ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
உயர்ந்த மனிதன் யார்? மேன் மக்கள் யார்?
தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு
துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்.
🪷🦜 வாழ்க்கையில் விழுந்தவர்களை தூக்கும் மனம்
படைத்தவர்கள் தான் வீழும்போது தானே எழுந்தவர் களாகத்தான் இருப்பார்கள்.
🪷🦜 வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும் போது அவன் காதுகளுக்கு
கேட்காத உயரத்தில் இருப்பான்.
🪷🦜 தோற்றவனுக்கு தோள் தட்டுங்கள். நீங்கள் அவன் நினைவில்
இருப்பீர்கள்.
🪷🦜 தெரிந்தவருக்கு உதவி செய்யும் போது நீங்கள் மனிதர்.
🪷🦜 தெரியாதவருக்கு உதவி செய்யும் போது நீங்கள்
கடவுளாவீர்கள்.
🪷🦜 பரவாயில்லை என்பதை காட்டிலும், பழகிவிட்டது என்ற வார்த்தைக்கு சற்றே வலி அதிகம்.🪷
🪷🦜🪷 உழைக்க வேண்டிய
வயது இது தான் என்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.🪷
🪷🦜🪷 வாழ வேண்டிய வயது
இதுதான் என்பதை மறந்து.🪷
🪷🦜🪷 நல்லா இருக்கறது
வேற.. நிம்மதியா இருக்கறது வேற...🪷
🪷🦜🪷 இங்க நிறைய பேர்
நல்லா மட்டும் தான் இருக்காங்க.🪷
🪷🦜🪷 வாழ்கையில்
நிம்மதியாக இருக்க இரண்டே வழிகள் தான்.🪷
🪷🦜🪷 ஒன்று நம்முடைய
பிரச்சினையை அடுத்தவரிடம் சொல்லாமல் இருப்பது,🪷
🪷🦜🪷 இரண்டு
அடுத்தவருடைய தனிப்பட்ட பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது.🪷
🪷🦜🪷 தங்களைச்
சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று
இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.🪷
அனைவரது மனதிலும் ஏதாவது ஒரு
எண்ண ஓட்டம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.
உறங்கும் போது கூட கனவுகள்
வழியாக எண்ணங்கள் வெளிப்படுகின்றன.
ஒவ்வொருவரது மூச்சுக்
காற்றிலும் எண்ணங்கள் பயணிக்கின்றன. இவ்வுலகில் ஒரு மனிதனது மூச்சு உள்ள வரை, அவரது
எண்ணச் சுழற்சி நிற்காது.
பொதுவாக எண்ணங்களை இருவகைப்
படுத்தலாம். நல்ல சிந்தனை மற்றும் தீய சிந்தனை.
நல்ல எண்ணங்கள் அனைத்து
உயிரையும் தன்னைப் போல நேசிப்பதில் துவங்கி, இறுதியில்
நம்மையும் மேன்மை படுத்தி, அநேகருக்குப் பயன் தரும்
வாழ்க்கையாக நிறைவு பெறும்.
தீய சிந்தனை பிறரை விட
உயர்வாகக் காணப்பட வேண்டும் எனும் பெருமையில் துவங்கி, இறுதியில்
பொறாமை, சினம் எனும் தீயால் அனைத்தையும் அழித்து விடும்.
ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில்
இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும்
விதிவிலக்கல்ல.
நாம் எந்த வயதில், எந்த
நிலையில், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நம் மனதின் தன்மைக்கு ஏற்றவாறு, நல்ல அல்லது தீய
எண்ணங்கள் உருவாகி நம்மை ஊடுருவிக் கொண்டே இருக்கும்.
ஆக நம் மனதில் நல்ல எண்ணங்களும், தீய
எண்ணங்களும் மாறி மாறி உருவாகி வெளிப்படுவது இயற்கையான இயல்பான செயல்.
நுட்பமாகச் சொல்வது எனில், மனதில்
தோன்றும் எண்ணங்களுக்கு, அந்த எண்ணங்கள் உதயமாகும் மனிதனது
விருப்பம் மட்டுமே காரணமில்லை. அவர் அறியாமலேயே, அவரது
மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றி பல வகை விருப்பங்களை அவருக்குள்
உருவாக்கிவிட்டு, அது அந்த விருப்பத்திற்குள் மறைந்து
கொள்ளலாம்.
ஆகவே மனதில் இவ்விதம்தான் எண்ணங்கள் தோன்ற வேண்டும் என நம்மால்
கட்டுப்படுத்த முடியாது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறுதான் எண்ணங்கள் இருக்க வேண்டும்
என்பதை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியாது.
எண்ணங்களை, “உதயமாகிறது”
என்ற வார்த்தையில் குறிப்பிடும் போதே, அவை தானாகவே நம்மில்
“தோன்றுபவை” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். '
'தானாக'' உருவாகும் ஒரு விசயத்தை,
அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்தி வசப்படுத்த முடியாது அல்லவா?
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥சிவம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : உயர்ந்த மனிதன் யார்? மேன் மக்கள் யார்? - எண்ணங்களின் இயல்பு [ ] | Philosophy of experience : Who is the highest man? Who are the people of Man? - Nature of thoughts in Tamil [ ]