எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Why do negative words rule the mind? - Siddha medicine in Tamil

எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது? | Why do negative words rule the mind?

நம்மிடம் முரண்பாடான வார்த்தைகளே முதலில் மனதை சென்று அடைகிறது?

எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது?

நம்மிடம் முரண்பாடான வார்த்தைகளே முதலில் மனதை சென்று அடைகிறது? ஏன் என்று பார்ப்போம். ஒரு கூட்டத்தில் பேசும் ஒருவர் “நான் அடுத்தவர் மனைவிகளோடு தான் அதிக நாட்கள் வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று சொல்லும்போது அனைவரும் திகைப்புடன் கேட்டார்கள். அடுத்த சில நொடிகளில் நான் சொல்ல வந்தது என் தாயுடன் கழித்த நாட்களை தான் அப்படி சொன்னேன் என்று சொன்னார். என் தாயும் அடுத்தவர் மனைவி தானே என்று. அவருடைய வார்த்தைகள் முரண்பாடாக இருக்கும்போது மனது உடனே அதை ஆர்வத்துடன் கேட்டது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் தானும் இதே மாதிரி வந்து அவர் வீட்டில் சென்று அவர் மனைவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் முதல் வாக்கியத்தை சொல்வதற்கு பின்னாலே அவர் ஆஸ்பத்திரியில் தான் கண் முழித்தார். அடுத்த வாக்கியம் பேசுவதற்கு நேரம் கொடுக்கப் பட வில்லை. ஆதலால் எங்கே, எப்படி பேசக் கூடாது என்பதை முதலில் தெரிய வேண்டும். எப்போதும் எதிர்மறைகளை மட்டுமே மனதில் பதிய வைக்கக் கூடாது. மாறாக நேர்மறை எண்ணங்களை எப்போதுமே மனதில் எடுத்தால் எந்தவித கஷ்ட சூழ்நிலையும் நம்மை அண்டாது.  சரி. நாம் இப்போது ஆரோக்யத்திற்கு வருவோம். இன்று எத்தனை பெரியவர்கள் பழங்கால உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஒருவருமே சாப்பிடவில்லை. கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெரியவர்களைப் பற்றி பேச வேண்டாம். தனித்து வாழும் வயதான தம்பதிகள் பலர் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவராவது பழங்கால உணவுகளை சாப்பிட்டு வாழ வில்லையே. இன்றைய வயதான பெரியவர்கள் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மாட்டுப்பால், மாமிச வகைகள் இவைகளை அதிகமாக கொடுத்து வளர்த்தால் தான் அவர்கள் ஆரோக்கியமாகவும். பலசாலிகளாகவும் வாழ்வார்களாம். இதுதான் இன்றைய பெரியவர்களின் கருத்து. இவர்கள் சொல்லும் கருத்து சரியென்றால் சொல்பவர்கள் நோயில்லாமல் வாழவேண்டும் ஏன் முடங்கிக் கிடக்கிறீர்கள். இது தான் உங்கள் வாரிசுகளுக்கு நல்வழி காட்டும் லட்சணமா? இளைய தலைமுறையினரிடம் மாட்டுப்பால் மாமிச வகைகள் சாப்பிடாதீர்கள்: என்று சொன்னால் பலர் மறுத்தாலும் சிலர் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் இந்த கிழவன், கிழவிகள் தான் கடுமையான எதிர்வாதம் செய்கிறார்கள். இவர்களுக்கு பெயர் பெரிய மனிதர்கள். இவர்களுக்கு இளைய சமுதாயத்தினர் மரியாதை கொடுக்க வேண்டும். பெரியவர்கள் செய்யும் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? கடவுள் பக்தி-மூடப்பழக்கங்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் இவைகளை புகுத்தியே இளைய சமுதாயத்தினரின் வாழ்வை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களா? இத்துடன் தேவையில்லா கடவுள்கள்.

உலகில் எல்லா செயல்களும் கடவுளால் தான் நடக்கிறது என்னும் பொய்களை உங்கள் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்கிறீர்களே கடவுளைப் பற்றி நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கலாம். கடவுளை நேரில் பார்த்தவர்கள் ஒருவர் உண்டா? உலகம் முழுவதும் 150க்கும் மேல் நாடுகள் இருக்கிறது. இதில் எந்த நாட்டில் கடவுள்கள் வாழ்கிறார்கள் எங்கே குடும்பம் நடத்துகிறார்கள்? தமிழ் நாட்டிலிருக்கும் கடவுள்கள் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கிறார்களா? சிலைகளை செய்வது யார்? கோவில்களை கட்டுவது யார்? கோவிலுக்குள் சிலைகளை தூக்கி வைப்பது யார்? ஒரு சிலையாது இது வரை பேசி இருக்கிறதா? கண்ணை திறந்து இந்த உலகத்தை பார்த்திருக்கிறிதா? சிறிது தூரம் நடந்து காட்டியிருக்கிறதா? எந்த சிலையாவது தானாக உருவாகியிருக்கிறதா? கடவுளை கோவிலுக்குள் வைத்து ஏன் பூட்டி வைக்கிறீர்கள்? நாட்டிலுள்ள எல்லா கோவில்களையும் பூட்டாமல் வருடம் முழுவதும் திறந்தபடி வைக்க தயாரா? சிலைகளை கோவிலுக்குள் பூட்டி வைத்து சாதரண மனிதன் காவல் காப்பது என்? அவர் உணவு உண்பதை பார்த்திருக்கிறீர்களா? கடவுளுக்கு முன் உணவுப்படையல் வைக்கிறீர்களே என்றைக்காவது கடவுள் சாப்பிட்டதுண்டா? கடவுள் பூஜைக்கு தேவையான பூஜைப் பொருட்களை உருவாக்குவது யார்? பூஜைப் பொருள்களை கடவுளால் உருவாக்கித்தர முடியுமா? கோவிலுக்கு உள்ளும் வெளியும் பல ஆயோக்கியத்தனங்கள் நடப்பது ஏன்? கொலை கொள்ளை, கற்பழிப்பு இன்னும் பல கொடுமைகள் உலகெங்கும் நடக்கிறதே அவைகளை ஏன் கடவுள் தடுக்கவில்லை? கடவுள் இருக்கும் போது போலிஸ்-கோர்ட்-நீதிமன்றங்கள்-ராணுவம் தேவையா? பக்தர்களுக்கு ஏன் இத்தனை நோய்கள்? நோய்கள் வந்த பக்தர்கள் கடவுளிடம் செல்லாமல் மருத்துவமனை செல்வது என்? எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்றால் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் என்? கடவுள் சிலைகள் கடத்தப்படுவது ஏன்? கோவில் பூசாரியை கொன்று உண்டியல் பணம் திருட்டுப்போவது ஏன்? மேல் உலகத்தில் வாழும் உயர்ந்த சாதி முருகன் தாழ்ந்த சாதி குரத்தியை கலப்பு திருமணம் செய்யலாமாம். சாதாரண மனிதன் கலப்பு திருமணம் செய்தால் வெட்டு குத்து கொலை ஏன்? கடவுளுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதியா? எத்தனையோ பெண்கள் ஆண்களால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அப்பெண்கள் அலறி துடிக்கும் போது ஒரு கடவுளாவது காப்பாற்ற வந்தாரா? இன்றைய மனிதன் லட்சக்கணக்கான பொருள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். கடவுளால் ஒரு பொருளை உருவாக்க முடியுமா? இயற்கை கடவுள் பல வடிவங்களில் செயல்பட்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் உணவு தண்ணீர் மற்றும் அனைத்து பொருட்களையும் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கிறார். பெரியவர்களே இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு அறிவுப்பாடம் புகட்டுங்கள். அழிவுப்பாடம் புகட்டாதீர்கள். கடவுள்-ஜோதிடம்-ஜாதகம் பூஜை-பேய்-பிசாசு-மை வசியம்-தகடு கட்டுதல்-மந்திரம்-பில்லி சூனியம் செய்வினை - நல்லநேரம்-கெட்ட நேரம்-சகுனம் பார்த்தல்-இவைகளையும் இதுபோல் இன்னும் நூற்றுக்கணக்கான பொய்களையும் இளம் வயதினர்களிடம் புகுத்தி அவர்களை முட்டாளாக்காதீர்கள். உங்களுடைய முட்டாள்தனம் உங்களோடேயே அழிந்து நாசமாகப் போகட்டும். இளம் வயதினர்களை அவர்கள் மனம்போல் அறிவாளிகளாக வாழவிடுங்கள். வரதட்சணை, சீர்வரிசை வேண்டாம். எளிமையான திருமணம் போதும் என்ற கொள்கையுடைய இளைஞர்களை அவர்களின் மனம்போல் விட்டுவிடுங்கள். பெரியவர்களால்தான் பல நல்ல இளைஞர்களும் நாசமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு அன்பு வழியும், அறிவு வழியும் ஆரோக்கிய வழியும் காட்டி மனித தெய்வங்களாக வாழ்ந்தார்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் போற்றிப்புகழலாம். அவர்கள் அறிவாளிகள். அதனால்தான் அவர்கள் ஆயுள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து அறிவாளிகளை உருவாக்கினார்கள். அவர்கள் ஆயுள்வரை அடுத்தவர் தயவை எதிர்பார்த்து வாழவில்லை. மரணம் வரை உழைத்தார்கள். அன்றைய பெரியவர்கள் அதாவது நம் முன்னோர்கள் மரணத்தின் போது இன்றைய பெரியவர்களைப் போல் நோய்கள் பலவந்து புளுத்து நாரிப்போய் சாகவில்லை. உடல் நலம் தரும் மணமுள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்ததால் அவர்கள் உடலில் நல்ல ரத்தம் ஓடியது. நல்ல ரத்தம் இயற்கை அறிவை கொடுத்து இயற்கை அறிவை வளர்த்தது. அன்றைய பெரியவர்கள் தாங்கள் சாப்பிட்ட நல்ல இயற்கை மணமுள்ள உணவுகளை தங்கள் வாரிசுகளுக்கும் கொடுத்து வளர்த்தார்கள். அவர்களின் வாரிசுகளின் உடலிலும் நல்ல ரத்தம் ஓடியது. நல்ல ரத்தம் உழைப்பாளிகளை உருவாக்கியது. மனித நேயத்தை வளர்த்தது. மற்ற உயிர்களையும் கொல்லாமல் பாதுகாக்க செய்தது. அன்றைய அன்பு உலகத்தில் முதியோர் இல்லங்கள் இல்லை. அன்பு உலகத்தையும் ஆரோக்கிய வாழ்வையும் கற்றுக் கொடுத்த மனித தெய்வங்களை அன்றைய இளைய சமுதாயத்தினர் தவிக்கவிடுவார்களா? அன்றைய பெரியவர்களுடன் வாழ்ந்து அவர்களை வணங்கியவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். இன்று முதியோர் இல்லங்களை உருவாக்குவது யார்? இன்றைய பெரியவர்கள் தான் உருவாக்குகிறார்கள். இன்றைய பெரியவர்கள் நல்ல உணவுகளை மட்டும் சாப்பிட்டிருந்தால் அவர்கள் நல்ல ரத்தம் உருவாகியிருக்கும். நல்ல ரத்தம் அறிவையும் ஆரோக்கியத்தையும் உடலில் வளர்த்திருக்கும். தீய உணவுகளை தின்று அறிவையும் ஆரோக்யத்தையும் அல்லவா இழந்துவிட்டார்கள். தீய உணவுகள் முதலில் அறிவை கொல்லும். அதன் பின்புதான் ஆரோக்கியத்தை கொல்லும். இன்றைய பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளைத்தான் அவர்களின் வாரிசுகளுக்கும் கொடுத்து வளர்க்கிறார்கள். சிந்திப்பீர். வாரிசுகளின் உடலில் நல்ல ரத்தம் உற்பதியாகுமா? உடலில் கெட்ட ரத்தத்தை சுமந்து வாழும் வாரிசுகளிடம் அன்பும் பண்பும் இருக்குமா? ஒரு சாதாரண மனிதன் ஒருமுறை சிறுநீர் கழித்த இடமே கெட்ட நாற்றமாக இருக்கும். வயதானபின் பல நோய்களுடன் வீட்டுக்குள்ளே சிறுநீர் கழித்தால் யார் சகித்துக்கொண்டிருப்பார்கள். வீடெல்லாம் நோய்க்கிருமிகள் உருவாகி மற்றவர்களுக்கும் பரவுமே. இன்று பல கோடிஸ்வரர்களுக்கு உண்ண உணவும் பராமரிப்பும் கிடைக்கவில்லை. நல்ல உணவுகளை சாப்பிட்டும் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாகாமலும் வாழ்ந்தால் இந்த கேவலமான நிலை வருமா? ஒழுங்கற்ற உணவும் தீயபழக்கங்களும் பயன்படுத்தி உடலை பாழாக்கி படுத்துக் கொண்டு என்னை யாரும் பராமரிக்கவில்லை என்று சொல்வது அவமானமாக தெரியவில்லையா?நம்மிடம் முரண்பாடான வார்த்தைகளே முதலில் மனதை சென்று அடைகிறது?


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Why do negative words rule the mind? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்