ஸ்ரீ மகாலட்சுமிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு – ஏன்? - இதோ விளக்கம்
ஏன் தாமரை மலரில் மகாலட்சுமி காட்சி தருகிறார்?
ஸ்ரீ
மகாலட்சுமிக்கும் தாமரைக்கும் நெருக்கமான
பிணைப்பு உண்டு – ஏன்? - இதோ விளக்கம்
ஸ்ரீ இலட்சுமி எனும் சொல் சமஸ்கிருதத்தின் மூலத்தில் இருந்து வந்தது.
இதன் பொருள் ஒன்றை ஈர்ப்பது. அல்லது இலட்ஷிய என்பது இலக்கு என்பதையும்
குறிக்கும்.
திருப்பதியில் முதல் கால பூஜை பெருமாலுக்கு தங்க பூ அர்சனையுடன் தான்
தொடங்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தன்மை இந்த தங்க தாமரை பூவுக்கு
உண்டு.
வங்காளத்தில் தங்க தாமரை பூவால் ஸ்ரீ இலட்சுமி தேவியை வணங்குவது
வழக்கம். கொல்கத்தா போன்ற நகரில் ஸ்ரீமகாலட்சுமியை தங்க தாமரை ரூபமாக
வழிபடுகின்றனர்.
ஸ்ரீ இலட்சுமி தேவிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு.
தங்க தாமரை மலரே இலட்சுமி தேவியின் இருப்பிடம் என்கிறது வரலாறு.
தங்க தாமரையில் இருப்பதால் தான் இலட்சுமியை பத்மப்ரியா என்ற பெயர்
கொண்டும் அழைக்கின்றனர்.
தங்க தாமரையை விரும்பும் வகையில் ஸ்ரீ இலட்சுமியின் பெயர் பத்மலதாரா
தேவி என்றும். தாமரை மாலையை அணிந்திருக்கையில் ஸ்ரீ இலட்சுமியை பத்ம முகி என்றும், தாமரை போல் முகம்
ஒளிர்கின்ற போது பத்மாக்ஷி என்றும், இலட்சுமியின்
திருக்கண் தாமரையை போன்று ஒளிர்கின்ற போது பத்மாஷ்டா என்றும். கையில் தாமரையை
ஏந்தியிருக்கையில் பத்ம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இன்னும் நூற்றுக்கணக்கான பெயர்களை கொண்ட அம்பிகையை ஜகன் மாதா என்று
அழைக்கிறது ஶ்ரீ மஹாலட்சுமி ஆஷ்டகம். இவரை வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற பொருட்களாக
இருப்பது தங்க தாமரை பூ, சந்தனம், குங்குமம், வெற்றிலை, உலர் பழங்கள், பழங்கள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், அரிசி மற்றும்
தேங்காய்.
வியாழக்கிழமைகளில் மற்றும் முழு நிலவு நாளான பெளர்ணமியில் ஸ்ரீ
இலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்ததாகும். இலட்சுமியின் திருவுருவத்தை வடிக்கிற
போது, தங்க காசுகள் அள்ளி வழங்குவதை போலவும், அவருக்கு பின்
யானைகள் இருப்பது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அவரின் ஐஸ்வர்யத்தை வழங்கும் பலத்தை உலக மக்களுக்கு
புலப்படுத்துவதாக உள்ளது.
இலட்சுமி தேவி வழங்க கூடிய ஐஸ்வர்யம் என்பது வெறும் பணம் செல்வத்தை
மட்டும் குறிப்பதல்ல. இலட்சுமி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு புகழ், பலம், வெற்றி, தங்கம், நவதானியங்கள், நல்ல புத்திரர்கள், மகிழ்ச்சி,
ஆனந்தம், புத்தி, அழகு, உயர்ந்த இலட்சியம், உயர் தவம், அறம், நல்ல பண்புகள், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய பதினாறு விஷயங்களும் அவர்களுக்கு கிடைக்கும்.மேலும்
ஸ்ரீலட்சுமி தேவி பல ரூபங்களில் அருள் பாலிக்கிறார் உதாரணமாக ஶ்ரீதேவி, பூதேவி மற்றும் நீலா
தேவி .
மஹாலட்சுமிய அஷ்ட இலட்சுமி என 8 வகையாக வழிபடுகின்றனர்.
ஒரு மனிதனுக்கு அஷ் லட்சுமி
கடாச்சம் அவசியம் தேவை வாழ்வில் உயர்வதற்கு. இந்த தங்க பூவில் பூஜை செய்யலாம்
இந்த பூவை காலையில் தினசரி 8
ஸ்ரீ மகாலட்சுமி (அஷ்டலட்சுமி) பெயரை சொல்லி ஸ்ரீமகாலட்சுமி படத்தின் முன்
அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஒரு முக்கிய குறிப்பு தங்கத்திலும்
தாமரையிலும் கட்டாயம் வாசம் செய்வால். எனவே தான் இந்த தங்க பூவால் அர்சனை செய்வது
மிக மிக விஷேஷமானது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : ஏன் தாமரை மலரில் மகாலட்சுமி காட்சி தருகிறார்? - குறிப்புகள் [ ] | Amman: History : Why does Mahalakshmi appear in a lotus flower? - Tips in Tamil [ ]