மொழியென்ற ஒன்று எதற்கு தேவைப்படுகிறது ? ஒன்றை நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த தானே ..
இறைவனுக்கு என்ன மொழி
தெரியும்?
மொழியென்ற ஒன்று எதற்கு தேவைப்படுகிறது ?
ஒன்றை நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த
தானே .. அப்படி வெளிப்படுத்தும் முன்னே ..
எதை வெளிப்படுத்த போகிறீர்களா அது தொடர்பான
எண்ணம்,
அதனோடு தொடர்புடைய உணர்வு உங்களுள் தோன்றிய
பின்,
உங்களுக்கு தெரிந்த மொழியில்,
அது சம்பந்தமான வார்த்தைகள்
அது விளக்கும் பொருள் ..
போன்றவற்றை கோர்த்து சொற்றொடர்
வெளிப்படுகிறது ..
அந்த சொற்தொடர் வெளிப்படும் முன்னமே ..
அது தொடர்புடைய எண்ண அலை உங்களில் இருந்து
வெளிப்பட்டு விடும் ..
அது தொடர்புடைய முகபாவனைகள் கூட
வெளிப்பட்டு விடும் ..
அதற்கு அப்புறமே சொற்கள் ..
இறை தொடர்பில் தான் அனைத்துமே இருக்கின்றது
..
அதில் ஓர் அணு ஜீவன் முதல் அனைத்துமே ..
உங்கள் உணர்வு எண்ணத்தின் வெளிப்பாடே
இறைமொழியாகும் ..
இன்னும் ஆழ்ந்து போனோம் என்றால் ..
இந்த எண்ணமும் உணர்வும் எந்த மௌனத்தின்
சலனத்தில் இருந்து வெளிப்படுகிறது அதுவே இறைமொழி ...!!!
மொத்தத்தில் இறைவனுடைய மொழியே மௌனம் தான்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : இறைவனுக்கு என்ன மொழி தெரியும்? - மொழியென்ற ஒன்று எதற்கு தேவைப்படுகிறது ? [ ஆன்மீகம் ] | Spiritual Notes : What language does God know? - What is the need for a language? in Tamil [ spirituality ]