எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆகாயத்தை தான் நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
*பிரபஞ்சம்
என்றால் என்ன???*
எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆகாயத்தை தான் நாம்
பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
கோடான கோடி எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் கோள்கள் எல்லாம்
சேர்ந்தது தான் இந்தப் பிரபஞ்சம் ஆகும். இதை தான் பிரபஞ்ச சக்தி என்று கூறலாம்.(Cosmic
energy).
*இந்த பிரபஞ்ச சக்தி
ஆனது முற்றிலும் இலவசமாக மனிதர்களுக்கு தரப்படுவது.*
இந்த சக்தியைப் பெறுவதற்கு நாம செய்ய வேண்டியது ஒன்று தான்
*பிரபஞ்சத்தை நம்புவது*
உங்களுடைய ஆழ்மனது தான் உங்களுடைய, எண்ணங்கள், நடவடிக்கைகள், செயல்கள்.
உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம்
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் அதை நான் நம்புவது இல்லை.. ஒரு சில கால கட்டத்தில்
உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உதயம் ஆகாது.
பின்பு நேர்மறை எண்ணங்களே உங்களை வழிநடத்தும்.
*நன்றாக ஒன்றை புரிந்து
கொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கு நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களுக்கும் வித்தியாசம்
தெரியாது*
*நீங்கள் என்ன
நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா, அது உங்களை வந்து அடையும், அது எதுவாக இருந்தாலும் சரி*
*மக்களே இலவசமாக
கிடைக்கும் இந்த அற்புதமான சக்தியை பரிபூரணமாக நம்பி உங்கள் எண்ணங்களை
செம்மைப்படுத்தி உங்கள் நேர்மறையான ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். பிரபஞ்சம்
கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்றன, அதைப் பெறுவதற்கு நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்.
*பிரபஞ்சத்திற்கு நன்றி !!!*
🌊
உங்களுடைய மனதை கவலைப் படுத்தி மனதை பல நிலைகளில் குழப்பும்
பிரச்சனைகள் வெகுவிரைவில் தீர்வு கிடைக்கும் என்றே ஆழமாக ஆழ்மனதில் சொல்லிகொண்டே
உங்களுடைய வேலையை தொடர்ந்துப் பாருங்கள்.
🔥
நீங்கள் நினைத்தப்படியே வெகுவிரைவில் அதிசயம் நடக்கப்போகிறது,
அது மட்டும் அல்லாமல் மாறப்போகும், நீங்க நினைத்தது
நடக்கப்போகும் அதிசயங்களுக்கு நன்றி, நன்றி என்று ஆழமாக ஆழ்மனதில் சொல்லி கொண்டே இருங்கள் அதுபோதும்.
அது எப்படி சரி ஆகும், எப்போது
சரி ஆகும் இது போன்ற கேள்விகள் எல்லாம் தூக்கி எறியுங்கள். அந்த வழிகளை
பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம். அது எப்படி முடியும் என்று கேட்குகீர்களா?
நமக்கு அதைப் பற்றிய ஒரு சில வழிகள் தான் தெரிந்து
இருக்கும், ஆனால் இந்த
பிரபஞ்சத்திற்கோ பல ஆயிரம் வழிகள் அறிந்து இருக்கும். ஆதலால் அதை பற்றி கவலை
படாமல் நீங்கள் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்தப் பிரபஞ்சம் எப்படியாவது
முன்னேற்றி செல்லும். உங்களுக்கான பிரச்சனைகளை பிரபஞ்சம் எப்படியும் சரி செய்து
விடும். இன்னும் இதை ஒரு நிகழ்வின் மூலமாய் சொன்னால் எளிதில் புரிந்து விடும்.
அதாவது ரயில் பயணங்களில் நாம் அனைவரும் முந்திக்கொண்டு இருக்கைகளை இடம் பிடிப்போம்.
இருக்கைகள் இல்லாத பொழுது மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
பெரும்பாலும் குறைவு தான். அதில் தன் இருக்கையை மற்றவருக்கு இடம் கொடுத்து நின்று
பயணம் செய்யும் மனிதர்களை பிரபஞ்சமே அடுத்து அவர்களை குளிர் சாதனப் பெட்டியில்
இருக்க வைத்து பயணம் செய்ய வைக்கும். நம்பக் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும். ஆனால்
அது உண்மை. இன்று வெற்றி காணும் களங்களில் இருக்கும் நபர்களை ஆராய்ந்தால் தெரியும்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்களை ஆராய்ந்தால்
விட்டுக் கொடுக்க மனம் இருப்பது இல்லை என்பது தெரிய வரும். இதில் அழுத்தமாக பதிவு
செய்யப்படுவது என்னவெனில், உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு
கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும் என்பதே.
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
உங்களுக்கு எதிராக எத்தனை ஆயிரம் பேர் எல்லாத் திசைகளிலும்
எதிர்த்தாலும், செயல்பட்டாலும் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவனிக்காமல் உங்கள் இலக்கை
நோக்கியே உங்கள் பயணம் இருக்கட்டும்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது மனதைப் பதட்டமில்லாமல்
அமைதியாய் இருக்க கற்று கொள்ள வேண்டும். இல்லையேல் அதை நோக்கிய பயிற்சிகள் செய்ய
வேண்டும். பயந்த மனம் தடுமாறவும், ஏன் தடம் மாறவும் செய்யும் என்பது அனைவரும்
அறிந்ததே. இதையும் கதைகள் மூலம் சொன்னால் எளிதில் விளங்கும். எலிக் கதைகள்
அனைவருக்கும் தெரிந்து இருக்கும். கூண்டில் அடைபட்ட எலி அங்குமிங்கும் ஓடத் தான்
செய்யும். அது எப்பேற்பட்ட மரக்கதவுகளையும் ஓட்டை போட்டு விடும் திறமை உண்டு
எலிகளுக்கு. ஆனால் இந்த சின்னக் மரக் கூண்டுக்குள் அடைபட்டு ஒன்னும் செய்யாமல்
அங்குமாய் இங்குமாய் அலையக் காரணமே அதன் பதற்றக் காரணம் தான். உலகை வெல்ல நினைத்த
நெப்போலியனே சிறை வாசத்தில் இருந்த பொழுது தப்பிக்க கொடுக்கும் துடுப்புச் சீட்டை
கவனிக்காமல் விட்டதும் இந்த பதற்ற மன நிலை தான் காரணம்.
நான் வெற்றியைக் குறித்து மிகவும் நம்பிக்கையோடு
இருக்கிறேன் என்றும் அணைக்கு வெகு விரைவில் அதிசயம் நடக்கும், மற்றும் வர இருக்கும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி!
பிரபஞ்சத்திற்கு நன்றி! என்னை சுற்றியுள்ள சுற்றாத்தாருக்கு
நன்றி! என்று மட்டும் அடிக்கடி ஆழமாக மனதில் சொல்லி கொண்டு இருந்தாலே போதுமானது.
அதை நிசத்தில் காண்கின்ற நேரமும் விரைவில் வந்துவிடும். அந்த எண்ணோட்டத்தை நிறுத்தாமல்
மனதில் எண்ணிக்கொண்டும், சொல்லி கொண்டும் இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி
வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
*விதைத்தவன் தூங்கி விடுவான் ...*
*விதை தூங்காது ...*
*எண்ணியவன் தூங்கி விடுவான் ...*
*எண்ணம் தூங்காது ...*
*எண்ணம்போல் வாழ்க்கை*
*எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்*
ஒரு குழந்தை தன் பெற்றோர் இடம் அடம்பிடித்து அது
விரும்பியதை பெற்றுக் கொண்டுவிடும் .அதற்கு சந்தேகப்பட தெரியாது கேட்டால்
எப்படியும் கிடைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை மட்டும் அந்த குழந்தையிடம்
இருக்கும்*.👶
*அதுபோல நாமும் நம்மை
படைத்த பிரபஞ்சத்திடம் துளிஅளவு கூட சந்தேகம் இல்லாமல் நம்பிக்கையுடன் கேட்டால்
நிச்சயமாக 100% கை மேல்
பலன் கிடைக்கும் கேட்டதை எல்லாம் கொடுக்க பிரபஞ்சம் தயாராக உள்ளது நீங்கள் பெற்றுக்கொள்ள
தயாராக இருங்கள்*.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : பிரபஞ்சம் என்றால் என்ன? - ஊக்கம் [ motivation ] | Encouragement : What is the Universe? - Encouragement in Tamil [ முயற்சி ]