'என்னை யாராவது பாராட்டினால் அந்தப் பாராட்டை நினைத்துக் கொண்டே அடுத்த பத்தாண்டுகள் மிகவும் உற்சாகமாக வாழ்வேன்'
நாம் வெற்றி அடைய முதலில் என்ன செய்ய வேண்டும்?
'என்னை யாராவது பாராட்டினால் அந்தப் பாராட்டை நினைத்துக்
கொண்டே அடுத்த பத்தாண்டுகள் மிகவும் உற்சாகமாக வாழ்வேன்' என்றார் பெர்னாட்ஷா,
காரணம், நம்மைச் சுற்றி உள்ளவர்களுள் பெரும்பாலோர் பொறாமைக் குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்கள் மனம் புண்படும்படி விமர்சித்து வாழ்பவர்களாகவுமே
உள்ளனர். அபிப்பிராயம் கேட்காத போதிலும், எதிர்மறையான மனோபாவத்துடனேயே
அபிப்பிராயம் சொல்லி,
தங்கள் பொறாமையை வெளிப்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட தீய சக்திகளும், தீய எண்ணம் கொண்டவர்களும் நம்மைச் சுற்றி இருக்கும்போது, நமது மனதைக் காப்பாற்றிக் கொள்வதுதான் முதல் வேலை! எப்போதும்
ஆக்க பூர்வமான மனோபாவத்துடன் வாழ்பவராக நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 93 வயது வரை வாழ்ந்தவர், பெர்னாட்ஷா.
'எழுத்தாளராக வாழ்வில் உயர்வது' என்ற திட்டவட்டமான குறிக்கோளைத் தெளிவாக நிர்ணயித்துக் கொண்டவர்.
இதனால்,
தான் பார்த்த வேலையையும் பெர்னாட்ஷா விட்டுவிட்டார். அடுத்த
ஒன்பதாண்டுகளும் அவர் பட்ட கஷ்டங்கள் பல. ஆனால், அவரைக் காப்பாற்றியது தெளிவான குறிக்கோளும், ஆக்க பூர்வமான மனோபாவமும் தான்.
எனவே, எப்போதும் ஆக்கபூர்வமான
மனதுடனேயே ஒவ்வொரு நொடியும் வாழுங்கள். ஆக்கபூர்வமான மனதுடன் வாழும்போது தான், நாம் அடைய விரும்பும் இலட்சியத்தைச் செய்து, முடிக்க வேண்டிய அரிய பணிகளை நம்பிக்கையுடனும், அறிவுடனும் சிந்தித்து, விடாமுயற்சியுடனும் செய்து முடிக்கிறோம். இடையில் நமது முயற்சி
உரிய பலன் தரவில்லை என்றாலும் தெளிவான குறிக்கோளாலும் ஆக்கபூர்வமான மனோபாவத்தாலும்
மீண்டும் உற்சாகத்துடன் சிந்தித்து செயல்படுகிறோம். வெற்றி பெறுகிறோம்.
நாம் செயல்படும்போது, மற்றவர்கள் நமது ஊக்கம் குறையும் விதத்தில் பேசுவார்கள். நாம்
ஆக்கபூர்வமான மனோபாவத்துடன் வாழ்வதால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல்
எதிரில் எதிர்க்கொள்ளும் நிஜமான தடைகளையும் நமது அறிவாலும், விடாமுயற்சியாலும் நிச்சயம்
வெல்ல முடியும். மேலும் நாம் எடுக்கும் 1௦ முயற்சிகளில் 9 தோல்வி அடைகிறது. என்ன
செய்வது என்று ஆராய்ந்தார் பெர்னாட்ஷா. சரி 1௦ முயற்ச்சிகளும் வெற்றி அடைய நமக்கு
மிகப் பெரிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். என்னவென்று கேட்க ஆர்வம் உள்ளதா? அவர்
சொன்னதை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் செய்து பாருங்கள். நீங்கள் நினைக்கும்
காரியங்கள் அனைத்தும் வெற்றி தான். அவர் சொல்லும் மந்திரம் என்னவெனில் உங்கள்
முயற்சிகளின் எண்ணிக்கையை உயர்த்துங்கள். 1௦ திட்டங்கள் வெற்றி அடைய முயற்சிகளின்
எண்ணிக்கையை 1௦௦ ஆக உயர்த்துங்கள். அப்புறம் என்ன 1௦ க்கு ஒன்னு ஜெயிக்கும் போது 1௦௦
க்கு 1௦ ஜெயிக்காமல் போகி விடுமா என்ன? சின்ன விசயம் தான். ஆனால் அனைத்து
விசயங்களையும் வெற்றி பெறச் செய்கிறது.
பேரார்வத்துடன் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவராக நம்மை உயர்த்துவது, உருவாக்குவது ஆக்கபூர்வமான மனோபாவம்தான். அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்
காது கேட்கும் கருவியைக் கண்டுபிடிக்கத்தான் முயற்சி செய்தார். ஆக்க பூர்வமான மனோபாவத்துடன்
முயற்சி செய்ததால்,
காது கேட்கும் கருவிக்குப் பதிலாக தொலைபேசியைக் கண்டுபிடித்து
விட்டார்.
நாவலாசிரியராக உயர நினைத்தார் பெர்னாட்ஷா. நாவல்கள் விற்பனையாகாத
போதிலும் அவரது ஆக்கபூர்வமான மனோபாவம் தான் தொடர்ந்து அவரை எழுத வைத்து, உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியராக உயர்த்தியது.
உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க நிறைய குறைகளும், தடைகளும் இருந்தால் சோர்ந்து போய் விடுவீர்கள். அதற்குப் பதிலாக
தெளிவான குறிக்கோளைத் தீர்மானித்துக் கொண்டு அதை அடைய ஆக்கபூர்வமான மனோபாவத்துடன் சிந்தியுங்கள்.
செயல்படுங்கள். நிச்சயம் மாறுதலான புதிய வெற்றிகள் கூடக் கிடைக்கும்.
'விடாமுயற்சியின் இடத்தை எதனாலும் நிரப்ப முடியாது' என்பார் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த கால்வின் கூலிஜ். மன உறுதியும்
தொடர்ந்து முயற்சி செய்யும் குணமும் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தது. 'தொடர்ந்து முயற்சி செய்' என்னும் தாரக மந்திரம்
மட்டுமே மனித இனத்தின் பிரச்னையைத் தீர்க்கும் என்றார். இதற்குத் தேவை ஒவ்வொருவருக்கும்
ஆக்கபூர்வமான மனோபாவம்தான். இந்த குணம் தான் குறைகளையும் நமது மனத் தடைகளையும் தாண்டி ஜெயிக்க வைக்கும். நம்மீது பிறர் கொள்ளும்
தீய எண்ணங்களையும்,
பொறாமையையும் நமக்குள் ஒரு தடையாக ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.
எப்போதும் அறிவுடன் வெளிச்சம் உள்ள பகுதியையே பார்க்க வைக்கும். தகுதியையும் தரத்தையும்
உயர்த்திக் கொள்ள வைக்கும்.
எல்லாவற்றையும் விட கருணையுடனும், பெருந்தன்மையுடனும் பிறரிடம் பழக நம்மைத் தயார்படுத்தும். தன்
ஊழியர்களிடம் நியாயத்துடனும், பெருந்தன்மையுடனும்
நடந்து கொள்ள மனதை உயர்த்தும். காலையில் இறைவனை வணங்குவது ஆக்கபூர்வமான மனோபாவத்துடன்
அந்த நாளைச் செயல் நிறைந்த நாளாக மாற்றத்தான்!
எல்லாத் தடைகளையும் அகற்ற ஆக்கபூர்வமான மனோபாவத்துடன் வாழ்வோம்.
அதுவே,
நமது அனைத்துக் காரியங்களையும் ஒருமுகச் சிந்தனையுடன் சிந்தித்து
செய்து முடிக்க வழி அமைத்துத் தரும். எண்ணியதை எண்ணியபடியே அடையவும் முடியும்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : நாம் வெற்றி அடைய முதலில் என்ன செய்ய வேண்டும்? - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : What must we do first to succeed? - Encouragement in Tamil [ Encouragement ]