இராமர் ஏன் காட்டுக்குப் போனார்? பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ இராமாயணம்: குறிப்புகள் ]

Why did Rama go to the forest? Let's find out about - Notes in Tamil

இராமர் ஏன் காட்டுக்குப் போனார்? பற்றி தெரிந்து கொள்வோமா | Why did Rama go to the forest? Let's find out about

அவரவர் பார்வையில் அவரவர் ஒவ்வொரு காரணங்களைச் சொல்வர். ஆனால் ஒரு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தன் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான காரணத்தைக் கூறினார். எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும் கம்பெனியாக அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு நிர்வாகமாக இருந்தாலும் அதன் தயாரிப்புகள் தரமானதாக இருந்தால்தான் அதன் சந்தை மதிப்பு கூடும். அதன் தரத்தை உயர்த்துவதில் அந்தநிர்வாகத்தின் தலைமையின் சாதுர்யத்தாலும் திறமையிலும்தான் உள்ளது. அதனால்தான் அவர்கள் தொழிலாளர்களை பேச்சாலும் செயலாலும் ஊக்குவிப்பார்கள் அந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தொழிலாளர்களின் நடுவே உரையாற்றினார். "உதிரி பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் இராமர் ஏன் காட்டுக்குப் போனார் தெரியுமா. இராமாயணத்தில் உதிரிபாகத் தரக் குறைபாட்டால் தான் என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். கவனமாக கேட்க தொடங்கினர். மீண்டும் பேசத் தொடங்கினார். இராமர் தன் தந்தை தசரதர் சொல்லுக்கு கட்டுப்பட்டு காட்டுக்குப் போனார். தசரதர் இராமரை காட்டுக்கு ஏன் அனுப்பினார்? கைகேயிக்கு கொடுத்த இரண்டு வரத்தைக் காப்பாற்ற. தசரதன் எப்போது இரண்டு வரம் கைகேயிக்கு கொடுத்தார்? சம்பாசுரனை எதிர்த்து தசரதர் போருக்குப் போனார். கைகேயி தேர் ஓட்டுவதில் கை தேர்ந்தவர். ஆகையால் தசரதருக்கு தேரோட்டியாக சென்றாள். அப்படி போர் நடக்கும் போது சக்கரத்தின் அச்சாணி ஒடிந்து விட்டது. அப்போது கைகேயி தன் சாதுர்யத்தால் தன் கை விரலையே அச்சாணியாக்கி தேரை ஓட்டியதால் சம்பாசுரனை தசரதனால் அழிக்க முடிந்தது. போருக்கு பிறகு தசரதர் கைகேயிடம் நான் வெல்வதற்கு காரணமாயிருந்த உனக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். அவளோ எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும். இதை எப்போது கேட்கிறேனோ அப்போது தாருங்கள் என்றார். அதைத் தான் இப்போது இராமர் காட்டுக்கு போக வேண்டும். பரதன் நாட்டை ஆள வேண்டும் என இரண்டு வரங்கள் கேட்டாள். என சொல்லி நிறுத்தினார். எல்லோரும் இதை ஏன் இப்போது சொல்கிறார் என நினைத்தார்கள்.

இராமர் ஏன் காட்டுக்குப் போனார்? பற்றி தெரிந்து கொள்வோமா?

 

அவரவர் பார்வையில் அவரவர் ஒவ்வொரு காரணங்களைச்  சொல்வர்.

 

ஆனால் ஒரு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தன் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான காரணத்தைக் கூறினார்.

 

எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும் கம்பெனியாக அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு நிர்வாகமாக இருந்தாலும் அதன் தயாரிப்புகள் தரமானதாக இருந்தால்தான் அதன் சந்தை மதிப்பு கூடும்.

 

அதன் தரத்தை உயர்த்துவதில் அந்தநிர்வாகத்தின் தலைமையின் சாதுர்யத்தாலும் திறமையிலும்தான் உள்ளது. அதனால்தான் அவர்கள் தொழிலாளர்களை பேச்சாலும் செயலாலும் ஊக்குவிப்பார்கள்

 

அந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தொழிலாளர்களின்  நடுவே உரையாற்றினார்.

 

"உதிரி பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் இராமர் ஏன் காட்டுக்குப் போனார் தெரியுமா. இராமாயணத்தில் உதிரிபாகத் தரக் குறைபாட்டால் தான் என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். கவனமாக கேட்க தொடங்கினர்.

 

மீண்டும் பேசத் தொடங்கினார்.

 

இராமர் தன் தந்தை தசரதர் சொல்லுக்கு கட்டுப்பட்டு காட்டுக்குப் போனார்.

 

தசரதர் இராமரை காட்டுக்கு ஏன் அனுப்பினார்?

 

கைகேயிக்கு கொடுத்த இரண்டு வரத்தைக் காப்பாற்ற.

 

தசரதன் எப்போது  இரண்டு வரம் கைகேயிக்கு கொடுத்தார்?

 

சம்பாசுரனை எதிர்த்து தசரதர் போருக்குப் போனார். கைகேயி தேர் ஓட்டுவதில் கை தேர்ந்தவர். ஆகையால் தசரதருக்கு தேரோட்டியாக சென்றாள்.

 

அப்படி போர் நடக்கும் போது சக்கரத்தின் அச்சாணி ஒடிந்து விட்டது. அப்போது கைகேயி தன் சாதுர்யத்தால் தன் கை விரலையே அச்சாணியாக்கி தேரை ஓட்டியதால் சம்பாசுரனை தசரதனால் அழிக்க முடிந்தது.

 

போருக்கு பிறகு தசரதர் கைகேயிடம் நான் வெல்வதற்கு காரணமாயிருந்த உனக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். அவளோ எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும். இதை எப்போது கேட்கிறேனோ அப்போது தாருங்கள் என்றார்.

 

அதைத் தான் இப்போது இராமர் காட்டுக்கு போக வேண்டும். பரதன் நாட்டை ஆள வேண்டும் என இரண்டு வரங்கள் கேட்டாள். என சொல்லி நிறுத்தினார்.

 

எல்லோரும் இதை ஏன் இப்போது சொல்கிறார் என நினைத்தார்கள்.

 

பின் தொடர்ந்தார் "தேரில்"  அச்சாணி என்ற உதிரி பாகம் தரமானதாக இல்லாமல் உடைந்ததால் தான் இராமர் காட்டுக்கு போக நேர்ந்தது.

 

ஆகையால் இராமரே காட்டுக்கு போக காரணமாக இருந்த தரமற்ற உதிரி பாகம் போல் இல்லாமல் நாம்எந்த உதிரிபாகமானாலும் தரமானதாக இருக்கவேண்டும் என முடித்தார்.

 

இராமாயணம் நமக்கு எத்தனையோ நீதிகளை, செய்திகளை வழங்குகிறது. இப்படியும் இராமாயாணத்திலிருந்து இப்படி ஒரு செய்தியை அவர் எடுத்துரைத்த அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இராமாயணம்: குறிப்புகள் : இராமர் ஏன் காட்டுக்குப் போனார்? பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Ramayana: Notes : Why did Rama go to the forest? Let's find out about - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்