விநாயகரை முழுமுதற் கடவுளாகப் போற்றும் முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர்.
விநாயகருக்கு மூஞ்சுறு வாகனம் ஏன்?
திங்கள் கிழமை வரும் சதுர்த்தி அன்று
விநாயகரை வழிபட்டால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்பதும், புதன் அன்று வரும் சதுர்த்தியில் வழிபட்டால்
கல்வித்தடை நீங்கும் என்பதும், வெள்ளி
அன்று சதுர்த்தி வழிபாடு செய்தால் காரியத்தடைகள் நீங்கு வதோடு நமது பாவங்களும் அகலும்
என்பதும் நன்னம்பிக்கை
விநாயகரை முழுமுதற் கடவுளாகப் போற்றும்
முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதன்படி, விநாயகரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நடத்தி
பிரபஞ்ச இயக்கத்தை நடத்துவதாக ஐதீகம்!
பரம்பொருள் பெரியவராக இருந்தாலும் அவரைத்
தாங்கும் சத்தி நம் இதயத்திற்கு உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய உருவம்கொண்ட
விநாயகப்பெருமானுக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக அமைத்திருக்கிறார்கள்!.
விநாயகரை வழிபட்டால் உடனடியாக பலன்
கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால்தான் எந்தவொரு செயலை ஆரம்பித்தாலும் கணபதிக்கு முதல்
மரியாதை தருகிறோம். இது பற்றிக் குறிப்பிடும் போது, கணபதி பூஜை கைமேல் பலன்' என்பார்கள்..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர் : விநாயகருக்கு மூஞ்சுறு வாகனம் ஏன்? - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Why is there a moonjuru vehicle for Ganesha? - Ganesha in Tamil [ Ganesha ]