
உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி ... என அனைத்தையும் வழங்குபவள் அவள்.
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்?

🌹 🌿 உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி ... என அனைத்தையும்
வழங்குபவள் அவள்.
🌹 🌿 அதாவது, பாற்கடலில் பிறந்த
திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு
நிலைகளிலும் அருளும் அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிட்டும்.
🌹 🌿 எனவே வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை
வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
🌹 🌿 லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள்
வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி
ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால்
வீட்டில் செல்வம் பெருகும்.
🌹 🌿 இனிப்பு (கல்கண்டு)
இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள்
லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம்
நிறைந்திருக்கும்.
மஞ்சள்...
🌹 🌿 குங்குமம்
மஞ்சள், குங்குமம் மிகவும்
மங்களகரமாகவும்,
லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது.
🌹 🌿 கல் உப்பு
பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும்
உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே
உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.
🌹 🌿 பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்களாகும்.
குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம்
செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம்
கிட்டும்.
🌹 🌿 வில்வம் இலை
வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு.
அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல
செல்வங்களும் கிடைக்கும்.
🌹 🌿 தாமரை
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன்
மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி
வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி
வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்
என்பதும் நம்பிக்கை.
🌹 🌿 கஜலட்சுமி
யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாக
போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும்
மகாலட்சுமி,
அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்பது நம்பிக்கை.
🌹 🌿 இது தவிர இல்லத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, உள்ளத் தூய்மையுடன் காலை, மாலை ஆகிய நேரங்களில்
வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் பூரண லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
🌹 🌿 வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல்
போன்றவையாவும்,
மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும்.
🌹 🌿 காலையில் தலைவாயிலைத்
துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத்
துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி
செய்து வந்தால் லட்சுமி கடாட்சம்
நிரந்தரமாகும்.
🌹 🌿 லட்சுமி கடாட்சம் பெற 75 வழிகள்.....
🌹 🌿 சுக்ரஓரையில் உப்பு வாங்கிட செல்வம்
குவியும். சுக்ரஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும். பசும்பாலை
சுக்ரஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக
பணம் வரும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில்
அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு
நிரந்தரமாகும்.
ஐஸ்வர்யம் தூப பொடியுடன் துளசிபொடியுடன் சேர்த்து அவரவர் தன
ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி
செந்தாமரை இதழ் கொண்டு அர்சிக்க தனலாபம் கிட்டும்.
வெள்ளிகிழமை காலை சுக்ரஓரையில் சுக்ரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடசெல்வம்
கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற
அன்றிலிருந்து நமக்கு சுக்ரதிசை தான்.
வெள்ளிக்கிழமை சுக்ரஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு
நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர
குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
குபேரனை வழிபட பணம் வரும். தனபண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.
ஸ்ரீ லஷ்மிகுபேரசதநாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறிவர அஷ்ட தரித்திரம்
நீங்கி தனலாபம் பெறலாம்.
வீடடில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க
குபேர சம்பத்து வரும்.
மகாலட்சுமிக்கும் தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.
குபேரனுக்கு தாமரைதிரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம்
கிடைக்கும்.
🌹 🌿 ஓவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். தொடர்ந்து 11 பௌர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு
🌹 🌿 சொர்ணா கர்ஷன பைரவருக்கு தாமரை மாலை
அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட
சொர்ண ஆகர்ஷணமாகும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு
பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.
🌹 🌿 தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
🌹 🌿 செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்
முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.
செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும்
24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
🌹 🌿 வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
🌹 🌿 அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி
இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின்
மடங்குகள் பணம் வரும்.
🌹 🌿 குலதெய்வ வழிபாடும் பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
🌹 🌿 வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம்
அளித்திட லஷ்மி அருள் பரிபூரணமாக கிட்டும். நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்
பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும், இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.
இறைபக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும்.
பணவரவு அதிகரிக்கும்.
🌹 🌿 பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45
நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். தினசரி குளிக்கும் முன்
பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
🌹 🌿 குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
🌹 🌿 சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம்
சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து
வீட்டிலும்,
தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
🌹 🌿 சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட
சொர்ண லாபம் கிட்டும்.
🌹 🌿 ஐஸ்வர்யலட்சுமி படத்தினில் வாசனை திரவியம்
தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
🌹 🌿 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.
🌹 🌿 ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்துவர பணம் ஆகர்ஷணமாகும்.
🌹 🌿 ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்
அடிக்கடி பார்க்க பணம் வரும்.
🌹 🌿 பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.
🌹 🌿 மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்புநிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வவரத்து
உண்டாகும்.
🌹 🌿 பச்சைபட்டு உடுத்திய லட்சுமி படத்தினை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டிவர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும். மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.
🌹 🌿 வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி
கடாட்சம் ஏற்படும்.
🌹 🌿 தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட, தொடர்ந்து 9 வாரம்
செய்துவர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
🌹 🌿 ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.
🌹 🌿 அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். 🌿 🌹 முழுபாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில்
ஊறவைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும்.
இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடை நீங்கும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சைபையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து
உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாடிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை
தீரும்.
🌹 🌿 பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
🌹 🌿 தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.
🌹 🌿 குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த
வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும்.
🌹 🌿 வீட்டில் தலைவாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
🌹 🌿 மகாலட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட
செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
🌹 🌿 சொர்ணாகர்ஷண பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
🌹 🌿 கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
🌹 🌿 ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.
🌹 🌿 தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
🌹 🌿 கற்பகவிநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர
சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
🌹 🌿 தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்தபாராயணத்தை வேத பண்டிதர்களை கொண்டு செய்ய லட்சுமிகடாட்சம் நிரந்தரமாகும்.
🌹 🌿 துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மைகள்
உண்டாகும்.
🌹 🌿 சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்ரன், சொர்ணகாளி, சொர்ணவராகி இவைகளை வழிபட தங்க நகை கிடைக்கும்.
🌹 🌿 கனகதாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டுவர பணம் கிடைக்கும்.
🌹 🌿 தங்கநகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும். திருமலை வெங்டகடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம்
சேரும். செந்தாமரையில் அமர்ந்துள்ள
தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடி கணக்கில் பணம்
கிடைக்கும்.
🌹 🌿 ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து
வழிபட பணம் வரும்.
🌹 🌿 ஒவ்வொருவரும் தன் வீட்டில் செல்வமும், வளமும் நிறைந்ததாக இருக்க
வேண்டும் என நினைப்பது வழக்கம். பண வரவும், உடல் ஆரோக்கியமும்
அனைத்து பெற லட்சுமி தேவியை வழிபடும் முறையை நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகள்
இங்கு பார்ப்போம்.
மூடியுடன் கூடிய ஒரு சிறு மண் கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் சிறிது சர்க்கரை, உப்பு, நவதானியம், பச்சரிசி, பருப்பு, புளி, சிறிய வலம்புரி சங்கு, ஐம்பொன் (சிறிய அளவு), குங்குமப்பூ, வெற்றிலை, பாக்கு, புனுகு, ஜவ்வாது ஆகியவற்றை வியாழக் கிழமை தினத்தில் வாங்கி வைக்கவும்.
சிறு மண் கலசத்தைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெள்ளிக்கிழமை அன்று மண் சட்டிக்கு விபூதி, சந்தனம், குங்கும திலகம் இடவும்.
காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேலே குறிப்பிட்ட பொருட்களை மண் சட்டியில் இட்டு
வீட்டின் பூஜை அறையில் வைத்து மகா லட்சுமி தேவியை வழிபடவும்.
🌹 🌿 ✨ ‘ஓம் தன தான்ய லட்சுமியை வசி வசி வசியை நமஹ’ ✨ 🌿 🌹
என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபடவும். பின் அந்த தூப
தீபம் காட்டி வழிபடவும்.
பின்னர் அந்த கலசத்தை மூடி பூஜை அறையில் வைத்துவிடவும்.
இதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி தேவியை வழிபாட்டை
மேற்கொள்ளுங்கள்.
🌹 🌿 லட்சுமி தேவி இருக்க விரும்பும் இடம் எது?
🌹 🌿 எந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு மதிப்பு கொடுக்கப்படுகின்றதோ, அவள் சிரித்துக்
கொண்டிருக்கின்றாளோ அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியேறுவாள்.
எந்த வீட்டு பெண்மணி அவருடைய வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்ணுக்கு
மஞ்சள் கிழங்கு,
குங்குமம், தண்ணீரும் வழங்க
வேண்டும். அப்படி வழங்கும் வீட்டில் சகல செளபாகியம், சந்தோஷம், வளம் பெருகும்.
எந்த ஒரு வீட்டில் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கிறதோ அங்கு திருமகள்
குடியேற விரும்புவாள்.
ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும்
முடிந்தளவு தர்மம் செய்யுங்கள் உங்களைத் தேடி தேவி வருவாள்.
வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் லட்சுமி வாசம் செய்வாள்.
அதனால் லட்சுமி கடாட்சம் பெருகும். எந்த ஒரு தீய சக்திகளும் அணுகாது.
எந்த சர்ச்சையோ, சண்டையோ இல்லாமல் பெண்கள்
இருக்கும் வீட்டில் அன்பும், பொருளும், வளமும் அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் உங்களின் உள்ளங்கை, கோயில் கோபுரம், பசுவை காணுதல் நல்லது.
எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசிக்காக ஊறுகாய் இருக்கின்றதோ
அங்கு தரித்திரம் இருக்காது. குபேரனுக்கு ஊறுகாய் மிகவும் பிடித்த உணவு.
லட்சுமி தேவிக்குப் பிடித்தது:
மஞ்சள் குங்குமம், சுமங்கலிகள்,பூரண கும்பம், மாவிலை தோரணம், வாழை இழை, திருவிளக்கு, வெற்றிலை, தீபம், பசு, கண்ணாடி, யானை, உள்ளங்கை ஆகியவை லட்சுமி
தேவிக்கு பிடித்தவை.
🌹 🌿 மகாலட்சுமி மந்திரம்:
🌹 🌿 ✨ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி
யேகி யேகி சர்வ சௌபாக்யமே தேகி ஸ்வாஹா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
`மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : What should be done to increase Lakshmi Kataksam at home? - Tips in Tamil [ spirituality ]