அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார்.
உங்கள் மீது இறைவன் கருணை மழை பொழிய என்ன செய்ய வேண்டும்..?
அகத்தியப்பெருமானின்
அருள்வாக்கு
மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே
சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால்
வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார்.
ஆண்டாண்டு காலம் மந்திரங்களை ஜபித்தாலும், மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால், ஓட்டைப் பாத்திரத்தில் நீரை
வைத்ததுபோல் ஆகிவிடும்.
எனவே இறைவன் திருவடியை இறுக
பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது
வேண்டுமானாலும் செய். ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே‘ என்ற ஒரு பரிபூரண
பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும்.
"வாழ்க்கை நீண்ட காலம் அல்ல. குறைந்த
காலம். அதற்குள் எண்ணியது கிடைத்து வாழ்ந்தால்தானே?" என்பது போன்ற விஷயங்கள் கட்டாயம் இறைவனுக்கும் தெரியும்.
மகான்களுக்கும் தெரியும்.
ஆனால் எந்த விதி எப்பொழுது மாற்றப்பட
வேண்டும்? என்பதும் இறைவனுக்கும் தெரியும்.
திடும் என ஒரு விதியை மாற்றுவதால், நன்மை
நடந்து விட்டால் பாதகமில்லை. அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற
ஒரு நிலை வந்துவிடும் என்பதையும் மனிதன் மறந்துவிடக் கூடாது.
இறைவனின் கருணையாலே, ஒவ்வொரு மனிதனும் விதியின் வழியாக
வருகின்ற துன்பங்களில் இருந்து விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணுகிறான்.
யாங்களும் மறுக்கவில்லை. அதே சமயம் ஒரு மகானின் தொடர்பு கிடைத்து வழிமுறைகள்
அறிந்தாலும் கூட பல்வேறு தருணங்களில் மனிதனால் விதியை வெல்ல முடிவதில்லை. காரணம், மன சோர்வும், எதிர்மறையான எண்ணங்களும், விதியை எதிர்த்துப் போராட ஒரு வலுவைத்
தராமல் அவனை சோர்ந்து அமர வைத்து விடுகிறது.
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது
யாதென்றால், நல்விதமான வாழ்வு நிலை இவ்வுலகினில் மாந்தர்கள்
பெறவேண்டும் என்பதற்காக, இவ்வுலகம் தோன்றிய நாள் முதல், இஃதொப்ப முயற்சியினை மாந்தர்கள்
செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகு முயற்சியிலே தன் சக்தி தாண்டி, நிலைதாண்டி இருப்பதாக பல மாந்தர்களில், சில மாந்தர்கள் எண்ணும் பொழுதே தெய்வீகத்தின் துணையை நாடுகிறார்கள்.
இயம்புங்கால், இறைவனின் கடாக்ஷம் இருந்துவிட்டால், எல்லாவகையிலும் இன்பம் தான், போராட்டங்களற்ற வாழ்வு தான் என்று மனிதன் எண்ணுகிறான்.
ஒருவகையில் அது உண்மை தான் என்றாலும், இயம்புகின்றோம்
ஒரு நிலையில் அஃது நன்று என்றாலும் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, ஆணித்தரமாக உள்ளும், புறமும்
எவ்வித நடிப்பும் இல்லாமல்,
மெய்யான ஆன்மீக வழியிலே இறைவழியிலே
எந்த மனிதன் சென்றாலும் அல்லது எந்த உயிர் சென்றாலும் பல்வேறுவிதமான சோதனைகளை
சந்தித்துதான் ஆகவேண்டும்.
ஆண்டாண்டுகாலம் மந்திரங்களை
ஜபித்தாலும், மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால், ஓட்டைப் பாத்திரத்தில் நீரை
வைத்ததுபோல் ஆகிவிடும். முதலில் பூசை, தர்மம், தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்கு, பிறர் மனதை புண்படுத்தாமல், நாகரீகமாக வார்த்தைகளை
பயன்படுத்துவதும் முக்கியம். அந்தப் பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும்.
நலம் எண்ணி, நலம் உரைத்து நலமே செய்ய, நலமே நடக்கும்.
பொதுச்சொத்து அல்லது கோவில் சொத்தை
கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் அலைய வேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல்
உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது
மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி
இல்லை.
நோயுள்ளவன்தான் மருந்து
சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர்
தான் பரிகாரம் செய்ய வேண்டும்.
கலியுகத்தில் ஏழைகளுக்கு அன்னதானம்
செய்து, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலப்
போற்றிச் சீவதயவுடன் நடந்து, இறை
வழிபாடும் செய்தால் உங்கள் மீது இறைவன்
கருணை மழை பொழிவான்...
ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும்
அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை
சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : உங்கள் மீது இறைவன் கருணை மழை பொழிய என்ன செய்ய வேண்டும் - குறிப்புகள் [ ] | Spiritual References: Shiva : What should you do to shower the Lord's mercy on you? - Tips in Tamil [ ]