அஷ்டமி நவமி அன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

அறிவியல் ரீதியான விளக்கம்:

[ ஆன்மீக குறிப்புகள் ]

Why hesitate to do good deeds on Ashtami Navami? - Scientific explanation: in Tamil

அஷ்டமி நவமி அன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்? | Why hesitate to do good deeds on Ashtami Navami?

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாட்களில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பகுத்தறிவு(வியாதிகள்) இந்த கேள்வியை கேட்பார்கள்.

அஷ்டமி நவமி அன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

அறிவியல் ரீதியான விளக்கம்:

 

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ?

 

அதே நாட்களில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ?

 

பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பகுத்தறிவு(வியாதிகள்) இந்த கேள்வியை கேட்பார்கள்.

 

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும், நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்க்கு என்ன காரணம் ?

 

அதில்தான் அறிவியல் ரீதியான விஞ்ஞானம் இருக்கிறது.

 

நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

 

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மகாபாரதம் எனும் மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

 

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது.

 

இதுதான் காரணமா ?

 

இல்லை !!!!

 

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

 

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

 

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம்.

 

அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

 

 நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

 

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம்.

 

ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.

 

தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

 

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

 

அவ்வேளையில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

 

அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

 

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ?

 

அதைப்போன்று. அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது.

 

அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

 

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும்.

 

அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

 

எனவேதான் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரையிலும்  எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : அஷ்டமி நவமி அன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்? - அறிவியல் ரீதியான விளக்கம்: [ ] | Spiritual Notes : Why hesitate to do good deeds on Ashtami Navami? - Scientific explanation: in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்