நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
பிரதோஷ பூஜையில் என்னென்ன செய்ய வேண்டும்? நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது நமக்கு நன்மை தரும். உற்சவ மூர்த்திக்கு பூஜையின் போது பால், இளநீர், தயிர் பஞ்சாமிர்தம், சந்தனம் இவற்றினைத் தரலாம். உற்சவ மூர்த்திக்கான பூஜையின் போது நமது அணிகலன்களை (நகைகளை உற்சவமூர்த்திக்கு அணிவித்து தீபாராதனை முடிந்த பின்னர் நகையை அணிந்து கொண்டால் நன்மை பல நமக்கு கிட்டும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவரது இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்தால் சகல தோஷமும், பாபமும் நீங்கும். மூலவரது தீபாராதனை முடிந்த பின்பு நந்திகேஸ்வரது காதில் பிறர் கேட்காதவாறு நம்முடைய குறைகளையும், கோரிக்கைகளையும் அவரிடம் கூறுதல் வேண்டும். இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ காலங்கள் வரை கூறி வந்தால் காரிய பலிதம் நடக்கும். இது திண்ணம். நந்திகேஸ்வரருக்கு நைவேத்தியமாக பச்சரியுடன் வெல்லம் கலந்து வைத்து வழிபாட்டிற்குப் பிறகு, எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதாலோ அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதாலோ நமது தோஷங்கள் தொலையும். நந்திதேவர் மற்றும் உற்சவர், மூலவர் ஆகியோருக்கு தீபாராதனை செய்யும்போது இறைவனின் திருநாமங்களையும், சிவபுராணப் பாடல்களையும் பாடுதல் வேண்டும். இவ்வாறு பக்தியுடன் பாடுவதால் தோஷம், பாபம், கஷ்டம் நீங்கி நன்மை பல பெறலாம். முக்கியமாக பிரதோஷ நாளன்று உபவாசம் இருந்து கடவுளை வழிபட வேண்டும். தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் அருந்தி வெறும் தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷத்திற்கான முழு பலன் கிட்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ பூஜையில் என்னென்ன செய்ய வேண்டும்? - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : What to do in Pradosha Puja? - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]