நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...! இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...
ஏன் பயம்? எதற்கு பயம் ஏற்படுகிறது?
நம்மை கோழையாக்குவதும்
பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...!
இரண்டு விதத்தில் பயம்
ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும்
மறைந்து விடும் தற்காலிக பயம்...
எதற்கெடுத்தாலும்
பயப்படுபவராக இருப்பவர்கள். அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கிவிடும்...
சிறுவயதில், நம்மை அடக்க அல்லது
கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில்
மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்...
பெரியவர்களான பிறகு
சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே
அதுதான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு...
பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய
சுண்ணாம்பு போல',
பலமாக தட்டினால்
பட்டென்று விழுந்துவிடும் .அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் பயத்தையும்
வெல்லலாம்...
மனதில் தோன்றும் பயத்தை
தடுமாற்றமின்றி,
தன்னம்பிக்கை துணை
கொண்டு, மன உறுதியுடன்
செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி...
பய உணர்வு ஏற்படும்
நேரங்களில்,
பயம் நீங்கி தைரியம்
பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத்
தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்...
ஆம் தோழர்களே...!
பயத்தை எப்படி வெற்றி
கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம்
தராதீர்கள்...!
கவலையும், அச்சமும்தான் ஒரு மனிதனை
முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!!
மொத்தத்தில் எப்படியாவது
பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள்
கண்டிப்பாக உணர்வீர்கள்..!!!✍🏼🌹
குடும்பம் என்பது ஒரு
வரம். மகிழ்ச்சியான, நிம்மதியான குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.
அமைந்து விடுவதில்லை என சொல்வதை காட்டிலும் அமைத்துக் கொள்வதில்லை என்று கூறலாம்.
நம் பெற்றோர், பிள்ளை, சகோதரிகள் நம் குடும்பம்
தான் நம் முதல் சொத்து. அவர்களுக்கு ஏதாவது என்றால், அழுகிறோம், மனம் உடைந்து போகிறோம்.
அவர்களுக்காக
உழைக்கிறோம். தியாகங்கள் செய்கிறோம். சிலர் தன் குடும்பத்தை எப்படியாவது
வறுமையிலிருந்து மீட்டு கரை சேர்த்து விட வேண்டும் என பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, போராடி உழைத்து சொந்தமாக
வீடு கட்டி தான் திருமணம் செய்யாமல் தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து அழகு
பார்க்கின்றனர்.
இன்றைய காலத்தில்
அதிகமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. பல காரணங்கள்
இருந்தாலும்,
மகிழ்ச்சியான குடும்ப
வாழ்க்கை இல்லாமையே பிரதான காரணமாகும்.
1) வேலை வேறு, குடும்பம் வேறு
வேலை முடித்துவிட்டு
வீடு திரும்புகையில் பாதணிகளைக் கழட்டுவீர்கள் தானே ? அக்கணமே உங்கள்
வேலையினையும் சேர்த்து வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு செல்லுங்கள். அதாவது, நீங்கள் வேலை செய்யும்
இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு, கோபம், பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு செல்லாதீர்கள்.
2) நேரம் ஒதுக்குங்கள்
நீங்கள் நண்பர்களுடன்
செலவிடும் நேரத்தைக் காட்டிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன்
இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
3) கலந்துரையாடுங்கள்
உறங்கச் செல்லுமுன்
அன்றைய நாளை பற்றி கதையுங்கள். கலந்துரையாடுங்கள். குடும்ப உறுப்பினர்களின்
கதைகளைக் கேட்டு பரிமாறிக் கொள்ளுங்கள்.
4) நகைச்சுவை உணர்வு
இடைக்கிடையான
நகைச்சுவையும் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், முகம் சுளிக்காதவாறு
இருத்தல் வேண்டும்.
5) பாராட்டுக்கள்
பெயர், முகம் தெரியாத பலரை
பேஸ்புக்கிளும் வாட்ஸ்அப்பிலும் புகழ்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால், ஒரே வீட்டில் உண்டு
வாழும் குடும்பத்தினரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
” குழம்புக் கறி நல்லா
இருந்தது “
” இந்த சாரியில் நீ
நல்லா இருக்க “
” இந்த முறை உங்கள்
புள்ளிகள் நல்லா இருக்கின்றன ” என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுங்கள்.
6) குறைகளை ஏற்று
வாழுங்கள்
கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும்
மனிதர்களே !
மனிதர்கள் என்றாலே
எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தானே செய்யும்.
” குறைகளை ஏற்று
வாழுங்கள். இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை “
ஆனால், குறைகளை விட நல்ல
விடயங்கள் அதிகமாகவே இருக்கும். அதனை புகழுங்கள்.
7) சுற்றுப்பயணங்கள்
எந்நேரமும் வேலை என
சுற்றிக் கொண்டிருப்பவர்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக, மகிழ்ச்சியாக சுற்றுப்
பயணங்களை மேற்கொள்ளலாம்.
அல்லது வீட்டிற்கு
அருகிலுள்ள தளங்களை பார்வையிடலாம். மற்றும் குடும்பத்தினரை உறவினர் வீடுகளுக்கு
அழைத்துச் செல்லலாம்.
8) சேர்ந்து
உணவருந்துங்கள்
இப்போதெல்லாம் தாய்
நாடகம் பார்த்துக்கொண்டு உணவருந்த, பிள்ளைகளோ மொபைல்போன் பாவித்துக்கொண்டு உணவு
அருந்துவது வழமையாகிவிட்டது.
இது ஆரோக்கியத்திற்கு
உகந்தது அல்ல.
எல்லோரும் ஒரே மேசையில், பாயில் சேர்ந்து
உணவருந்தலாம். ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாறி கொள்ளலாம்.
9) செவிமடுங்கள்
குடும்பத்தினருக்கு
மத்தியில் பிரச்சினைகள் வருவதற்கான காரணங்களில் ஒழுங்காக செவிமடுக்காமையும் ஒரு
காரணமே. கணவன் செல்வதை மனைவியும்,
மனைவி சொல்வதை கணவனும், பெற்றோர், பிள்ளைகள் பிள்ளைகள், பெற்றோர் என ஒருவர்
சொல்வதை மற்றவர் அமைதியாக செவிமடுத்தாலே போதும்
பாத்திரங்கள் காற்றில்
பறக்காது.
10) பரிசளித்துக்
கொள்ளல்
இடைக்கிடை
குடும்பத்தினர் மத்தியில் போட்டிகளை நடத்தலாம். பரிசளித்துக்கொள்ளலாம். மனைவியின்
சுவையான உணவிற்கு ஓர் பரிசு , பிள்ளைகளின் நன்னடத்தைகளை பாராட்டி பரிசு என ஒருவரை ஒருவர்
பரிசளித்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி நீடிக்கும்..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : ஏன் பயம்? எதற்கு பயம் ஏற்படுகிறது? - "பயம் என்ற உணர்வு...!", குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க பத்து வழிகள்... [ ] | self confidence : Why fear? What causes fear? - "The feeling of dread...!", Ten ways to be happy with family... in Tamil [ ]