கண் திருஷ்டி நீங்கிட என்ன செய்ய வேண்டும்?

திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

[ ஆன்மீக குறிப்புகள் ]

What to do to get rid of eye strain? - What are the mistakes that should not be done during Trishti? in Tamil

கண் திருஷ்டி நீங்கிட என்ன செய்ய வேண்டும்? | What to do to get rid of eye strain?

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி செய்யுங்கள்! நம்முடன் இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியதாக இன்றைய காலகட்டங்களில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

கண் திருஷ்டி நீங்கிட என்ன செய்ய வேண்டும்?

 

திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

 

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி செய்யுங்கள்!

 

நம்முடன் இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியதாக இன்றைய காலகட்டங்களில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

ஒரு சிலருக்கு நம் மீது பொறாமையும், வயித்தெரிசலும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

கண்ணேறு, கண் திருஷ்டி என்று சொல்லப்படுவது இது தான்!

 

இத்தகைய திருஷ்டி கழிக்கும் போது நீங்கள் சில தவறுகள் செய்து விடுவது உண்டு.

 

அவை என்னென்ன?

திருஷ்டி கழிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு பயனுள்ள தகவல்களைத் தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

 

பொதுவாக திருஷ்டி கழிப்பதற்கு எலுமிச்சை

பழம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

ஒரு சிறு எலுமிச்சை பழத்தை புள்ளிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

புள்ளிகளுடன் கூடிய எலுமிச்சை பழம் திருஷ்டிக்கு உகந்தது கிடையாது.

 

இது போல தவறை செய்யாதீர்கள்.

 

கரும்புள்ளிகள் அற்ற எலுமிச்சையை இரண்டாக முக்கால் பாகம் வெட்டி உள்ளே கற்பூரத்தை வைத்து சூடமேற்றி கிழக்கு பார்த்து அமர வைத்து வலப்புறம் மும்முறையும், இடப்புறம் மும்முறையும் சுற்றி, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை கொண்டு வந்து மும்முறை எச்சிலை துப்ப செய்து பிறகு வெளியில் சென்று கற்பூரத்தை போட்டுவிட்டு எலுமிச்சை பழத்தை இரண்டாக கிழித்து வலது கையில் இருப்பதை இடது புறமும், இடது கையில் இருப்பதை வலது புறமும் தூக்கி வீசி அடிக்க வேண்டும்.

 

இதனால் பிடித்த கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.  

 

அதே போல உப்பு, மிளகாய், கடுகு வைத்தும் திருஷ்டி கழிப்பது உண்டு.

 

உப்பு, மிளகாய் போன்றவற்றை வைக்கும் பொழுது சிலர் கையில் திருஷ்டி கழித்து கொண்டு போய் கேஸ் ஸ்டவ்வில் போட்டு விடுவார்கள்.

 

இது போல செய்யவே கூடாது.

 

இந்த தவறுகளை திருஷ்டி கழிக்கும் போது செய்வது தவறு.

 

சமைக்கும் அடுப்பில் திருஷ்டி கழிக்க கூடாது.

 

முந்தைய காலங்களில் வெந்நீர் வைப்பதற்கு என்று தனியாக சுட்ட கற்களால் ஆன அடுப்பை வைத்திருப்பார்கள்.

 

அந்த விறகடுப்பில் தான் கொண்டு போய் திருஷ்டி கழிக்க கூடிய அந்த உப்பு மற்றும் மிளகாயை போட்டு வருவார்கள்.

 

உணவு சமைக்கும் அன்னபூரணி வசிக்கும் அடுப்பில் இது போல செய்வது தவறு.

 

இப்பொழுது விறகடுப்பை தேடி எல்லாம் நம்மால் எங்கும் செல்ல முடியாது.

 

அதனால் ஒரு சிரட்டையை எடுத்து நெருப்பில் காண்பித்தால் சிறிது நேரத்தில் நெருப்பு பிடித்து பற்றி எரிய ஆரம்பிக்கும்.

 

பிறகு அதை சாம்பிராணி போடும் தூப காலில் வைத்து விட்டு திருஷ்டி கழித்து கொள்ளலாம்.

 

திருஷ்டி கழித்த பொருட்களை அந்த எரியும் சிரட்டையில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிடலாம்.

 

இதனால் திருஷ்டி முழுமையாக கழியும் .

 

படபடவென பொரியும் கடுகும், கருகி எரியும் மிளகாய் வற்றலின் நெடியுமே நமக்கு எவ்வளவு திருஷ்டி இருக்கிறது? என்பதை காண்பித்துக் கொடுக்கும்.

 

கடுகு, கல் உப்பு, மிளகாய் வற்றல் இம்மூன்றையும் சேர்த்து ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்திற்கு, தொழில் செய்யும் இடத்திற்கு, குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்து வாருங்கள்.

 

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளும் உங்களை

விட்டு நொடியில் விலகும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : கண் திருஷ்டி நீங்கிட என்ன செய்ய வேண்டும்? - திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? [ ] | Spiritual Notes : What to do to get rid of eye strain? - What are the mistakes that should not be done during Trishti? in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்