நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்.
வீட்டு நிலை வாசலில் ஏன் தண்ணீரை தெளிக்க வேண்டும்?
நிலை
வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம்
வீட்டிற்குள் இருக்கும்.
மகாலட்சுமியின்
கடைக்கண் பார்வையானது நம் வீட்டின் மேல் விழாதா, நம்முடைய
பணகஷ்டம் தீராதா, நம் வீட்டில் ஐஸ்வர்யா கடாட்சம் நிலையாக
தங்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
மகாலட்சுமி ஒரு சில இடங்களில் விரும்பி தங்கி விடுகின்றாள். ஒரு சில இடங்களில்
வருவதும் போவதுமாக இருப்பாள். ஒரு சில இடங்களில் மகாலட்சுமியின் வாசமே இருக்காது.
புரிகிறதா உங்களுக்கு? சில பேர் நிரந்தரமாக பரம்பரை
பரம்பரையாக பணக்காரர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில பேர், பணம்
இல்லாமல் சில நாள் கஷ்டப்படுவார்கள். சில நாள், கையில் பணம்
இருக்கும் சந்தோஷமாக இருப்பார்கள். ஒரு சில பேர் காலம் முழுவதும் கஷ்டப்பட வேண்டிய
சூழ்நிலை. எதற்காக இந்த பாரபட்சம். எதனால் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு
மாதிரியான விதி விதிக்கப்பட்டிருக்கிறது.
காரணம்
இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. மகாலட்சுமி ஒரு இடத்தில் வாசம் செய்யவில்லை
என்றால் அந்த இடத்தில் ஏதோ ஒன்று சரியில்லை என்று தான் அர்த்தம். உங்களுடைய
வீட்டில் எது சரியில்லை என்பதை கூர்ந்து கவனியுங்கள். அதை சரி செய்து விட்டால்
மகாலட்சுமி தானாக உங்கள் வீட்டிற்கு வரப் போகின்றாள் அவ்வளவுதான்.
*மகாலட்சுமி
வீட்டிற்குள் நுழைய செய்ய வேண்டிய பரிகாரம்:*
மகாலட்சுமிக்கு
பிடிக்காத ஒரு விஷயம் சோம்பேறித்தனம். இந்த சோம்பேறித்தனத்தை தான் மூத்த தேவி,
மூதேவியாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்து உள்ளார்கள். இந்த
மூத்ததேவி இருக்கக்கூடிய வீட்டில் மகாலட்சுமி தாய் காலடி எடுத்து வைக்க மாட்டாள்.
வீட்டில்
இருக்கும் அந்த மூத்த தேவியை எப்படி வீட்டில் இருந்து விரட்டி அடிப்பது. வீட்டில்
இருப்பவர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை செய்து கொண்டே இருந்தால்
வீட்டில் மூத்த தேவி தங்க மாட்டாள். வீட்டை தினம் தினம் சுத்தம் செய்து
நறுமணத்தோடு வைத்துக் கொண்டிருந்தால் வீட்டில் மூத்ததேவி தங்க மாட்டாள்.
இரவு
தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சின்ன சொம்பில் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி
அதில் மஞ்சள் சிறிதளவு போட்டு, கிராம்பு இரண்டு நசுக்கி அதில் போட்டு,
கலந்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை இந்த தண்ணீரில் அந்த
கிராம்பு வாசமும் மஞ்சள் தூள் வாசமும் நிறைந்து இருக்கும். மறுநாள் காலை வாசல்
தெளிக்கும் தண்ணீரில் இந்த வாசம் நிறைந்த தண்ணீரை நிலை வாசலில் தெளிக்க வேண்டும்.
பிறகு கோலம் போட வேண்டும். நிலை வாசலில் இருக்கக்கூடிய இந்த கிராம்பு
வாசத்திற்கும் மஞ்சள் வாசத்திற்கும் உங்களுடைய வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதாவது
லட்சுமி கடாட்சம் தினம் தினம் நுழையும்.
தினமும்
இந்த தண்ணீரை வீட்டு வாசலில் தெளித்து விட வீட்டிற்குள் மூத்ததேவியும் நுழைய
மாட்டாள். இது தவிர வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வீட்டிற்குள்
வருகை தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு வெற்றிலையில்,
2 ஏலக்காய், 2 லவங்கம், ஒரு
சிட்டிகை மஞ்சள் பொடியை வைத்து மடித்து நூலால் கட்டி மகாலட்சுமி பாதங்களில் வைத்து
வேண்டிக் கொள்ளுங்கள். மகாலட்சுமியே விரும்பி வீட்டிற்குள் அழையுங்கள். இப்போது
இந்த பொட்டலத்தை கொண்டு போய் அப்படியே பணம் வைக்கும் பீரோவில் வெள்ளிக்கிழமை அன்றே
வைத்து விடுங்கள்.
மகாலட்சுமி
விரும்பி வந்து இந்த வெற்றிலை பொட்டலத்திற்குள் அமர்ந்து கொள்வாள். வாரம் ஒரு முறை
இந்த பழைய பொட்டலத்தை மாற்றினால் போதும். புதியதாக மீண்டும் எல்லா பொருட்களையும்
வைத்து வெற்றிலை பொட்டலத்தை தயார் செய்து பண பட்டியல் வைத்து வரவேண்டும்.
மேல்
சொன்ன இந்த இரண்டு விஷயங்களை பின்பற்றி வந்தாலே வீட்டில் மகாலட்சுமி கடாட்சம்
நிலையாக இருக்கும். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மேல் விழும். இது
எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் சோம்பேறித்தனத்தோடு
இருக்கக் கூடாது. சுறுசுறுப்போடு எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பணம் சம்பாதிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு
விஷயம். முயற்சியோடு சேர்ந்த ஆன்மீகம் பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு வெற்றியை உங்களுக்கு
தேடித்தரும்..
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வீட்டு நிலை வாசலில் ஏன் தண்ணீரை தெளிக்க வேண்டும்? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Why sprinkle water on the doorstep? - Tips in Tamil [ spirituality ]