முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்?

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Why is the first worship to Nandidev? - sivan - Spiritual Notes in Tamil

முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? | Why is the first worship to Nandidev?

வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார்.

முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? 


வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார். அப்பொழுது வீணையை மீட்டிக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி "பெருமானே, பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர். அறியாமை இருளால் தங்கள் திரு நாமத்தைக் கூட ஓத மறந்திட்டனர். அவர்களது அறியாமையைத் தாங்கள் போக்க வேண்டும்" என வேண்டினார்.

உடன் நாரதரது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், "தான் பூலோகம் சென்று தர்மத்தைக் காக்கிறேன்'' என கூறினார். மேலும் "நான் வரும் வரை நந்திதேவன் எனது இடத்தில் இருப்பான்" நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன், ஆதியில் அவதரித்தவன். நானே நந்திதேவன். தர்மமே வடிவானவன். "சிவாய நம" எனும் மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே. எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன்.

எனவே, நந்தி தேவரை வழிபாடு செய்பவர்க்கு சிறந்த பக்தியும், நல்ல குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்லெண்ணங்கள், நல் லொழுக்கங்கள் கிடைக்கும். இவற்றிற்கு மேலாக முக்தி யெனும் வீடுபேற்றையும் அடைவர் என விளக்கினார்.

சிவபெருமான் தனக்கு நிகராக நந்திதேவரை விளக்கியுள்ளதால் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் நந்தி தேவரை வழிபட்டுப் போற்ற வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Why is the first worship to Nandidev? - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]