'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.
ராம
நாமாவை ஏன் உச்சரிக்க வேண்டும்?
'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை
சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.
கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு
ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும். சுற்றியுள்ள மரம், செடி
கொடிகள் , பறவைகள்,
விலங்குகள் எல்லாம் 'ராம நாமா'
கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை
பெறலாம். இதுவும் சேவையே! ....
வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி
பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய்
முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால்,
சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால்
அவனால் 'ராம நாமா'
வை ஒரு முறை சொல்லமுடியும்.
யார்
அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம
நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும்
ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், செடியாய் பறவையாய் விலங்காய் இருந்தோமோ ! என்னவோ
அப்புண்ணிய பலனை ராமனே அறிவான்.
'ராம
நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில்
பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய
சக்திகளை நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும்
gene coding இல்
உள்ள குணங்களுக்கு காரணமான கோபம்,வெறுப்பு,பொய்,
பொறாமை,சூது,போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான gene coding யை அழித்து.
ராம நாம அதிர்வு சாந்தம்,பொறுமை,பணிவு,உண்மை
தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.
'யத் பாவோ தத் பவதி'--
எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!
'ராம
நாமா' சொல்ல சொல்ல பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம். அகில உலகையும்
வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது,தசரத
ராமனாக,சீதாராமானாக,ரகுராமனாக,கோதண்ட ராமனாக பெயருடன்(நாம ரூபமாக)வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே.
ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான
, பேரன்பே
வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
எண்ணம் ,
மனம் ,செயல் ,
உள்ளம் ,
உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா
இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று
ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.
நமது
ஒரே அடைக்கலம் 'ராம நாமா'.
அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும்
. மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா'
ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும்
அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி
) முக்தி தரும்.
'ராம நாமா'
மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின்
தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும்.
அது போல 'ராம நாமா'
வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க
நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம
ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும்
ராம என்ற நாமம் கொண்டுள்ளது.
எனவே,
ஒருவன்,
ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால்
அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன்
ஆகிறான்"
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே.
ராம நாம வரானனே என்று ராம நாமத்தை பார்வதி தேவியிடம் சொல்லிக்
கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமான்..
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன்
என்ற கடலில் கலப்பதற்கு, பூமியைப் புனிதப்படுத்திக் கொண்டு செல்லுகின்ற
மகாநதியே ராமாயணம்.
கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணனுக்குத்
தெரியும்.
இராமாவதாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது
மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை
ஸ்ரீராமனுடைய
ஜனன காலத்தில்
ஐந்து கிரகங்களும்
மிகவும் உச்ச
நிலையில் இருந்தது
அதனால் ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில்
வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம்..
ஜாதகத்தை வைத்துப் பூஜிப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும், ஜாதக
ரீதியாய்
ஏற்படக்கூடிய நவக்கிரக
தோஷ நிவர்த்தியும்,
ஸர்வ வியாதி நிவர்த்தியும்,
ஐஸ்வர்யஅபிவிருத்தியும்,
ஆயுள் ஆரோக்யமும் கிடைக்கும்.
பத்து திசைகளிலும் ரதத்தை செலுத்த வல்லவன் என்பதால், அயோத்தி
மன்னனுக்கு தசரதன் என்று பெயர்.
புத்திர காமேஷ்டி யாகம் செய்து யாகத்தில் தோன்றிய
யாக
புனித பாயசத்தை மூன்று மனைவியரும் உண்டார்கள்.
சுமித்திரைக்கு இரண்டு பங்கு பாயசத்தைக் கொடுத்துவிட
லஷ்மணன்
- சத்ருக்னன்
என்று இருவர் பிறந்தனர். கௌஸல்யாவுக்கு
ஸ்ரீராமனும், கைகேயிக்கு
பரதனும்
பிறந்தார்கள்.
ராமர் புனர்ப்பூச நட்சத்திரமும், கடகராசி கடகலக்னம்
பரதன் பூச நட்சத்திரம் கடகராசி
லட்சுமணன் ஆயில்யம் நட்சத்திரம் கடகராசி
சத்ருக்னன் மக நட்சத்திரம் சிம்மராசி
இவர்கள் பிறந்த மாதம் சித்திரை.
சிறந்த லக்னம்
கடகலக்னம்.
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள்.
சுகதுக்கங்களில் சலனம்அடையாமல் தான் ஆனந்தமாகவே
இருந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தை தருபவன்தான் ஸ்ரீராமன்.
கடலைத் தாண்டும் பொழுது அனுமனை அரவை என்ற அரக்கியும், சிம்ஹை
என்ற அரக்கியும் தடுத்தனர்.
அவர்களைத் தாண்டிச் செல்ல ராம நாமத்தைதான் உச்சரித்தார்
அனுமன்.
அப்பொழுதுதான் ராம நாம மஹிமையை உணர்ந்தான் அனுமன்.
`ராம' என்னும்
பெயர் சிறப்பை கம்பர் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' என்கிறார்.
ஸ்ரீராமர் பிறந்த நன்னாளை ஸ்ரீராம நவமி என்று
கொண்டாடுகிறோம்.
இது மகிழ்ச்சி கலந்த நன்னாள். அதை விரத தினமாக
அனுஷ்டிக்கிறோம்.
ஸ்ரீராம நவமி உற்சவம் பத்து தினங்கள் கோயில்களில்
கொண்டாடுவார்கள்..
நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.
பள்ளி எழுச்சி பாடுகின்றோம்
ராமா ஸ்ரீ ராம ராம ராமா ஸ்ரீ ராம ராம எழுந்தருளாய்
நாதனே..
ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் -
நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு சுப மங்களம்.
ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்கள்..!
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல
சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள்
யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான
அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில்
எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர்பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்,
அனைத்து வானரங்களும்
அங்கதனும்,
ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும்
தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட,
ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட,
வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு, அசோகவனம்
அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான்,
மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க
சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும்,
இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம்,
பன்முறை உன்னை
பணிகின்றோம்,
பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
ஜெய் ஸ்ரீராம்...
ஜெய் சீதாராம்..
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
இராமாயணம்: குறிப்புகள் : ராம நாமாவை ஏன் உச்சரிக்க வேண்டும்? - மஹாபெரியவா உபதேசாமிர்தம் [ ] | Ramayana: Notes : Why chant Rama Nama? - Mahaperiyava Upadesamirtham in Tamil [ ]