ஞானம்(Wisdom) என்றால் என்ன? ஞானத்தை எப்படி அறிவது?

குறிப்புகள்

[ ஞானம் ]

What is wisdom? How to know wisdom? - Tips in Tamil

ஞானம்(Wisdom) என்றால் என்ன? ஞானத்தை எப்படி அறிவது? | What is wisdom? How to know wisdom?

ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே.

ஞானம்(Wisdom) என்றால் என்ன? ஞானத்தை எப்படி அறிவது?

ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே.

ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை. ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்து கொள்வதற்கு.

ஞானம் என்பது ... நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது …. நம் அறிவு ... தனக்கு எங்கே வேலை இருக்கிறது... தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்.

நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக, நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'.

நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம். மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான் நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம். நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’.

மனதில் எண்ணங்கள் ...  அதன் போக்கில் தான் வரும்... அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’.

"மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும் ... கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது" என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால் … நம் மனது கேட்குமா?

நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை என்று அறிவுபூர்வமாக புரிந்து  கொள்வது தான் ‘ஞானம்’.

புறத்தில் நடப்பவற்றை  எல்லாம்  பிரதிபலிப்பது நம் மனதின்  இயற்கை. நம் அறிவு முயற்சி செய்து  தான்  விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒவ்வொருகணமும்  போராடுகிறது.

இந்த முடிவில்லா போராட்டம், ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்து கொள்ளும் பொழுது  தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம்.

 

இதுவே அகசரணாகதி. ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' (Intellectual Understanding) மட்டுமே..


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : ஞானம்(Wisdom) என்றால் என்ன? ஞானத்தை எப்படி அறிவது? - குறிப்புகள் [ ] | Wisdom : What is wisdom? How to know wisdom? - Tips in Tamil [ ]