பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது, பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது, உணவுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ பகிரும் பழக்கம், பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, வயதிற்கேற்ப பெற்றோருக்கு உதவி செய்வது, தவறு செய்தால் யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்பது, மற்றவர் பொருளுக்கு ஆசைப் படாதது, வேண்டிய இடத்தில் தயவுசெய்து, மன்னியுங்கள், நன்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது,
வாழ்க்கையில் எந்த மாதிரியான பழக்கங்களை குழந்தைகளுக்குக்
கற்றுத்தர வேண்டும்?
பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது,
பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது,
உணவுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ பகிரும் பழக்கம், பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது,
வயதிற்கேற்ப பெற்றோருக்கு உதவி செய்வது,
தவறு செய்தால் யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்பது,
மற்றவர் பொருளுக்கு ஆசைப் படாதது,
வேண்டிய இடத்தில் தயவுசெய்து, மன்னியுங்கள், நன்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது,
விருந்தினர்களோ மற்றவர்களோ பரிசுப் பொருட்கள்
அளித்தால் பெற்றோரின் அனுமதிக்குப் பிறகே நன்றி கூறிப் பெற்றுக் கொள்வது,
பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது,
வெளியிடங்களுக்குச் செல்கையில் கூட்ட நெரிசல்களில்
பெரியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு செல்வது,
ஆகிய பழக்கங்களை குழந்தைக்குப் புரியும் வயதிலேயே
புரிந்து கொள்கிறார் போலப் பழக்கினால் பெற்றோருக்கு நல்லது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : வாழ்க்கையில் எந்த மாதிரியான பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் - குறிப்புகள் [ ] | self confidence : What kind of habits should children be taught in life? - Notes in Tamil [ ]