கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.
கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
கருணையின் முகம் காண கடவுளை தான்
பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்
இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன
விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.
👉 தேங்காயை தரும் தென்னை மரம், மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த
பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும்.
👉 உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை குறிக்கிறது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
👉 இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை
குறிக்கிறது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும்
பெறாமல் நிற்கின்றது.
👉 அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது.
👉 இறைவனின் சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளால் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயல் தான் தேங்காய்
உடைப்பது.
👉 இதன் காரணமாகவே முதலில் தேங்காய் உடைத்து பிறகு இறைவனுக்கு பூஜை செய்கின்றனர்.🙏
🌴🌴🌴
21
தலைமுறை பாவமும் கழியும்...
இந்த பரிகாரத்தை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று
செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை
செய்யலாம் எத்தனையோ தானங்களை நம் கையால் வாங்கி செய்திருப்போம். அன்னதானம் கூட
செய்திருப்போம். ஆனால், இந்த தானத்தை செய்திருக்க மாட்டோம். அப்படி என்ன ஒரு பெரிய தானம். இந்த
தானத்தை கொடுத்தால்
21 தலைமுறை பாவமும் கழியும்.
21 தேங்காய் வாங்கி தானம் கொடுங்கள்.
மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி உங்கள்
கையால் அடுத்தவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். கோவில் வாசலில்
இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள்
கைகளால் தானம் கொடுங்கள். மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக் கூடாது.
ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும்
கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஒரு தேங்காயை ஒருவருக்கு என்ற வீதம், 21 பேருக்கு 21 தேங்காய்.
கொஞ்சம் தயங்காமல் சிரமப்பட்டு இந்த
பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்காக ஆக கூடிய செலவு கூட மிகவும் குறைவுதான்.
ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே
வரும். பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக தீரும்.
குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும்
பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம்
கைவிடும்.
🙏
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? - தேங்காய் பரிகாரம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Why do you break coconuts in the temple? - Coconut remedy in Tamil [ spirituality ]