குபேரனை வழிபடும் முறை

குபேரன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: குபேரன் ]

Worship of Kubera - Kuberan - Spiritual notes in Tamil

குபேரனை வழிபடும் முறை | Worship of Kubera

குபேரனை நாம் வழிபட்டால் அவருடைய அருள் கடாஷம் நமக்குக் கிடைக்கும்.

குபேரனை வழிபடும் முறை: 


குபேரனை நாம் வழிபட்டால் அவருடைய அருள் கடாஷம் நமக்குக் கிடைக்கும். குபேரன் எல்லா வளங்களையும் குறைவில்லாமல் தருபவன்.


பணவசதி தேக ஆரோக்கிய திடகாத்திரம் பெருகிட துணை புரிதல், கல்வி வளர்வதற்கான ஆயுதங்கள், வேலை வாய்ப்பு, வியாபாரப் பெருக்கம், தொழிற்துறை முதலியவை இவனுடைய இலக்குகள். இவன் பிறந்த நாள் வியாழக்கிழமை கூடிய பூச நட்சத்திரம். உரிய திசை வடக்கு. பிடித்த நைவேத்தியம் ஏலம், லவங்கம், கிராம்பு, வாசனைத் திரவியங்கள் கலந்த பால், கேசரி.


வியாழக்கிழமை அமைந்த பூச நட்சத்திரத்திலோ அல்லது வியாழக்கிழமையோ அல்லது பூச நட்சத்திரத்திலோ குபேரன் படம் ஒன்றைத் தயார் செய்து அதனுள் குபேரன் எந்திரம் ஒன்றை வைத்து பிரேம் செய்து அப்படத்தை குபேரத் திசையான வடதிசை நோக்கி வைத்து 48 நாட்கள் 108 முறை கீழே கண்ட மந்திரத்தை உச்சரித்து அதற்கான நைவேத்தியங்களைப் படைத்து வழிபட்டால் செல்வச் செழிப்பு தோன்றும்.


ஓம் க்ரீம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தனதான் யாதி 

பதயே தன தான்ய ஸம்ருத்திம்மே தேஹி தபாயக வாஹா! 

ஓம் யஷ்டி ராஜாயவித்ம ஹே அளகாதீசாய தீமஹி 

தந்நோ குபேரப் பிரசோதயாத்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : குபேரனை வழிபடும் முறை - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Worship of Kubera - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]