"என் பையணுக்கு கல்யாணம் வச்சிருக்கே"ன்னு வந்து நின்னாங்க அந்தம்மா. ரொம்ப வருஷமா அவங்களை தெரியும். கணவனை இழந்தவங்க. ரொம்ப கஷ்டபட்டு ஒரே பையனை படிக்க வச்சாங்க. அவனுக்கு ஒரு கல்யாணம் செய்றது அவங்க வாழ்க்கையோட உச்ச பட்ச வெற்றியாக இருந்தது. அதை சாதித்த வெற்றி மிதப்பில் இருந்தார்.
எது அதீத மகிழ்ச்சியை தருகிறதோ அதுவே அதீத துன்பத்தையும் தரும்...! எப்படி?
"என் பையணுக்கு கல்யாணம்
வச்சிருக்கே"ன்னு வந்து நின்னாங்க அந்தம்மா. ரொம்ப வருஷமா அவங்களை தெரியும்.
கணவனை இழந்தவங்க. ரொம்ப கஷ்டபட்டு ஒரே பையனை படிக்க வச்சாங்க. அவனுக்கு ஒரு
கல்யாணம் செய்றது அவங்க வாழ்க்கையோட உச்ச பட்ச வெற்றியாக இருந்தது. அதை சாதித்த வெற்றி
மிதப்பில் இருந்தார்.
"என்னோட எல்லா கஷ்டமும்
மறைந்து விட்டது சார். இனிமேல் காலாட்டிட்டு இருக்க போறேன். பையணுக்கு என்னோட
அண்ணன் பொண்ணையே பேசி முடிச்சிருக்கேன். அவளை சின்ன வயசில இருந்து தூக்கி
வளத்துருக்கேன். என் மேல ரொம்ப பாசமா இருப்பா, இனி எல்லாத்தையும் அவ கவனிச்சுக்குவா. இப்ப ரொம்ப
நிம்மதியா இருக்கேன்னு" சொல்லும் போது. எனக்கே ரொம்ப மன நிறைவா இருந்தது.
வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.
வாழ்க்கை சக்கரம்
யாருக்காகவும் காத்திருக்காம ஓடிக்கொண்டிருக்க, அவ்வப்போது வேற ட்ரீட்மெண்ட்டுக்கு வரும் போதெல்லாம்
எப்படி இருக்காங்க, என்னன்னு விசாரிச்சு வச்சுப்பேன். அந்த மருமகளும் அவ்வப்போது
வருவாங்க. நடுவில் ஒரு குழந்தை கூட
பிறந்தது. இருவரின் முகத்திலும் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமா
மறைய ஆரம்பிச்சிருந்தது. எதோ
சரியில்லைன்னு மட்டும் புரிந்தது.
ரொம்ப நாளுக்கு பின்னாடி
அவங்க தனியா வந்த ஒரு நாளில் எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்...
எங்க சார், நாம ஒண்ணு நினைச்சா
தெய்வம் ஒண்ணு நினைக்குது...
என்னாச்சு..?
என்ன பிரச்சனைன்னே புரில
சார், மருமகளுக்கும் எனக்கும்
செட் ஆகல. நான் அன்பை அள்ளி கொட்டினேன். தங்கமா பாத்துகிட்டேன். ஆனாலும் அவளுக்கு
என் மேல நிறைய குறைகள் இருக்கு. எப்படி பேசினாலும் தீரல சார்... இப்போ
தனிக்குடித்தனம் போய்ட்டாங்க. ஒரு தடவை சந்திச்சாலும் சண்டை போட்டுக்கிறோம் அவ்ளோ
வெறுப்பு மண்டிக்கிடக்கு. எல்லோருக்கும் கஷ்டம். நிம்மதியே இல்ல சார்....
எப்ப ஆரம்பிச்சது? ரொம்ப மகிழ்ச்சியா தானே
திருமணம் செய்து கொடுத்தீங்க?
கல்யாணம் ஆன உடனேயே
ஆரம்பிச்சுடுச்சு சார், என் பையனோட நான் பேசுறது எதுவும் அவளுக்கு பிடிக்கல. நான் ஒண்ணு
சொன்னா அவ வேற ஒன்னை சொல்லி அப்படி செய்ய வைக்கிறதுன்னு நாங்க இரண்டு பேரும்
சேர்ந்து பையனை படுத்தி எடுத்திட்டோம். சரி அவனாவது நிம்மதியா இருக்கட்டும்ன்னு
இப்போ தனிக்குடித்தனம் அனுப்பிட்டேன் சார்.
ஒரு வகையில நீங்க
செய்தது தான் சரி. தனியா அனுப்பினது மிக மிக அவசியமான விசயம். தாகத்தின் போது தான்
தண்ணீரோட அருமை தெரியும். அதே மாதிரி தனியாக இருந்து பார்க்கும் போது தான் பெரியவங்களோட
அருமை புரியும். நாளைக்கு தேவைன்னு தேடி வருவாங்க. அன்னிக்கு உங்களுக்கான மரியாதை
சரியா கிடைக்கும். நம்பிக்கையா இருங்கன்னு ஆறுதல் சொல்லி அனுப்பி வச்சேன்.
மருமகளை பார்க்கும்
வாய்ப்பும் வந்தது. அவங்க ரொம்ப தெளிவா சொன்னாங்க. சொந்த அத்தை தான் சார், ஆனால் ஒவ்வொன்னும்
அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணனும்ன்னு டார்ச்சர். சமையல் செய்தால் அதில் ஒரு
குற்றம், கோலம் போட்டால் அதில்
ஒரு குற்றம்,
சீக்கிரம் தூங்கினாலும்
குற்றம், லேட்டா தூங்கினாலும்
குற்றம். குப்புற படுத்தா கூட அதுக்கும் தவறு சொல்வாங்க. அவங்களை மாதிரியே நான்
அப்படி சார் வாழ முடியும்? ஒரு கட்டத்துல வெறுத்து போச்சு. அடம் பிடிச்சு வீட்டுக்காரர் கிட்ட
பேசி தனி குடிதனம் வந்துட்டேன் சார். இப்போ ஓரளவு பரவாயில்லை.
நீங்க உங்க மாமியார் கூட
இல்லாம தனியா இருக்கிறது நல்ல விசயம் தான். ஆனால் உங்க கணவர் அவங்களை பார்க்கிறதுக்கு
தடை எதும் சொல்லாதீங்க, அது அவங்களை ரொம்ப தனிமைப்படுத்தக் கூடும்ன்னு சொல்லி அனுப்பி
வச்சேன்.
இது வெறும் ஈகோ விசயம். Mis communication. இந்தியாவில் பல
குடும்பங்களில் இருக்கிற ரொம்ப சாதாரண பிரச்சனை இது. நேற்று வரைக்கும் நம்ம பேச்சை
கேட்டுட்டிருந்த தன்னோட மகன் ஏன்
திடீர்ன்னு தன் பேச்சை கேக்குறதில்லைன்னு அம்மாக்கள் குழம்பி போற இடம் இது.
உலகத்திலேயே கூட்டு
குடும்ப அமைப்பு ரொம்ப முக்கியமாக
கையாளப்படுவது இந்தியாவில் தான். ஆனால் நிறைய பிரச்சனைகளும் அதில் தான்
வருது. சில அடிப்படை விசயங்களை கடிப்பைடிப்பது நம்ம குடும்ப அமைப்பை வலுவாக
வைத்துக் கொள்ளவும் மிக முக்கியமாக குடும்பத்தின், தனி நபர் ஒவ்வொருவரின் மன
நிம்மதி பாதிக்காமல் இருக்கவும் உதவும்ன்னு நினைக்கிறேன்
வீட்டிற்கு வரும் புதிய
நபரை அப்படியே ஏறுக் கொள்ள பழகுங்கள்.
மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக்
கொள்ளுங்கள். உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன்
மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து விடாதீர்கள். ஏனென்றால் அவள்
தன்னை திட்டுவதற்கும், சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும்
உரிமையில்லை என்று எண்ணுவாள். நீங்கள் உரிமை எடுத்து எதாவது சொல்லிவிட்டால்
அங்கேயே விரிசல் ஆரம்பமாகும்.
உங்கள் மகனின் மனைவி
எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்கள் பிரச்சனை
இல்லை. அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை. அதில் நீங்கள் தலையிட வேண்டாம்.
அவர் இன்னும் உங்கள் சிறு பிள்ளை அல்ல. வளார்ந்து விட்டார், அவர் பிரச்சனைகளை அவர்
பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் அட்வைஸ் செய்து குழப்பாதீர்கள்.
கூட்டாக வாழும் போது
வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள்
துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த
அவசியமும் இல்லை. அதை செய்துவிட்டு நான் செய்தேன், அவள் என்னை கவனிக்கவில்லை என்ற
குறைபாடு வேண்டாம்.,உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து
கொடுங்கள். பதிலுக்கு எதையும் எதிர்பாராதிருங்கள்.
உங்கள் மருமகள் உங்களை
கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை. சொந்தத்தில்
கல்யாணம் செய்தாலும் வாயும் வயிறும் வேற தான். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற
வாய்ப்பு மிக மிக குறைவு. மனதில் இதை உரக்க சொல்லி கொள்ளுங்கள்.
உங்கள் காரியங்களை
நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை
தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும்
புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். பிள்ளைகளை எதிர்பாராமல்
இருப்பது சுதந்திரத்தையும் நிம்மதியையும் கொடுக்கும்.
உங்கள் உடல் நலனில்
நீங்கள் அக்கறை கொள்ளுங்கள், மகனோ மருமகளோ உங்களை தாங்க வேண்டும் எங்கிற எதிர்பார்ப்பு வேண்டாம். உங்களிடம் உள்ளா பணத்தை உங்கள் நலனுக்காக செலவு
செய்யுங்கள். வேறு யாரிடமும் கொடுத்துவிட்டு அவர்கள் திரும்ப செய்ய காத்திருக்க
வேண்டாம். உங்கள் காலத்துக்கு பின், நீங்கள் அனுபவித்தது போக மீதமிருப்பதை அவர்கள் எடுத்து
கொள்ளாட்டும். ஒன்றும் தவறில்லை.
பேரக்குழந்தைகள் உங்கள்
சொத்தல்ல. அது உங்கள் பிள்ளைகளின் சொத்து என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள்
விருப்பம் போல உங்கள் பிள்ளைகள் அவர்களை வளர்க்க வேண்டும் என்று
எதிர்பார்க்காதீர்கள் அதற்கு வாய்ப்பு இல்லை.
நன்றாக நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.. எது அதீத மகிழ்ச்சியை தருகிறதோ அதுவே அதீத துன்பத்தையும்
தரும்...! அதனால் துன்பத்தை தவிர்க்க தெளிவாக திட்டமிடுங்கள். உறவுகளில் லாட்ட்டரி
சீட்டு போல அதிர்ஷ்டங்களை நம்புவது நன்மை பயக்காது. ஒரு பிஸினஸ் போல தெளிவான
திட்டமிடல் இருந்தால் குடும்பத்திலும் உறவுகளிலும் சிக்கல் என்பது இருக்காது...
முயற்சிப்போம்.
💫🌹உடல், மன நலத்திற்காக.....இந்த
மூன்றை முதலில் செய்து பழகுங்கள்..💫🌹
எந்த ஒரு compromiseம் செய்யாமல்.
உடல், மன நலத்திற்காக
மூன்று விஷயங்களை
எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,,,
இதற்கு எந்த குரு
குலமும் தேவையில்லை.
1) உணவு :
எந்தவொரு உணவை
உட்கொள்ளும் போதும், இது தேவையா, உடல் நலத்திற்கு உகந்ததா என்ற சிறு விழிப்புணர்வோடு இருங்கள்.
2) உடற்பயிற்சி :
இந்த உடலை தினமும் காலை
முதல் இரவு வரை பயன்படுத்துகிறோம். சமையல் செய்து முடித்தவுடன், பாத்திரங்களை கழுவி
சுத்தப்படுத்தினால் தான் மறுநாள் உபயோகப்படுத்த முடியும்.
ஏதோ ஒரு எளிமையான
உடற்பயிற்சி. நமது உடலை தூய்மைப் படுத்த வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
3) எண்ணங்கள் :
எண்ணம் எழும் போதே அதை
கவனிக்க பழகுங்கள். தேவையற்ற எண்ணங்கள் எழும் போது, ஆராய்ந்து, இனி இது போன்ற தவறான
எண்ணங்கள் மீண்டும் வரக்கூடாது என்று மனதளவில்
சிறு சங்கற்பம்.
இந்த மூன்றை முதலில்
செய்து பழகுங்கள்.
எந்த ஒரு compromiseம் செய்யாமல்.
மற்றவை தன்னாலே
நடக்கும்.
Speed brake உள்ளவர்கள் முயற்சித்து
பார்க்கலாம் உடல், மன நலத்திற்காக.
Sometimes எனக்கே தோனும் ஒரு வேள
நமக்கு வயசாகிட்டே போகுதோ? இல்ல Maturity வந்திறிச்சோனு
முன்னெல்லாம் ரொம்ப
இறுக்கமா புடிச்சிட்டு என்ன விட்டு போக கூடாதுனு நினைச்சதெல்லாம் இப்போ கண்ணு
முன்னாடி விட்டுபோறப்போ நின்னு வேடிக்க பாத்துட்டு இருக்கேன்.
மத்தவங்களுக்காக ஓடி ஓடி
Effort போட்டு எல்லாம்
பன்னியும் கொற மட்டுமே கண்டுபுடிக்கிறப்போ கோவம் வர மாட்டிக்குது.
யாரும் தப்பா பேசாதபடி
எல்லா விஷயமும் perfect ஹா பன்னிறனும் யோசிச்ச நா இப்போ எவன் என்னா நினைச்சா நமக்கு
என்னானு கடந்து போக பழகிட்டேன்.
யாராச்சும் எதாச்சும்
சொல்லிடா சண்ட போடனும் Argue பன்னனும் Explain பன்னனும்,இப்டி எதுமே இல்லாம
எனக்காக மட்டுமே கிடைக்கிற சின்ன சின்ன விஷயங்கள பன்னிட்டு அதுல கிடைக்கிற satisfaction தான் எனக்கான நிம்மதினு
வாழ்ந்துட்டு இருக்கேன்.
எனக்கு தெரிஞ்சு இங்க
நெறய பேர் இப்டி தான் வாழ்ந்துட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். ✒
வாழ்க்கை உன்
எதிரியாகும் போது
நீ சரிந்து விட்டால் அது
"சாதாரணம்".......,
அதுவே நீ எழுந்து
நின்றால்
அது தான்
"சரித்திரம்"......!
ஆன்மீக அகப்பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
மனம் : எது அதீத மகிழ்ச்சியை தருகிறதோ அதுவே அதீத துன்பத்தையும் தரும்...! எப்படி? - குறிப்புகள் [ ] | The mind : Whatever brings great happiness also brings great sorrow...! How? - Tips in Tamil [ ]