நாம் காலையில் கண் விழிக்கக்கூடிய நாளின் ஆரம்பம் நேர்மறையாக இருந்தால், அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மிக சுகமாகவும், நேர்மறையான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
வாழ்நாள் முழுதும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?.
நாம் காலையில் கண் விழிக்கக்கூடிய நாளின் ஆரம்பம்
நேர்மறையாக இருந்தால், அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மிக சுகமாகவும், நேர்மறையான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
அதுவே நாளின் ஆரம்பம் எதிர்மறையாக தொடங்கினால், மனதில் மிகவும் மோசமானதாக உணர்வீர்கள். உங்கள்
செயலில் சில தடுமாற்றங்களை ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத
விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்காதீர்கள்
ஒருவர் காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் தங்களை
தானே பார்த்துக் கொள்ளக் கூடாது. ஆனால் நம்மில் பெரும்பாலும், காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் சென்று தங்களை
தாங்களே பார்த்துக் கொள்வது தான் நடக்கிறது. ஒருவர் காலையில் எழுந்தவுடன் முதல் விஷயமாக, உங்களின் குலதெய்வத்தைத் தரிசனம் செய்வது மிக
சிறப்பான பலனை தரும். இதை தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ளவும்.
காலையில் உங்கள் நிழலை பார்க்கக் கூடாது
ஜோதிடத்தில் காலையில் நிழலை பார்ப்பது அசுபமாக
கருதப்படுகிறது. ஒருவர் காலையில் எழுந்ததும் தங்களின் நிழலையோ அல்லது பிறரின் நிழலையோ
பார்க்க கூடாது இதனால் உங்களின் வேலைகள் பாதிக்கப்படும் அல்லது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அழுக்கு பாத்திரம்
இரவில் எவ்வளவு நேரம் ஆனாலும், நாம் சமைத்து வைத்த பாத்திரங்களை அனைத்தையும்
கழுவி வைத்து விட வேண்டும். காலையில் எழுந்ததும் கழுவாத பாத்திரங்களை கண்டால் அது துரதிஷ்டமாக
கருதப்படுகிறது. மேலும் அறிவியல் ரீதியாக அதில் அதிக அளவில் கிருமிகள் பெருகி இருக்கும்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொருளாதார சிக்கலுக்கும் வழிவகுக்கும்.
உடைந்த சிலைகளை பார்க்கக் கூடாது
காலையில் எழுந்தவுடன் உடைந்த சிலைகளை காண்பது
வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாஸ்து சாஸ்திரப்படி உடைந்த சிலைகள், புகைப்படங்களை பார்க்க கூடாது. அதனால் உங்கள்
கண் முன்னிலையில் இருந்து அதை அகற்றுங்கள்.
நீங்கள் காலையில் எழுந்ததும் உங்களின் உள்ளங்கையை
தேய்த்து உங்களின் கண்களை ஒற்றிக் கொள்ளவும். மேலும் மெதுவாக கண் திறந்து உங்களின்
உள்ளங்கைகளை பார்க்கவும். உங்களின் உள்ளங்கைகள் மகாலட்சுமி குடி கொண்டிருக்கிறாள் என
கருதப்படுகிறது. எனவே காலையில் எழுந்ததும் உங்களின் உள்ளங்கை பார்ப்பது மிகவும் நற்பலனை
தரும்.
தெரிந்து கொள்ளுங்கள்......
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
பொது தகவல்கள்: அறிமுகம் : வாழ்நாள் முழுதும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?. - Don't make this mistake when you wake up in the morning..., காலையில் எழுந்தவுடன் இந்த தவற்றை செய்யாதீர்கள்......, காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை [ ] | General Information: Introduction : What should be done to avoid problems throughout life? - Things to do when you wake up in the morning in Tamil [ ]