நாமக்கல் ஆஞ்சநேயருக்குத் தங்கக்கவசம், வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது. முத்தங்கி, வெண்ணை காப்பும், சந்தனக் காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகின்றன.
நாமக்கல் ஆலயத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
நாமக்கல் ஆஞ்சநேயருக்குத் தங்கக்கவசம்,
வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது. முத்தங்கி,
வெண்ணை காப்பும், சந்தனக் காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகின்றன.
நாமக்கல் ஆஞ்சநேயருக்குத் தங்கக்கவசம் அணிவித்து அவரைத்
தரிசனம் செய்தால், லட்சுமி
அருள் கிடைக்கும். வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து அவரைத்
தரிசனம் செய்தால், மனதில்
ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். மனக் குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி
ஏற்படும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரைத் தரிசனம்
செய்தால், நீண்ட
நாட்களாகத் திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அதேபோல்,
நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம்
கிட்டும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அவரைத் தரிசனம்
செய்தால், நோய்கள்
அலங்காரம் செய்து நீங்கும். சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரைத் தரிசனம்
செய்தால், லட்சுமியின்
அருள் கிட்டும். புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரைத் தரிசனம் செய்தால்,
மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்குக் குளிர் காலத்தில் மூன்று மாதங்கள்
மட்டுமே வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. எல்லா நாட்களிலும்
சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு,
ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடை மாலை
சாற்றப்படுகிறது. பொது அபிஷேகமும் நடத்தப்படுகிறது.
அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகமும். சிறப்புப் பூஜைகளும்
நடக்கின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள்
நடக்கின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : நாமக்கல் ஆலயத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Worships to be done at Namakkal Temple - Notes in Tamil [ spirituality ]