அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும். பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும்,தேவையை பூர்த்தி செய்யும்.
உண்மையான இறை வழிபாடு எப்படி
இருக்க வேண்டும்?
அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி
கொடுக்கும்,
புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும்.
பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும்,தேவையை பூர்த்தி செய்யும்.
பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு
கொடுக்கும் .
சிவதத்துவம்
மோட்சத்திற்குரியது.
எனவே தனித்த அலங்காரமற்ற சிவலிங்கத்தை கண்டு வணங்குபவர்கள்
நிச்சயம் உலகியல் வாழ்வியல் இருந்து சந்தோஷங்களை நிராகரிப்பதோ அல்லது பெற தவறும்
நிலையோ உண்டாகும் .
சிவ ப்ரியர்களில் நன்கு சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள்
சிவசக்தி சேர்ந்த ஆலயத்தில் அலங்காரம் நிறைந்த லிங்க தரிசனத்தை கண்டு
வழிபடவேண்டும்.
அலங்காரம் இல்லையென்றாலும் அலங்கரிக்கும் வரை நீங்கள் காத்திருந்தே
வழிபட வேண்டும், அல்லது
அலங்கரிக்கும் சூழல் அவ்வாலயத்தில் இல்லையெனில் நீங்கள் மாலை மற்றும் பூஜை
பொருட்கள் வாங்கிச் சென்று அலங்கரித்தாவது வழிபடவேண்டும்,
அப்போது தான் நன்மை, இல்லையெனில்
மோட்ச வரம் கிட்டும் (துன்பப்பட்டு. எல்லா அனுபவங்களையும் கண்டு மோட்சம் பெறுவது),
அலங்கார சிவதரிசனம் கண்டால் வாழும் வரம் கிட்டும்,(தேவைகள் பூர்த்தி அடைந்து சந்தோஷ வாழ்வு கிட்டும்) லட்சுமி கடாட்சரமாக
வாழலாம் .
பாவிகளுக்கு சிவாலயத்தில் எந்நேரமும் இடமில்லை . மீறினால் துன்ப
வாழ்வே உண்டாகும்.
பாவிகளுக்கு சிவராத்தியும். பிரதோஷ வேளையிலும். ஜென்ம நட்சத்திர
வேளையும். தமிழ் மாத முதல் நாளும். கிரஹன வேளையில் மட்டுமே அனுமதி.
அவ்வேளையில் சிவதரிசனம் கண்டால் அவர்கள் பாவம் களைய வழி கிடைக்கும்,
பாவிகள் சிவாலயத்தில் வேண்டுதல் வைக்க கூடாது .
குறிப்பாக பிரதோஷ வேளையில் அவ்வாறு வேண்டுதல் வைப்பது
முறையல்ல(தான் பாவியா இல்லையா என்பதை அவரவர் அனுபவ வாழ்க்கையை வைத்து முடிவு
செய்யப்பட வேண்டும்)
தர்மவான்கள்.
புண்ணியர்கள். அன்பை வளர்க்க கூடியவர்கள். கள்ள கபடு அற்றவர்கள். சுத்த சைவர்கள்.
பிறநலம் கொண்டவர்கள் அனைவரும் எப்பொழுதும் எவ்வேளையும் சிவசக்தி தரிசனம் செய்யலாம்
சொர்ண சக்தி. சுபிக்ஷ சக்தி பெறலாம் .
சிவ தரிசனம் புண்ணிய தரிசனம் . இதை பெற புண்ணியம் நாமும் செய்ய
வேண்டும்,.
அப்போதுதான் சிவபலன் கிட்டும், இந்த தகுதி
இருந்தால்தான் வாழும் வரம் பெற்று சம்சாரியாய் ஆவோம், இல்லையேல் சன்யாசம் கலந்த சம்சார வாழ்க்கையே ஏற்படும் .
லட்சுமிபதி கடாட்சாரம் தர்மத்திலும். ஆலய தரிசனத்திலும்
தாண்டவமாடும், ஆனால் வீட்டில்
ஆடாது, நித்திரை லட்சுமியே தாண்டவமாடுவாள்.
எனவே சிவ தரிசனம் கண்டு பலன் பெற துடிப்பவர்கள் புண்ணிய தர்மங்களை
செய்து செல்லுங்கள் செல்வ சந்தோஷத்தை ஆளுங்கள் .
உயிரே சிவம். உடலே விஷ்ணு. உயிருக்கு தேவை மோட்சம். உடலுக்கு தேவை
சந்தோஷம்,
யாருக்கு எது தேவையோ அதை பரிபூரணமாய் நாடுங்கள்,
இரண்டும் தேவையெனில் ஒவ்வொரு காலகட்டத்தில் அதை வரமாக பெறுங்கள்.
வரம் பெற ஏதுவாக ஆரம்பத்தில் இருந்தே தர்மம் செய்யுங்கள்,.
அப்போதுதான் மோட்ச லட்சுமியும் கிடைப்பாள், கூடவே சுபிக்ஷ லட்சுமியும் கிடைப்பாள்,
மனம் செம்மையானால் அங்கு ஐஸ்வர்ய லட்சுமி குடி கொள்வாள் .
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : உண்மையான இறை வழிபாடு எப்படி இருக்க வேண்டும்? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What should true worship look like? - Tips in Tamil [ ]