கணையம் பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்து கொடுக்கும் தன்மையை இழந்து விடுகிறது.
ஏன் உடல் பலகீனம் அடைகிறது?
கணையம்
பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்து கொடுக்கும் தன்மையை
இழந்து விடுகிறது. கணையம் பிரித்து கொடுக்கும் சத்துக்கள் நம் உடலின் பல பகுதிகளிலும்
தங்கினால் உடல் பலம் அடையும். உண்ணும் உணவின் சத்துக்கள் நம் உடலில் தங்காவிட்டால்
பலகீனம் அடையும். கணையம் பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள்.
அனைத்தும் நாம் கழிக்கும் சிறுநீருடன் வெளியேறி விடும். அத்துடன் நாம் நமது உடலில்
சர்க்கரை நோய் வருவதற்கு முன் சேமித்து வைத்திருந்த சத்துக்களும், பலமும் சிறிது சிறிதாக உறிஞ்சப்பட்டு
சிறுநீர் வழியாக தினமும் வெளியேறிக்கொண்டிருக்கும். சிறுநீர் தண்ணீராகத் தானே போகிறது.
பின் எப்படி உணவிலும், உடலிலும்
உள்ள சத்துக்கள் வெளியேறும் என்று நீங்கள் கேட்கலாம். அதன் விளக்கம் - நாம் உணவை சாப்பிட்டு
ஒன்றறை மணி நேரம் சென்ற பின் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கிறோம். சிறுநீர் பரிசோதனை
செய்யும் கண்ணாடி டியூப்பிற்குள் முதலில் தண்ணீர் போல் இருக்கும். நீல நிற திரவத்தை
சிறிதளவு ஊற்றுகிறோம். அதை எரியும் மெழுகுதிரியின் தீயில் வைத்து சூடு செய்கிறோம்.
அந்த நில நிற திரவம் கொதித்த பின் அதில் சுமார் முப்பது சொட்டுக்கள் சிறுநீரை ஊற்றி
நன்றாக குலுக்கி மீண்டும் சூடு செய்கிறோம். மீண்டும் கொதித்த பின் அரை நிமிடம் சென்ற
பின் பார்த்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை பார்க்கலாம்.
1. சிறுநீரில் சர்க்கரை இல்லாவிட்டால்
ஊற்றிய நீலநிற கலர் திரவம் அப்படியே நீலக்கலராக தண்ணீர்போல் இருக்கும்.
2. இளம் பச்சைக் கலராக மாறினால் சர்க்கரையின்
அளவு சிறுநீரில் ஒரு பாயிண்டாக இருக்கும். அப்போது டியூப்பினுள் இருக்கும் திரவம் சற்று
குளுகுளுப்புடன் இருக்கும். குளுகுளுப்பு என்றால் அடர்த்தி. அதாவது திக்காக இருக்கிறது
என்று பொருள். இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 இருக்கும்.
3. மஞ்சள் நிறமாக மாறினால் இரண்டு பாயிண்ட்
இப்போது டியூப்பினுள் இருக்கும் திரவம் இன்னும் சற்று அதிக குளுகுளுப்பாக இருக்கும்.
இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 240
வரை இருக்கும்.
4. ஆரஞ்சு கலராக மாறினால் மூன்று பாயிண்ட்
இப்போது டியூப்பினுள் இருக்கும் திரவம் இன்னும் சற்று அதிக குளுகுளுப்பாக இருக்கும்.
இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 320
வரை இருக்கும்.
5. திக்கான சிகப்பு கலராக இருந்தால்
நான்கு பாயின்ட் இப்போது டியூப்பினுள் உள்ள திரவம் இன்னும் சற்று அதிக குளுகுளுப்பாக
இருக்கும். இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 400 வரை இருக்கும்.
6. இன்னும் கலர் கூடும்போது ஐந்து பாயிண்ட்
இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 500
வரை இருக்கும். சிலருக்கு 500க்கு
மேலும் இருக்கும்.
நாம்
உண்ணும் உணவின் சத்துக்கள் எப்படி சிறுநீரின் வழியாக வெளியேறுகிறது என்பதை டெஸ்ட்டியூப்பினுள்
இருக்கும் திரவத்தின் குளுகுளுப்பான அடர்த்தியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். சிறுநீர்
பரிசோதனைக்கு பயன்படும் முப்பது சொட்டு சிறுநீரில் மட்டும் இவ்வளவு சத்துக்கள் வெளியேறினால், நாம் தினமும் வெளியேற்றும் சிறுநீரில்
எவ்வளவு சத்துக்கள் வெளியேறும். இப்படி சிறுநீரின் வழியாக உணவின் சத்துக்கள் வெளியேறுவதால்
தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் பலகீனம் வருகிறது.
சில
மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை சர்க்கரையின்
அளவை ரத்தத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். அடிக்கடி ரத்தப்
பரிசோதனை செய்து பார்த்து இது வரை என்ன பலனை கண்டீர்கள்? நோயிலிருந்தும் மருந்து மாத்திரைகளில்
இருந்தும் விடுதலை அடைந்தவர்கள் ஒருவராவது உண்டா? இயற்கை மருத்துவம் பார்த்து நோய்கள் குணமானவுடன் உணவுப்
பழக்கத்தை நாங்கள் சொல்கிற படி சரியாக வைத்துக் கொண்டால் அவர்கள் ஆயுள் உள்ளவரை எந்தப்
பரிசோதனைகளும் பார்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ரத்தம் குறைவாகத்தான்
இருக்கும். அதனால் அடிக்கடி பரிசோதனைக்கு ரத்தம் எடுப்பது நல்லதல்ல. இயற்கை மருத்துவம்
பார்த்த பின் உடலில் சுத்தமான புதிய ரத்தம் தேவையான அளவு உற்பத்தியாகிவிடும். உங்களின்
உடலிலுள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்களே உங்கள் வீட்டில்
வைத்தே பரிசோதனை செய்து சிறுநீரில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து
கொள்ளலாம். மருத்துவமனைக்கும், தனியார்
ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கும் சென்று காத்திருக்க வேண்டாம். நம் வீட்டில் சிறுநீர்
பரிசோதனை செய்து பார்க்க ஒரு வேளைக்கு ஐம்பது பைசாதான் செலவாகும்.
அருகில்
உள்ள படம் தான் டெஸ்ட்டியூப் படத்தில் உள்ள அளவுதான் மருத்துவக் கலவை ஊற்ற வேண்டும்.
ஆங்கில மருந்துக்கடைக்கு சென்று சர்க்கரை நோய்க்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் டெஸ்ட்டியூப்
வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் டியூப்பினுள் ஊற்றி பரிசோதனை செய்து பார்க்க 100 மில்லி அளவு உள்ள மருந்து பாட்டில்
ஒன்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். கடைக்கு சென்று ஒரு மெழுகுதிரியும் வாங்கிக் கொள்ளுங்கள்.
முக்கியக் குறிப்பு: சர்க்கரையின்
அளவு கூடும்போது ரத்தத்திலும் சிறுநீரிலும் ஒன்றுபோல் கூட வேண்டும். குறையும் போதும்
ஒன்றுபோல் குறைய வேண்டும். இப்படி உள்ளவர்களுக்கு மட்டும் தான் சிறுநீர் பரிசோதனை மட்டும்
பயன்படும்.
உணவைச்
சாப்பிட்டு ஒன்றரை மணி முதல் இரண்டு மணிக்குள் சிறுநீர், எடுத்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உணவை சாப்பிடுமுன் சிறுநீர் கழித்து விடுங்கள். இதை சரியாக செய்யுங்கள். சிறுநீர் பரிசோதனையின்
சர்க்கரையின் அளவு விபரங்களை இதற்கு முன் உள்ள கேள்வி பதில் விபரத்தில் படித்து தெரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் பரிசோதனைக்கு வாங்கும் மருந்து கலவை பாட்டிலிலும் ஒவ்வொரு பாயிண்டிற்கும்
கலர் வரிசையாக படம் போட்டிருப்பார்கள். அதைப்பார்த்து சர்க்கரையின் அளவை நீங்கள் தெளிவாக
தெரிந்து கொள்ளலாம்.
ஒரு
சர்க்கரை நோயாளி வாரம் ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்வேன் என்று என்னிடம் சொன்னார்.
அடிக்கடி ரத்தம் உடலில் எடுத்தால் நல்லதல்ல என்றேன். அவர் இறைத்த கிணறு தான் ஊறும்
என்றார். பூமியில் நீர்வளம் இருந்தால் தானே கிணற்றில் தண்ணீர் ஊறும். பூமி வறட்சியாக
இருக்கும் போது கிணற்றில் தண்ணீர் ஊராது. அதுபோல் தான் சர்க்கரை நோயாளிகளின் உடலில்
ரத்தம் குறைவாக இருப்பதால் அடிக்கடி ரத்தம் எடுக்கக்கூடாது என்று அவரிடம் சொன்னேன்.
சில மருத்துவர்கள் நோயாளியின் உடலில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்கும் போது, சாப்பிட்டு ஒன்றரை மணிமுதல் இரண்டு
மணிக்குள் பரிசோதித்து சரியாக சொல்வார்கள். சில மருத்துவர்கள் நோயாளிகள் எந்த நேரம்
சென்றாலும் உடனே பரிசோதனை செய்து விடுவார்கள். சாப்பிட்ட நேரத்தையும் கேட்க மாட்டார்கள்
என்ன சாப்பீட்டீர்கள். எந்த அளவு சாப்பீட்டீர்கள் என்றும் கேட்க மாட்டார்கள் ஒரு நோயாளி
சாப்பிட்டு நான்கு மணிநேரம் சென்ற பின் பரிசோதனைக்கு சென்றிருப்பார். அப்போது உணவு
அதிகம் சீரணமாகி இருக்கும். அப்போது சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். பரவாயில்லை
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்படியே உணவுப்பழக்கத்தை வைத்துக்
கொள்ளுங்கள் என்பார். சர்க்கரையின் அளவு குறைந்து விட்டதாக நினைத்து நோயாளி ஆனந்தமடைவார்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் இனி உங்களுக்கு மருந்து மாத்திரை வேண்டாம்
என்று அந்த மருத்துவர் சொல்லலாமே. சொல்ல மாட்டார். உங்கள் ஆயுள் உள்ளவரை மருந்து மாத்திரை
சாப்பிட சொல்வார். கைநிறைய கொடுத்தும் அனுப்புவார். இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு
ஒரு வழி தான் இருக்கிறது இயற்கை மருத்துவத்திற்கு வந்தால் தான் உடல் பலகீனம் போக்கி
நோய்களையும் குணமாக்க முடியும். இயற்கை மருத்துவர்கள் கொடுக்கும் உயிர்ச்சத்துள்ள இயற்கை
உணவுகளாலும், உடலுக்கு
நலம் தரும் சைவ உணவுகளாலும், கருணை
அன்பு தாய்மை உள்ளம் கொண்ட இயற்கை அன்னை வழங்கும் கசப்பு, துவர்ப்பு கொண்ட பத்துக்கும் மேற்பட்ட
பலவகை மூலிகைகளாலும் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்வாழ்வு கொடுக்க முடியும். இன்று
அதிக மக்கள் சத்து ஊசி குத்திக் கொள்கிறார்கள். மாத்திரைகள் சத்து டானிக்குகள் சாப்பிடுகிறார்கள்.
அறிவில் சிறந்து விளங்கும் மனித இனம் சிந்தித்து பார்க்க வேண்டும் உணவிலிருந்து சத்துக்கள்
கிடைக்குமா? அல்லது
ஊசி மருந்து மாத்திரைகளில் சத்துக்கள் கிடைக்குமா? உணவிலிருந்து தான் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற
முடியும் என்பதை உணர வேண்டும். நோய்களை குணமாக்கி மீண்டும் நோய்கள் வராமல் நலமுடன்
வாழவைக்கும் உணவு வகைகள் இயற்கை மருத்துவர்களுக்குத் தான் தெரியும். மற்ற மருத்துவர்களுக்கு
மேலும் மேலும் நோய்களை உருவாக்கும் உணவுகளைத் தான் சொல்லிக் கொடுக்க முடியும். மற்ற
மருத்துவர்கள் எல்லோரும் தேங்காய் சாப்பிடாதே. பழங்கள் சாப்பிடாதே. பூமிக்கு அடியில்
விளைவதை சாப்பிடாதே என்று சொல்லி நோயாளிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். உடலை
பலகீனமாக்கி கொண்டிருக்கிறீர்கள். தேங்காய் தான் சர்க்கரை நோயாளிகளின் உடல் பலகீனத்தை
போக்கி இருக்கிறது. பூமியில் விளையும் நோய்களை குணமாக்குவதில் முதல் உணவாக உணவுகளின்
அரசன் யார் என்று கேட்டால் தேங்காய் தான் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது. ஆகவே
தேங்காய்க்கு இணையான உணவு பூமியில் வேறு எதுவுமே இல்லை. தேங்காயை உணவாகக் கொடுத்தே
எல்லா நோய்களையும் குணமாக்கலாம். சர்க்கரை நோயாளிகளின் முதல் நண்பன் தேங்காய். தேங்காய், பச்சை நிலக்கடலை, பச்சை நிலக்கடலைப் பருப்பு, வறுக்காத எள்ளும் கருப்பட்டியும்
கலந்து இடித்த இயற்கை லட்டும், சீசன்களின்
கிடைக்கும் பழங்கள் அனைத்தும் மற்றும் காய்கள்,
கீரைகள், கிழங்கு வகைகள் அனைத்தும் சாப்பிட
வேண்டும்.
தாய்
தன் குழந்தையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு பசி வந்தால் அழும்.
அப்போதுதான் நல்ல உணவுகளை மட்டும் தேவையான அளவு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு பேசும்
சக்தி வருவதற்கு முன் பசி வந்தால் பசியை அழுது தெரிவிக்கும்படி இயற்கை அமைத்திருக்கிறது.
இன்று எல்லோரிடமும் பணவசதி இருப்பதால் வீடுகளில் உணவுகள் தாராளமாக இருக்கிறது. இன்று
பல பெண்கள் குழந்தை கொளுகொளுவென்று வேகமாக வளர வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தை பசி
வந்து அழுவதற்கு முன்பே உணவை அடிக்கடி ஊட்டுகிறார்கள். சிறு வய்திலேயே குழந்தைகளுக்கு
அதிகப்படியான உணவை அடிக்கடி ஊட்டுவதால் உள்ளுறுப்புகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது.
இதனால் சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. உடல் பருமனும் மற்ற நோய்களும்
வரலாம். குழந்தைக்கு பசி வந்து உணவு தேவையாக இருந்தால் தாய் உணவை குழந்தையின் வாயின்
அருகில் கொண்டு சென்றவுடன் ஆவலுடன் வாயை திறந்து சாப்பிடும். உணவு தேவையில்லையென்றால்
வாயை மூடியபடி முகத்தை திருப்பிக் கொள்ளும். சில பெண்கள் குழந்தை தன் வாயை இருக்கமாக
மூடினாலும் விடுவதில்லை. வலுக்கட்டாயமாக உணவை திணிப்பார்கள். குழந்தை பள்ளிக்கு செல்லும்
காலம் வந்த பின்பும் பெரியவனாக வளரும்போதும் நினைத்த நேரமெல்லாம் அடிக்கடி உணவை கொடுத்து
வளர்க்காதீர்கள்.
ஒரே வீட்டில் ஒரே வகையான உணவுகளை சாப்பிட்டு வாழும்
தம்பதிகளில் கணவனுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மனைவிக்கு இல்லையே ஏன் ?"
கணவனும்
மனைவியும் ஒன்றாய் அமர்ந்து ஒரே உணவை சாப்பிடுகிறார்கள். கணவன் வெளியில் வேலைக்கு செல்கிறான்.
வேலைக்கு சென்ற இடத்தில் இடைப்பட்ட சில நேரங்களில் கிடைத்ததை தின்கிறான். இதனால் கணவனின்
கணையம் பழுதடைந்து சர்க்கரை நோயாளியாகிறான். மனைவி கணவனுடன் சேர்ந்து சாப்பிட்ட உணவோடு
நிறுத்திக் கொள்கிறாள். இடையில் எதையும் தின்னாமலிருப்பதால் மனைவி சர்க்கரை நோயிலிருந்து
தப்பித்துக் கொள்கிறாள். அதுபோல் கணவன் வீட்டில் சாப்பிட்ட உணவோடு நிறுத்திக் கொண்டு
வெளியிடங்களில் எதையும் தின்னாமல் இருந்தால் கணவனுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. மனைவி
வீட்டிருந்து கொண்டு கணவனுடன் சாப்பிட்டும் இடைப்பட்ட நேரங்களில் வீட்டிலிருக்கும்
உணவுகளை அடிக்கடி தின்றால் மனைவிக்கு சர்க்கரை நோய் வரும். கணவனும் மனைவியும் கண்ட
நேரங்களில் உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டு வந்தால் இருவருக்கும் முன்னும் பின்னுமாக
சர்க்கரை நோய் வரும். இடைத்தீனி தின்னாமல் மூன்று வேளையும் சமைத்த உணவுகளை மட்டும்
சாப்பிட்டு வாழ்ந்தால் சர்க்கரை நோய் வராவிட்டாலும் வேறு நோய்கள் வரும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : ஏன் உடல் பலகீனம் அடைகிறது? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Why does the body become weak? - Siddha medicine in Tamil [ Health ]