
வீட்டு வாசற்படியில் பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில் அமரக்கூடாது.
வீட்டு வாசல்படியில் ஏன் அமரக்கூடாது?

வீட்டு
வாசற்படியில் பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில்
அமரக்கூடாது. வீட்டு வாசற்படி என்பது மகாலட்சுமியின் வருகைக்கான நுழைவு இடம். அதுவே மஹாலக்ஷ்மியின் அம்சம்
என்பதாகும். பொதுவாகவே நம் வீட்டுப் பெண்கள் வாசல்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப்
பொட்டு வைத்து வணங்குவதை இன்றும் காண்கிறோம்.
பெருநகர அடுக்கு மாடி
குடியிருப்புகளைத் தவிர்த்து இன்றும் தனியாக வீடு கட்டுவோர் தலைவாயிலை சிறப்பான
முறையில் வடிவமைத்துக் கொள்வதைக் காண்கிறோம். குறிப்பாக வாசற்காலின் கீழ்ப்பலகை
சற்று பருமனாக அமைந்திருக்கும். அதன்
கீழ்ப்புறத்தில் உள்நோக்கி ஒரு துவாரம் அமைத்து அதற்குள்ளே பொன், பொருள்களை நிரப்பி பதித்து அதனைத் தூக்கி நிறுத்துவார்கள். இன்று இது
குறைந்து வருகிறது. இப்படி
அமைப்பதால் வாசற்படியின் மூலமாக வீட்டிற்குள் இறைவனுடைய சக்தி வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.
தீயசக்தி ஏதும் உள்ளே நுழையாமல் துவாரபாலகர்கள் ஆக நம்மைக் காக்கும் வல்லமை
வாசல்படிக்கு கிடைக்கும். வாசல்படியை மிதிப்பதாலும்,
அதன் மீது அமர்வதாலும்
உள்ளிருக்கும் இறைசக்தி காணாமல் போகும். தீயசக்திகள் வீட்டிற்குள் புகுந்துவிடும்.
பின்புற தோட்டத்து வாசல்படி அல்லது மற்ற அறைகளுக்கான வாசல்படியில் அமருவதால் உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், அதாவது, இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் என்கின்ற இரண்டுங்கெட்டான் எண்ணங்களே
மனதில் தோன்றும், ஸ்திரபுத்தி கிடைக்காது. இதனால்
பொதுவாக எந்த வாசல்படியிலும் அமரக்கூடாது. மேலும் குலதெய்வம் வாசம் செய்யும் இடமே
இந்த தலைவாசல் கதவில் தான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் வீட்டுத்
தாழ்பாள்களை குழந்தைகள் ஆட்டும்போது பெரியவர்கள் சத்தம் போடுகிறார்கள். வாசலின்
இரண்டு புறமும் விளக்குகள் ஏற்றுவதும் அந்த தேவதைகளை வணங்கி குளிர்விக்கவே நாம்
வாசலை குள்ளமாகவும் வடிவமைக்குறோம். நாம் வெளியில் செல்லும்போது கூட வணங்கி
செல்லவேண்டும் என்பதற்காகவே உயரம் குறைத்து கட்டுகிறார்கள். வாசற்படியில் தலை
வைத்து படுத்தல் கூடாது என்று சொல்வதற்கும் இது தான் காரணம். அது போல் தலைவாசலில்
கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கே நின்றுக் கொண்டு பணம் கொடுக்கல் வாங்கல்
செய்வதும், தலை வாரிக் கொண்டு, வெட்டிக்கதைகள் பேசுவதும் கூடாது. நம் குலம்
காப்பது நம்முடைய குல தெய்வம் தான். நம் கஷ்டத்தில் நம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி
வருபவரும் நம் குலதெய்வம் தான். சில நேரங்களில் நம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு
போனது என்று சொல்லக் கேள்வி பட்டு இருப்போம். ஒரு செகன்ட் தப்பித்தோம் என்று
சொல்வோம். அந்த ஒரு செகன்ட் நம் குலதெய்வம் கையில் தான் உள்ளது. ஏன் கோவில்களில்
கூட இறைவனின் படிகளை தாண்டி தான் செல்வோம். மேலும் கைகளால் படிகளின் மேல் தொட்டு
வணங்கி பின்பு தான் உள்ளேச் செல்வோம். படிகளில் கை வைத்து வணங்கி
நெஞ்சில் வலக்கையை தொட்டு
நேர்மறை சிந்தனைகளை எண்ணங்களில் செலுத்துவதற்குத் தான் அப்படி செய்கிறோம். ஆகவே
இதுவரை தெரியாமல் செய்தாலும் இனியாவது வாசற்படியில் அப்படி செய்யாதீர்கள்.
அப்புறம் உங்கள் வாழ்வின் ஏற்றத்தைப் பாருங்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான
சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : வீட்டு வாசல்படியில் ஏன் அமரக்கூடாது? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Why not sit on the doorstep? - Spiritual Notes in Tamil [ spirituality ]