1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள். 2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.
விடுமுறை
நாட்களில் எங்கே செல்ல வேண்டும்?
1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள்
வீடுகளுக்கு செல்லுங்கள்.
2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.
3. உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச் சொல்லி
முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்.
4. சாலைகளில் நடக்கும் போது தலையை நிமிர்ந்து
நடந்து செல்லுங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை
பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலங்களை விசாரியுங்கள்.
5. வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க
பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.
6. தங்களுடைய திறமைகள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக
இருக்க வேண்டும்.
7. வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில்
இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.
8. சொத்து, தங்கம் மற்றும் பணத்தை நினைத்து, நினைத்து டென்சன் ஆகாதீங்க.
9. ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரிங்க.😀😀😀
10. நான்
பெரிய ஆள், (ஈகோ) எனது கட்டளைக்கு அனைவரும் கட்டு பட வேண்டும்
என்ற எண்ணத்தை கைவிடுங்க இல்லையேல் உங்கள்
மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள் உங்களுடன் போலியாகத்தான் பழகுவார்கள்.
11. வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவிர்த்து முடிந்த
அளவு தானம், தர்மம் செய்து புண்ணியத்தைஙசேர்க்க பழகிக் கொள்ளுங்கள்,
12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை
வாழாதீங்க.
13. இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம், சில ஆண்டுகளில் இந்த புண்ணிய
பூமியை விட்டு போய் விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள்.
14. இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம், பதவி இவை அனைத்தும் உங்களுடன்
வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்கள்.
16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும். அது இல்லாமலேயே
ஏனோதானோ என்று இருக்கக் கூடாது.
17. இதைப் படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க.
எனக்கும் இந்த சிந்தனைகள் பொருந்தும்.
18. இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை
தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்.
பெண், மண், பணம், காசு, துட்டு, மணி போன்றவற்றின் பின்னால்
அலையாமல் நல்ல மனிதனாக வாழ பழகிக்கொள்.
வாழ்க்கையில் எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திபடுத்த
வேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி அனைவரையும் அனுசரித்து போய்கொண்டே இருக்க நினைத்தால்
உங்கள் ஐடெண்ட்டிடியை இழந்து விடுவீர்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையே இதற்கு ஒரு உதாரணம்.
ஒரு சந்நியாசி காட்டுப்பக்கம் போய்க்கொண்டு இருந்தார். திடீரென நல்ல பாம்பு வந்து கொத்த
நினைத்தது. இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றார்.
அதுவோ, " ஸ்வாமி என்னைப் பார்த்தாலே எல்லோருமே துரத்தி
துரத்தி அடிக்கிறார்கள். அதனாலேயே அடிக்கும் முன், அவர்களை கொத்தி விடுவேன். " என்றது.
"இதுவொரு பாவச் செயல், யாரையும் கொத்தவோ கடிக்கவோ செய்யாதே. துன்புறுத்தாதே", என்று சொல்லியவாறே சென்று விட்டார்.
அந்த நல்ல பாம்பும், " ஆகட்டும் ஸ்வாமி ", நகர்ந்து விட்டது.
மூன்று மாதங்கள் கழித்து, அந்த சந்நியாசி அந்த காட்டு வழியே மீண்டும் வந்தார். முன்பு
இவரை கொத்த வந்த பாம்பு, மிகவும் மெலிந்து சாகும் தருவாயில்
இருந்தது.
"ஏன் இப்படி உயிர் போகும் நிலையில் இருக்கிறாய்.
என்ன நடந்தது", என்றார்.
"ஸ்வாமி, நீங்கள் சொன்னது போல் யாரையும் துன்புறுத்தவில்லை. கொத்தவும்
இல்லை. சாதுவான என்னை அடித்து விட்டார்கள். இப்போது பிழைப்பதே துர்பலம்", என சோகமாக படுத்து கொண்டது.
சந்நியாசி சொன்னார், " நீ என்ன பைத்தியமா? நான் என்ன சொன்னேன் - யாரையும் துன்புறுத்தாதே என்று சொல்லிப்
போனேன். உன் போன்ற நல்ல பாம்பின் சுபாவம் என்ன? சீறும் குணம் தானே. உன்னைக் காப்பாற்றிக் கொள்ள சீறலாம் இல்லையா? கடிக்கத்தானே வேண்டாம் என்றேன். உன்னை தாக்க வருபவர்களை சீறினால், உன்னிடம் நெருங்க மாட்டார்கள் இல்லையா?, என்றவாறு தன் தவ வலிமையால் அதற்கு உயிரூட்டினார்.
ஆகவே, மனிதர்கள் கூட, எந்த சூழ்நிலையிலும் எந்த கடைநிலை வந்தாலும், தங்களுடைய ஐடெண்டிடியை மட்டும் இழுந்து விடக்கூடாது என்பது தான் பரமஹம்சர் கதையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது விஷயம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
உறவுகள் : விடுமுறை நாட்களில் எங்கே செல்ல வேண்டும்? - ஐடெண்ட்டிடி [ ] | Relationships : Where to go on holidays? - Identity in Tamil [ ]