எந்த‌ 3 வகை செல்வங்கள் நிலையான செல்வங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Which 3 types of wealth are fixed wealth - Tips in Tamil

எந்த‌ 3 வகை செல்வங்கள் நிலையான செல்வங்கள் | Which 3 types of wealth are fixed wealth

இந்த உலகில் மனிதர்கள், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள‍ பணம் அதாவது செல்வம் வேண்டும். பணம் அதாவது செல்வங்கள் எத்த‍னையோ வழிகளில் நமக்கு கிடைக்கிறது. அந்த செல்வங்களில் முக்கியமாக 3 வகையான செல்வங்களை நிலையான செல்வங்கள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள‍னர்.

செல்வம் வரும் 3 வழிகள்!

 

எந்த‌ 3 வகை செல்வங்கள் நிலையான செல்வங்கள்!!

 

இந்த உலகில் மனிதர்கள், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள‍ பணம் அதாவது செல்வம் வேண்டும்.

 

பணம் அதாவது செல்வங்கள் எத்த‍னையோ வழிகளில் நமக்கு கிடைக்கிறது.

 

அந்த செல்வங்களில் முக்கியமாக

3 வகையான செல்வங்களை நிலையான செல்வங்கள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள‍னர்.

 

நிலையான செல்வங்கள் எனப்படும் 3 வகையான செல்வங்கள் நமக்கு

வரும் மூன்று வழிகளை பற்றி ஆன்மீகம் சொல்லும் அரிய தகவல்களை தெரிந்து கொள்வோமா?

 

அவை

 

1. லட்சுமி செல்வம்,

2. குபேர செல்வம்,

3. இந்திர செல்வம் எனப்படும்.

 

லட்சுமி செல்வம்

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள்.

 

இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். 

 

இந்த மகாலட்சுமியின் செல்வம்பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.  மதி மயக்கம் தோன்றாது. 

மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள்.

 

இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும்.

 

இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும்.

 

இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

 

குபேர செல்வம்...

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும்.

 

அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள்.

 

திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

 

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும்.

 

மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

 

 இந்திர செல்வம்..

பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர செல்வத்தின் அடையாளங்கள்.

 

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது.

 

சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும்.

 

இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : எந்த‌ 3 வகை செல்வங்கள் நிலையான செல்வங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Which 3 types of wealth are fixed wealth - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்