சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக சொல்லப்படுகிறது. மொத்தம் 64 பைரவ ரூபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பைரவரை எப்படி வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும், என்ன செய்தால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பைரவர் வழிபாடு : சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது, காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். காவல் தெய்வமாக விளங்கும் பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாகும். பைரவரை வழிபட ஏற்ற நாட்கள் ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் பைரவரை வழிபட உகந்த நாட்கள் ஆகும். இருந்தாலும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக சொல்லப்படுகிறது. இவரை விசேஷ பூஜைகள் ஏதும் செய்யாமல் மனதார அழைத்தாலே உடனடியாக ஓடி வந்து பக்தர்களை காக்கக் கூடியவர்.
பைரவரை இப்படி வழிபடுங்க...நடக்கும் அதிசயத்தை
பாருங்கள்
சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார்.
நாய், பைரவரின்
வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக
இருந்து வருகிறது.
பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக சொல்லப்படுகிறது.
மொத்தம்
64 பைரவ ரூபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பைரவரை எப்படி
வழிபட்டால், என்ன
பலன் கிடைக்கும், என்ன செய்தால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை
தெரிந்து கொள்ளலாம்.
பைரவர் வழிபாடு :
சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார்.
எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது, காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும்
அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு
என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். காவல் தெய்வமாக விளங்கும் பைரவர் என்றாலே
பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாகும்.
பைரவரை வழிபட ஏற்ற நாட்கள்
ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து
நாட்களும் பைரவரை வழிபட உகந்த நாட்கள் ஆகும். இருந்தாலும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி
திதி பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக சொல்லப்படுகிறது. இவரை விசேஷ பூஜைகள்
ஏதும் செய்யாமல் மனதார அழைத்தாலே உடனடியாக ஓடி வந்து பக்தர்களை காக்கக் கூடியவர்.
பிரச்சனைகளும், பைரவரை வழிபடும் முறைகளும் :
* நவகிரக தோஷங்கள் நீங்க பைரவருக்கு செவ்வரளி பூவால்
9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
* வறுமை நீங்க தேய்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில்
வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
* இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ
தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும்.
* சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை
செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்
திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.
* வீட்டில் செல்வம் செழிக்க தேய்பிறை அஷ்டமிகளில்
பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை
வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும்.
பஞ்சதீப வழிபாடு :
* காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால்
இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு
விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
* நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச
தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை
ஊற்றி, பஞ்சு
திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும்
தீரும்.
* இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும்
நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க
செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.
பைரவ வழிபாட்டு பலன்கள் :
பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பைரவருக்கு மிளகு
கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத்
தரும் நினைத்த காரியங்கள் ஈடேறும். பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில்
ஒற்றுமை பலப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : பைரவரை இப்படி வழிபடுங்க...நடக்கும் அதிசயத்தை பாருங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Worship Bhairava like this...watch the miracle happen - Tips in Tamil [ ]