சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ?

சிவ வழிபாடு, சிவ மந்திர தரும் பலன்கள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What will you get if you keep chanting Shiva mantras? - Benefits of Shiva worship and Shiva mantra in Tamil

சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ? | What will you get if you keep chanting Shiva mantras?

வேதங்களாகவும், வேதத்தின் பொருளாகவும், உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும், அவற்றின் இயக்கங்களிலும் சிவ பெருமான் நிறைந்திருப்பதாக சாஸ்திரங்களும், வேதங்களும் சொல்கின்றன. எந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை சொன்னாலும் அதற்கு குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவ மந்திரங்களை சொன்னால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ?

 

🍁🍁🍁

 

வேதங்களாகவும், வேதத்தின் பொருளாகவும், உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும், அவற்றின் இயக்கங்களிலும் சிவ பெருமான் நிறைந்திருப்பதாக சாஸ்திரங்களும், வேதங்களும் சொல்கின்றன. எந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை சொன்னாலும் அதற்கு குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவ மந்திரங்களை சொன்னால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

சிவனை போற்றும் எத்தனை மந்திரங்கள் உள்ளன. இவை அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். பல சிவ மந்திரங்களை தொடர்ந்து நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் இறக்கும் நிலையில் இருப்பவர் கூட முழு ஆரோக்கியத்தை பெற முடியும் என சொல்லப்படுகிறது. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திறன் மந்திர உச்சரிப்புகளுக்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

 

சிவ வழிபாடு :

 

முப்பெரும் தேவர்களில் ஒருவராக இருக்கும் சிவ பெருமான் உலகில் உள்ள அதிகமானவர்களால் வணங்கப்படும் தெய்வமாக இருந்து வருகிறார். இந்துக்களால் அதிகமாக வணங்கப்படும் தெய்வமும் இவர் தான். இவரின் அருளை பெறுவதற்கு கடுமைான விரதங்கள், பூஜைகள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. ஒரே ஒரு வில்வ இலையை பறிந்து வைத்து, நமச்சிவாய மந்திரத்தை மனம் உருகி கூறினாலே சிவ பெருமானின் அருள் கிடைத்து விடும் என புராணங்கள் சொல்கின்றன.

 

சிவ மந்திர தரும் பலன்கள் :

 

சிவ மந்திரங்களை பக்தியுடன் சொல்லி, மனதார தியானிப்பவர்களுக்கு சிவனின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்றும், அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்றும் ஆன்றோர்கள் பலரும் பாடி உள்ளனர். தன்னை நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களை ஈசன் ஒரு போதும் கைவிட மாட்டார் என்பது பக்தர்களின் மிகப் பெரிய நம்பிக்கையாகும். சிவ மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து சொல்கிறாரோ அவர் உடலாலும், மனதாலும் மிகவும் வலிமையானவராக ஆகிய விடுவார். உண்மையான பக்தியுடன் சிவ மந்திரத்தை சொல்லி வந்தால் எப்படிப்பட்ட கடுமையான துன்பத்திலும் இருந்து விடுபட முடியும்

 

சிவ மந்திரங்கள் உணர்த்துபவை:

 

பொதுவாகவே சிவனின் மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை எத்தனை முறை சொன்னாலும், எந்த நேரத்திலும் சொன்னாலும் நிச்சயம் பலன் தரக் கூடியவை ஆகும். சிவ மந்திரங்களை சொல்வதால் சிவ பெருமானுடன் ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தெய்வீக சக்தியை நம்மால் உணர முடியும். இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்வு பூர்வமாக உணர முடியும். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். நான் யார், சிவன் யார் என்ற சுய விழிப்புணர்வு ஏற்பட்டு, மனநிலையில் தெளிவு ஏற்படும். உணர்வுகளும் மனமும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வரும்.

 

சிவ மந்திரங்களை பொறுமையாக உச்சரிக்கும் போது மனதில் ஒரு விதமான தெய்வீக அமைதி ஏற்படுவதை உணர முடியும். மன அழுத்தம் குறையும். துன்பங்களில் இருந்து விடுபடவும், உணர்வுகளை சரியான முறையில் கையாளவும், ஆரோக்கியம் மேம்படவும் உதவும். சிவ மந்திரங்களை உச்சரிக்கும் போது ஒரு விதமான அதிர்வலைகள் உடலில் தோன்ற துவங்கும். இது நரம்பு மண்டலத்தில் ஊடுருவி மன அழுத்தத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்தக் கூடியதாகும். மனம் ஒரு நிலைப்படவும், புத்தி கூர்மை ஏற்படும் உதவுகின்றன.

 

சிவ மந்திரத்தால் என்னவெல்லாம் கிடைக்கும் ?

 

மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அழிக்கப்படும். நேர்மறை எண்ணங்கள், ஒற்றுமை ஆகியவை ஏற்படும். சிவ மந்திரங்கள், பில்லி- சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்கக் கூடியதாகும். பலம், தைரியம், உறுதி, எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறன், தடைகளில் இருந்து வெளியே வரும் திறன், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் தொடர்ந்து சிவ மந்திரங்களை உச்சரிப்பதால் தோன்றுகிறது. கர்ம வினைகளை நீக்கி, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கும், ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வ வளம், நினைத்தது நிறைவேறுவது ஆகியவற்றிற்கு சிவ மந்திரங்கள் உதவுகின்றன. இறைவனின் முழுமையான ஆசிகளை ஈர்க்கும் திறன் சிவ மந்திரங்களுக்கு உண்டு.

🍁🍁 🍁🍁

 மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ? - சிவ வழிபாடு, சிவ மந்திர தரும் பலன்கள் [ ] | Spiritual Notes : What will you get if you keep chanting Shiva mantras? - Benefits of Shiva worship and Shiva mantra in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்