
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு உம் திருவடியை பணிகிறேன் அது வேண்டும், இது வேண்டும் என இறையிடம் வேண்டுவோர் அரிதான பிறப்பான மனிதப்பிறப்பின் பயனை வேண்டுவதில்லையே என வருந்துகின்றனர் முற்றுப்பெற்ற ஞானிகள்.
இறையிடம் எதைக் கேட்க
வேண்டும்..?
திருச்சிற்றம்பலம்
** சிவமே தவம்  **
** தவமே சிவம்  **
அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே 
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத
பெருமானே 
உம் பேரருளோடு உம்
திருவடியை பணிகிறேன்
அது வேண்டும், இது வேண்டும் என இறையிடம் வேண்டுவோர்
அரிதான பிறப்பான மனிதப்பிறப்பின் பயனை வேண்டுவதில்லையே என வருந்துகின்றனர்
முற்றுப்பெற்ற ஞானிகள்.
"பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்"
- காரைக்கால் அம்மையார்
"வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட
வரும்."
- திருக்குறள் (ஆசான்
திருவள்ளுவர்)
ஒருவர் ஒன்றை விரும்புவதனால்
பிறவாநிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே
கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து
துன்பப்படாமலிருக்கப் பேரறிவான மற்றும் பேரின்பமான "பிறவாமை"யை நாம்
இறையிடம் வேண்டுவோம்.
எனவே கிடைத்த இந்தப் பிறவியை
ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார்
ஆசான் திருவள்ளுவர் மற்றும் ஆசான் திருமூலர் பெருமான். இதையே முற்றுப்பெற்ற
சித்தர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.
இறையிடம் நாம் மறக்காமல் கேட்க
வேண்டியது மீண்டும் மீண்டும் பிறவாமை எனும் பெரும்பேற்றை . கேட்காமற் கிடைக்காது.
கேட்டுப் பெறுவோம் பிறவிப்பயனை.
“பெறுதர்கரிய பிறவியை
பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி
பேணார்
பெறுதற் கரிய பிராணிகள்
எல்லாம்
பெறுதற் கரியதோர்
பேறிழந் தாரே”
- திருமந்திரம் (ஆசான்
திருமூலர்)
எண்ணிலாக்கோடி சித்தர்கள் திருவடிகள்
போற்றி
""பழமையை மறந்தோம்,
படாதபாடு படுகிறோம்""
பழமையில் புதுமை படைப்போம் 
பழமையை புதுமையாக காண்போம் 
பழமையான ஆலயங்களில் ஆண்டுக்கொரு முறை
திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலே எந்த ஆலயமும் அழியாது
உலகெங்கும் சிவ சிந்தனை பரவட்டும்....,
ஆலயந்தோறும்
சிவமந்திரங்கள் ஒலிக்கட்டும்.....
🙏 எந்நாளும் எந்நேரமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்
சொக்கநாதா
சொக்கநாதா 
 என சொல்லுவோம் 🌺
🙏*திருச்சிற்றம்பலம்*🙏
**சிவமே தவம்  **
**தவமே சிவம்  **
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத
பெருமானே 
அனைவரையும் காக்க வேண்டுகிறேன் 
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
பழமையான சிவனார் ஆலயங்களில் நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேகம் நடத்தும் என்றென்றும்
ஓர் உன்னதமான பணியில்  
*ஈசன் அடி பின்பற்றி*
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை...
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : இறையிடம் எதைக் கேட்க வேண்டும் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : What to ask God - Tips in Tamil [ ]