1. கும்பகோணத்திற்கு அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது
ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
1. கும்பகோணத்திற்கு அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள
சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து
ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன்
அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம்
தெரியும்.
2. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில்
படியாது.
3. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் அந்த சிலையை
தூக்குவார்கள்பின்பு 8,16, என கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள்
அப்போது கருடனின் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
4. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
5. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில்
லிங்கவடிவில் காய்காய்க்கிறது
6. கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ் வேறு
வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
7. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில்
சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு
அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
8. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென் புறம்
அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம்உள்ள பள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.
9. தஞ்சாவூர் அருகில் மிலட்டூர் என்னும் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் ஏப்ரல் மாதம்
14 ம் தேதி அதிகாலை சூரிய உதயதம் பல நிலைகளை கடந்து
மூலவர் சிவலிங்கத்தின் பாதத்தை தொட்டு திரும்பும்.
மறுநாள்15 தேதி காலை பாதி சிவலிங்கம் வரை வந்து தொட்டு திரும்பும்.
16 ம் தேதி காலை
உச்சிவரை தொட்டு திரும்பும்.
இந்து மூன்று நாட்களும் அதிகாலை அந்த சூரிய பூஜையை
தரிசனம் செய்ய நாங்கள் காத்திருப்போம் .
விட்டலாச்சாரியார் படத்தில் பாம்பு படி ஏறிவருவது
போல் ஒவ்வொரு படியாக சர சர என சூரிய ஔி ஏறிவரும் காட்சியை கானும் போது உண்மையிலே உடல்
எல்லாம் சிலிர்க்கும்.
பாதத்தைத் தொட்டு ஒரு நிமிடம் நிற்கும்.
தீபாராதனை காட்டியவுடன் மீண்டும் ஒவ்வொரு படியாக
இறங்கி செல்லும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : While building the temple, they set something unique in each temple - Notes in Tamil [ ]