தூங்கி வழிவது போல் இருப்பதைப்
பார்த்திருப்பீர்கள்.
வீட்டைச் சுத்தமாக
வைத்திருப்பதுடன், எந்நேரமும் பக்திமணம் கமழ வைத்திருப்பதே லட்சுமிகரம்
எல்லா தெய்வங்களுக்கும்
தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும்
சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும்
கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
எனது இறைவா! மீண்டும்
பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம்
படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும்
நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால்
அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
ஆனால், தேங்காயை
சாப்பிட்டுவிட்டு ஓட்டைப்போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான்
தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது
கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத
இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
Interesting: information : லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன? - தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் ? [ ] | General Information: Introduction : What is the meaning of Lakshmikaram? - Why create bananas for gods? in Tamil [ ]