திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பைப் பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்?
திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர்
வற்றுவதில்லை. இந்நதியை
அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம்
என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பைப் பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம்,
வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும்.
ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்தப் புனித
நீர், தன்
திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து,
தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது
ஐதீகம்.
லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை
அபிஷேகத்தின்போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம்
உணர்த்துவதாகச் சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு 'சக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு.
இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல
மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர்
என்கின்றனர். இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.
இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.
இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால்,
இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. அனைவருமே மூலவராகவே
வணங்கப் படுகின்றனர். இங்குப் பஞ்ச தட்சிணாமூர்த்திகளையும் தரிசிக்கலாம்.
1. சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து
நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
2. ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள்
மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான
ஒன்றாக உள்ளது. தேரோட்ட நாளன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், அரசுப்
பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
3. ஆடிப்பூர உற்சவம், நவராத்திரி திருவிழா, ஐப்பசித்
திருக்கல்யாண விழா போன்றவை, இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்
திருவிழாக்கள் ஆகும்.
4. இக்கோயிலில் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகச் சிறப்பான
ஒன்றாகும்.
5. காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் "தங்கப் பாவாடை"
அலங்காரம் செய்யப்படுகிறது.
6. இந்தக் கோயில்களில் அனைத்து நாட்களிலும், தினசரி
பூஜைகள் வழக்கம் போல் செய்யப்பட்டு வருகிறது.
1. சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கியத்
தலங்களில், நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. இது
ஐம்பெரும் சபைகளில் தாமிர சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.
2. திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ் மிக்க தலமாக
இது விளங்குகிறது.
3. அருணாசலக் கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத
பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
4. இத்திருத்தலம் 32 தீர்த்தங்கள் கொண்டது என்கிற பெருமையுடையது.
5. இக்கோயில் சுமார் 2000
ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? - சிறப்புக்கள், பூஜைகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Why is there no water in Tamiraparani? - Specials, pujas in Tamil [ spirituality ]