இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் உணவு வகையில் சொல்லும் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியாது.
இளைய சமுதாயத்தினரின் வழிகாட்டிகள் யார்?
இன்று
வாழ்ந்து கொண்டிருக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் உணவு வகையில் சொல்லும் கருத்துக்களை
நாம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியாது. மாட்டுப்பால் பொருள்களும்
மாமிச வகைகளும் எல்லோரும் சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாகவும் பலசாலிகளாகவும் வாழலாம்
என்று சொல்வது உண்மையானால் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோயில்லாமல் அல்லவா
வாழ வேண்டும். நமக்கு ஆலோசனை சொல்லும் பெரியவர்களில் கோடியில் ஒருவராது ஆரோக்கியமாக
இருக்கிறார்களா? இன்று பெரியவர்கள்
எல்லோருமே நோயாளிகளாகத் தானே வாழ்கிறார்கள். அவர்கள் மாட்டுப் பாலையும், மாமிச வகைகளையும் வைத்தே இன்றைய
நோய்கள் அனைத்தையும் குணமாக்கி விடலாமே?
இன்றைய நோய்களை எண்ண முடியவில்லை. மருத்துவங்களை எண்ண முடியவில்லை. மருத்துவர்களை எண்ண
முடியவில்லை. அடுக்குமாடி மருத்துவமனைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. திரும்பிய திசையெல்லாம்
மருந்துக்கடைகள், சாதாரண
பெட்டிக்கடை முதல் பலசரக்குகடை வரை மாத்திரைகள் விற்பனைசெய்யாத கடைகள் இல்லை. இன்னொரு
அதிசயம் என்னவென்றால் எல்லோரும் நோயாளிகள். மனித இனத்திற்கு மட்டும் இப்படி ஒரு ஒற்றுமை.
எல்லோரும் நோயாளிகள் எப்படி ஒரு தத்துவமான வார்த்தை பார்த்தீர்களா? இந்த பெருமையை உலகில் வாழும் மற்ற
ஜீவராசிகள் பெறவில்லை. முன்காலம் நோய்களின் தாக்கம் ஆரம்பித்த காலத்தில் ஒரு மனிதருக்கு
ஏதாவது ஒரு நோய் வந்து விட்டால் வெளியில் செல்ல மாட்டார். நோயாளி என்று சொல்வதை கேவலமாகவும், அவமானமாகவும் நினைத்தார்கள் அன்று.
ஆனால் இன்று ஆறு நோய்களை உடலில் வைத்துக் கொண்டு அவைகளை வரிசைப்படுத்தி சொல்லி பெருமைப்
படுகிறார்கள். நோயாளி என்பதை இன்று கேவலமாக நினைப்பதில்லை.
சுமார்
300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள்
அன்பு உலகம் என்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். அன்றைய குடும்பத்தின் தலைவர்
ஒரு நாட்டின் மன்னரைப்போல் செயல்பட்டார். அவ்வளவு பொறுப்புணர்ச்சி, அன்பு, பண்பு, பாசம், பணிவு, இரக்கம், கருணை, இயற்கை அறிவு, கடின உழைப்பு இவை அனைத்தும் அன்றைய
பெரியவர்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இப்படிப்பட்ட நல்ல பண்புகள் உள்ள அன்றைய
பெரியவர்களை தெய்வமாக மதித்து வாழ்ந்தார்கள். அன்றைய பெரியவர்களை வணங்கி அவர்களின்
ஆலோசனைகளை கேட்டு அன்று வாழ்ந்த இளைய சமுதாயத்தினர் மிகவும் பாக்கிய சாலிகள். அவர்களோடு
வாழவும் அவர்கள் மடியில் தலைவைக்கும் பாக்கியமும் எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.
நான்
தினமும் என்னை நினைத்து வருந்துவது என்னவென்றால் 500 வருடங்களுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். சுமார்
120 வயது வரை வாழ்ந்தாலும் அன்பு கொண்ட
மனிதர்களோடு வாழ்ந்து இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த இயற்கை இன்பங்கள் அனைத்தையும்
அனுபவித்து மனிதனாகப் பிறந்ததின் முழுப் பயனை நான் அடைந்திருப்பேன் என்று இன்றும் வருந்திக்
கொண்டிருக்கிறேன். இன்றைய வாழ்க்கை மனித வாழ்க்கையே அல்ல.
இன்று
நாம் வாழும் வாழ்க்கையை நினைத்தால் எனக்கு கேவலமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இன்று
நல்ல பண்புகள் அனைத்தும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. நல்ல பண்புகள் இழந்து
வாழும் மனிதர்களுடன் எப்படி நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ முடியும்? இன்று எத்தனை பேர் மகிழ்ச்சியாக
வாழ்கிறார்கள். சொல்லுங்கள் பார்ப்போம்.
இன்று
நல்வழி காட்ட வேண்டிய பெரியவர்கள் (ஆண்-பெண்) எல்லோருமே நோயாளிகளாக அல்லவா வாழ்கிறார்கள்.
ஒரு கேள்வி கேட்கிறேன். அறிவாளிகளுக்கு நோய்கள் வருமா? இதற்கு ஒரு உதாரணம். மனிதர்களின்
கட்டுப்பாட்டில் இல்லாத மற்ற உயிர்களை பார்த்தால் எந்த ஒரு உயிரும் நோயுடனோ அல்லது
ஊனமாகவோ வாழவில்லை. அவைகள் அடுத்தவர் தயவை நாடுவதில்லை. எதனால் என்றால் அவைகள் இயற்கை
கொடுத்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு இயற்கையுடன் இணைந்து வாழ்வதால் இயற்கை அறிவை இழக்கவில்லை.
மனித இனம் மட்டும் தீய உணவுகளை தின்று இயற்கை அறிவை இழந்து வாழ்வதால் தான் இத்தனை வகையான
துன்பங்கள். இன்றைய பெரியவர்களில் மருந்து மாத்திரைகள் விழுங்காதவர்கள் உண்டா? ஊசி குத்தாத உடம்பு உண்டா? இயற்கை கொடுத்த 32 பற்களுடன் வாழும் பெரியவர் கோடியில்
ஒருவர் உண்டா? குஷ்டரோகிகள், முழங்கால் வலியால் நடக்க முடியாதவர்கள்
பக்கவாதத்தால் படுக்கையில் கிடப்பவர்கள்,
உடலெல்லாம்
புண்கள் வந்தவர்கள், வாத
நோயால் பேசும் தன்மையை இழந்தவர்கள்,
காது
கேட்காதவர்கள், கண் பார்வையை
இழந்தவர்கள், உப்பு வியாதியால்
உப்பிப்போனவர்கள், ஆஸ்துமா
தொல்லையால் மூச்சுவிட முடியாதவர்கள்,
பைத்தியம்
பிடித்தவர்கள், இன்னும்
எண்ண முடியாத அளவுக்கு பல பாதிப்புகளுடன் தான் இன்றைய வயதில் முதிர்ந்த பெரியவர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலே சொன்ன நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதில் மூத்த பெரியவர்களிடம் சென்று இன்றைய இளைய தலைமுறையினர் நல்வாழ்வு ஆலோசனை கேட்க முடியுமா? அவர்களே ஆரோக்கியத்தை இழந்து கிடக்கிறார்கள். இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வை கற்றுக் கொடுக்க முடியும். இயற்கை அறிவை இழந்தவர்களிடம் நல்வாழ்வு ஆலோசனை கேட்டால் கேட்பவர்கள் அவர்களை விட மோசமாகத்தான் கிடப்பார்கள்.
குஷ்டரோகியிடம்
சென்று ஆரோக்கிய வாழ்வைப் பற்றி கேட்க முடியுமா? பக்கவாதத்தில் படுத்திருப்பவரிடம் போய் நான் என் ஆயுள்
உள்ளவரை உழைத்து வாழ வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டால் எப்படி வழி சொல்வார்? ராஜநடை நடந்து காட்டுங்கள் என்றால்
அவர் நடந்து காட்டுவாரா? அந்த
வழி தெரிந்திருந்தால் இன்று அவர் படுத்த படுக்கையாக கிடக்க மாட்டாரே. வாத நோயால் பேகம்
தன்மையை இழந்தவரிடம் சென்று நான் நல்வாழ்வு வாழ எனக்கு சில மருத்துவ ஆலோசனைகள் சொல்லுங்கள்
என்று கேட்டால் எப்படி சொல்வார் அவர்தான் பேசும் தன்மையை இழந்து விட்டாரே. சர்க்கரை
நோயால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்தவரிடம் சென்று ராஜ நடை நடப்பது எப்படி என்று கேட்க
முடியுமா? பற்களை இழந்தவரிடம் சென்று கரும்பை
எப்படி கடிக்க வேண்டும் என்றால் அவரால் கடித்து காட்ட முடியுமா? இதைப்போல் இன்றும் பல கேள்விகள்
கேட்கலாம். நான் யாரையும் கேலி செய்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இன்றைய
இளைய தலைமுறையினருக்கு நிமிர்ந்து நின்று நல்வழி காட்ட வேண்டிய பெரியவர்கள் இட்டபடி
சாய்ந்து கிடக்கிறார்களே என்று மன வேதனையுடன் கேட்கிறேன். ஒரு குடும்ப தலைவர் பெற்ற
பிள்ளையை சிகரெட் வாங்கி வரச் சொல்கிறார். இது தான் தன் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும்
அறிவுப்பாடமா? சிலர் மனைவியையும்
பீடி, சிகரெட் வாங்கி வரச் சொல்கிறார்கள்.
மூக்குப்பொடியை மூக்குக்குள் திணிக்கும் முட்டாள்களிடம் நல்வாழ்வு ஆலோசனை பெற முடியுமா
?
இன்னொரு
குடும்பத்தலைவர் மது குடித்துவிட்டு வந்து தன் குழந்தைகளுக்கு மத்தியில் மனைவியை அடித்து
துன்புறுத்துகிறார். ஒருவர் தன் குடும்பத்திலுள்ளவர்களை கெட்ட வார்த்தையால் கண்டபடி
திட்டுகிறார். ஒருவர் இரண்டு மூன்று மனைவிகள் வைத்திருக்கிறார். இன்னும் எண்ண முடியாத
அளவுக்கு பல கொடுமைகளை இன்றைய குடும்பத் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதான்
பெரியவர்கள் சிறியவர்களுக்கு காட்டும் நல்வழிகளா? இவர்களிடம் ஆலோசனை கேட்டால் எப்படி இருக்கும். மனித
வாழ்வை நினைத்துப் பார்த்தாலே வேதனையாக இருக்கிறது. இன்று மனிதன் என்ற பெயரில் கேளாப்
பிசாசுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நோயாளியான
70 வயது பெரியவரிடம் ஐயா மூன்று வேளையும்
அரிசிச் சோற்றையே சாப்பிடாதீர்கள். ஒரு வேளையாவது கஞ்சி குடியுங்கள். உடலுக்கு நல்லது
என்றேன். கஞ்சியை குடித்து என்னை விரைவில் சாகச் சொல்கிறாயா என்று கேட்கிறார். இன்று
அவர் இறந்துவிட்டார். எப்படி இறந்தார் தெரியுமா? கை கால் விழங்காமல் கட்டிலில் கிடந்த படியே மலம், சிறுநீர் கழித்து புழுத்து நாற்றம்
எடுத்து போய் செத்தார். இதைப்போல் பல பெரியவர்களை நான் பார்த்தவன். பேசித் தோற்றவன்
அவர்கள் முட்டாளாக வாழ்ந்து கொண்டு என்னை முட்டாள் என்கிறார்கள். நாள் சந்திக்கும்
பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள், உறவினர்கள், இளைஞர்கள், இவர்களிடம் நல்ல உணவுகளை சாப்பிடுங்கள், நலமாக வாழுங்கள். என்று பார்க்கும் போதெல்லாம்
அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பேன். யார் நல்லவைகளை சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள்? அவர்களுக்கு சொந்த புத்தியும் இல்லை.
சொல்புத்தியையும் கேட்பதில்லை. இதன் பலன் என்ன?
சிலர்
நோய்களின் கொடுமையால் அதிக பணத்தை செலவழித்து இருந்து விட்டார்கள். பலர் தினமும் வேதனையுடன்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். துன்பப்பட்டு செத்தாலும் சாவேன். ஆனால் நீ சொல்லும்
நல்லவைகளை கேட்க மாட்டேன் என்கிறார்கள். சில பாட்டிகளிடம் கஞ்சி காய்ச்சினால் மாவை
புளிக்க வைத்து காய்ச்சக்கூடாது என்று நான் சொன்னால், அவர்கள் மாவை புளிக்க வைத்து காய்ச்சினால்
தான் கஞ்சியை மூன்று நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிட முடியும் என்கிறார்கள். இவர்களிடம்
ஆரோக்கிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா?
இன்று வயதான பெரியவர்கள் பல குடும்பங்களில் குழப்பத்தைத் தான் உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் நிம்மதியாக வாழவிட மாட்டார்கள், இந்த காரியத்தை பெண்கள் தான் அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறியவர்களுக்கு வழி காட்ட வேண்டிய பெரியவர்கள் வழி தடுமாறக் காரணம் என்ன? இவர்களின் அறிவை இழக்க செய்தது எது? நமக்கு புத்தி சொல்ல வேண்டியவர்களுக்கு புத்தி தடுமாறக் காரணம் என்ன? நோய்களால் முடங்கி கிடக்கிறார்களே அதன் விபரம் என்ன? அதற்கு நான் சொல்லும் உண்மையான ஒரே பதில் தீய உணவுகளை திண்பதால் தான், இந்த இயற்கை ரீதியான பதிலுக்கு யாரும் எதிர்வாதம் செய்ய முடியாது. அடுத்த கட்டுரையிலும் இதப் பற்றி தொடர்ச்சியாக பார்ப்போம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : இளைய சமுதாயத்தினரின் வழிகாட்டிகள் யார்? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Who are the mentors of the younger generation? - Siddha medicine in Tamil [ Health ]