ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.
முன்னேறிச் செல்ல வேண்டும் ஏன்?
ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம்
எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும்
கொடுக்க
முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.
༺🌷༻
இதைக் கேட்ட பரமஹம்சர் சொன்னார்; இன்றைக்குக் கோயில்
வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்
அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதன் படியே
கோயில்
வாசலில் சர்க்கரை போட்டதும், எறும்புகளெல்லாம்
மொய்த்து
விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
༺🌷༻
கோயிலுக்குள் வரவில்லை. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள்
இருக்கின்றன. ஆனால், இந்த மகரயாழ்
எறும்புகள் வாசலில் இருக்கிற
சர்க்கரையை மட்டும் மொய்த்து விட்டுத் திரும்பிப்
போய்
விட்டனவே! என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்ட போது, பரமஹம்சர்
சொன்னார்;
༺🌷༻
எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும்,
வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான்
இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற
அற்ப சந்தோஷத்துக்கு
மயங்கி முன்னேறாமலேயே இருந்துவிடுவார்கள். அப்படி
இல்லாது
முன்னேறிச் செல்ல வேண்டும்.
🌸 கடலின் அலையும், நகரும் நேரமும்
யாருக்காகவும் காத்திருப்பதில்லை
என்பார்கள்🌸
🌸 யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க
முடியாத ஓர் உன்னதப் பொருள் நேரம்🌸
🌸உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள்
எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள் மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது🌸
🌸 காலையில் வேகமாகவும் மதியம் சோர்வாகவும் மாலையில்
தூங்கியபடியும் அது ஓடுவதில்லை🌸
🌸ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப நேரம் வேகமாக
ஓடிடுச்சு நேரம் போகவே மாட்டேங்குது எனக் காலத்தைக் குறை சொல்கிறோம்🌸
🌸 சரணாலயம் வரும் பறவைகள் கூட இலக்கை நோக்கி வந்து சேர்கின்றன🌸
🌸 ஆகையால் காரணம் இல்லாமல் இந்த பிறவி இல்லை பிறவிக்கான
காரணத்தை தேடு🌸
🌸 ரணம் இல்லாத வாழ்க்கை கூட
மரணத்துக்கு இணை தான்🌸
🌸 இலக்கை தெளிவாக்கு இன்று🌸
🌸 நம்பிக்கை கொண்டு நாளை
முயற்சி செய்
வெற்றி நிச்சயம்👍
மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான்.
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை
பொறுத்துதான்.
ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில்
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும்.
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில்
காண வேண்டும்.
வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம்
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு
இல்லை.
வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால்
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும்
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும்.
உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.
ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில்
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும்
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும்
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.
மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள்
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள்.
உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள்.
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள்.
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.
உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில்
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம்
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய
காரியத்தில் வெற்றியும் கிட்டும்.
ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.
உடனே அந்த தோல்வி எண்ணங்கள்
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும்
நிச்சயமாக வெற்றி அடையும்.
எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும்
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.
என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு
என்று
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.
தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்
🏵 வாழ்க்கை அமைதியானதுதான் உன் மனம் மட்டும்தான்
பதற்றமாக இருக்கிறது💐
🏵 அதை சாந்தப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற சில வழிமுறைகள்
உள்ளது அதை பின்பற்று💐
🏵உன் வாழ்வில் வசந்த காலம் உன்னைத் தேடி வரும்💐
🏵 தேவையற்ற ஒன்றை தேடுவதை நிறுத்து💐
🏵 நீ தேடுவது உனக்கு பயன் உள்ளதா என்று யோசித்து
அதன் பிறகு தேடு💐
🏵 உனக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் உன்னுடைய திறமைக்கு
உட்பட்டவையே💐
🏵 அதை மீறிய பிரச்சினைகளை ஏதும் இல்லை💐
🏵 நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன
ஆனால்💐
🏵 அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது💐
🏵 எதையும் உயர்வாக பார்க்காதே தாழ்வாகவும் பார்க்காதே💐
🏵 யாரையும் ஆராதிக்க வேண்டாம் தூற்றவும் வேண்டாம்💐
🏵 நோக்கத்தில் தெளிவும் மனதில் அமைதியும் கொண்டு
நீ செயல்படும் போது தான்💐
🏵 விரும்பும் லட்சியத்தை அடைய முடியும்💐
எங்கே நீங்கள் அதிகம்
காயங்களையும் வலிகளையும்
சந்திக்கிறீர்களோ அங்கே தான்
உங்களுடைய வாழ்க்கையின்
பாடம் ஆரம்பிக்கிறது.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ..
அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்…
எந்த ஒரு மனிதன் மற்றவர்களும்
நன்றாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறானோ… அந்த மனிதன்
நிச்சயம் வாழ்க்கையில் நன்றாக
தான் இருப்பான்… இதை
பின்பற்றினால் வாழ்க்கை
சிறப்பானதாக இருக்கும்..
பேராசை என தோன்றினாலும்
பரவாயில்லை எப்போதும்
உங்கள் இலக்குகளை மிகவும்
உயரமாக குறி வையுங்கள்.
༺🌷༻
மகிழ்ச்சியாக வாழும் அனைவருடைய வாழ்க்கையும் வெற்றிகரமான
வாழ்க்கை தான்.
༺🌷༻
இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னுடைய சுற்றம் மற்றும்
நட்பும் உன்னை தேடி ஒரு தீர்வு நாடி வருகிறார்கள் என்றால் நீங்கள் ஒரு அர்த்தமுள்ள
வாழ்வை வாழ்கிறீர்கள் என்று கொள்ளலாம்.
༺🌷༻
அவர்களுக்கு உங்களால் பிரதிபலன் பார்க்காமல்
(தீர்வு சொல்வதன் மூலம்) உதவி செய்ய முடிகிறது என்றால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை
வாழ்கிறீர்கள் என்று கொள்ளலாம்.
༺🌷༻
பொதுவில், நிர்பந்தங்கள்
இல்லாமலும், ஒப்பீடுகள் இல்லாமலும் மனதிற்கு பிடித்த, மற்றவர் மனம்
மற்றும் உடல் பாதிக்காமல் அடையும் இலக்குகள் நிறைந்த வாழ்க்கை,வெற்றிகரமான வாழ்க்கை.
🥀 தோல்வி கஷ்டம் அவமானத்தின் போது மட்டுமல்ல வெற்றியின் போதும் தனிமையைத் தேடு🌱
🥀 எத்தனையோ குழப்பங்களுக்கும் தனிமையில் சிறுது நேரம் ஆழமாக சிந்தித்தால்🌱
🥀 பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்🌱
🥀 சிலர் அறிவுரை என்ற பெயரில் குழம்பி போய் நிற்கும் உன்னை மேலும் குழப்பி விடுவார்கள்🌱
🥀 இருப்பினும் அந்த சிலர் கூறும் ஒரு சில வார்த்தைகளில்🌱
🥀 உன் தீராத குழப்பத்துக்கு விடை ஒளிந்து இருக்கலாம்🌱
🥀 யாரையும் அலட்சிய படுத்தாதே இங்கு தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை🌱
🥀 தனிமையில் சிந்தி உனக்கு வெளிச்சமான விடை கிடைக்கும்🌱
🥀 எவரொருவர் அடிக்கடி சிரித்து துன்பங்களை சகித்து🌱
🥀 தன்னிலும் அதிகமாக பிறரை நேசித்து நல்ல வாழ்க்கையினை வாழ்கிறாரோ🌱
🥀 அவரே வெற்றிபெற்ற மனிதனாகிறார்🌱
இரவு நேரம், ஒரு பயணக் கூட்டம், காட்டு வழியே
சென்று கொண்டிருக்கிறது. கூட்டத்தினர், கால்களில் உரசும் கற்களைப் பற்றிக் கவலையின்றி
செல்கின்றனர்.
'என்னை எடுத்தால், வருந்துவீர்கள்' என்கிறது ஒரு
கல்;
'என்னை எடுக்காவிட்டால்
வருந்துவீர்கள்' என்கிறது மற்றொரு கல்.
༺🌷༻
பயணியருக்கு அதிர்ச்சி, 'கற்கள் கூட
பேசுகிறதே' என்று! சிலர் சில கற்களை எடுத்து, பைகளில் நிரப்பிக்
கொள்கின்றனர்;
மற்ற சிலரோ, 'வேண்டாம், எதற்கு எடுத்து
வருந்த வேண்டும்...' என யோசித்து, கற்களை எடுக்காமல்
விட்டு விடுகின்றனர்.
༺🌷༻
விடியற்காலை... கற்களை எடுத்த பயணியர், தங்கள் மகரயாழ்
பைகளை திறந்து பார்க்கின்றனர்... அதிசயம்! அத்தனையும், மதிப்புமிக்க
💎மரகதக் கற்கள்! 'இன்னும் அதிகமாக
எடுத்திருக்கலாமோ...' என சிந்திக்கின்றனர். கற்கள் பேசியதன் அர்த்தம், அவர்களுக்கு இப்பொழுது
தான் புரிகிறது.
༺🌷༻
மனிதர்களுக்கு வயதான பிறகு அந்திம காலங்களிலும், இதுதான் நடக்கும்.
கவலைகளோடு வாழ்ந்தவர்கள், வாழும்போது கொஞ்சமாவது சந்தோஷத்தோடு வாழ்ந்திருக்கலாமே
என்று நினைப்பார்கள்.
கவலைகளை புறம் தள்ளிவிட்டு சந்தோசமாக வாழ்ந்தவர்கள்
இன்னும் கொஞ்சம் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே என்று நினைப்பார்கள்.
🌿சந்தோஷமாக இருப்பவர்கள் தான் புத்திசாலி மற்றும்
அதிர்ஷ்டசாலி.
💐நன்றி🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : முன்னேறிச் செல்ல வேண்டும் ஏன்? - மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?, வெற்றிகரமான வாழ்க்கை என்றால் என்ன? [ ] | self confidence : Why move forward? - How to keep your mind happy? What is a successful life? in Tamil [ ]