டைம் மேனேஜ்மென்ட் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்

குறிப்புகள்

[ தன்னம்பிக்கை ]

You can achieve anything in life if you have time management - Notes in Tamil

டைம் மேனேஜ்மென்ட் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் | You can achieve anything in life if you have time management

பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான வர்கள் நம்மிடம் கூறும் ஒரு ஆலோசனை நேர மேலாண்மையை கடைபிடிப்பது பற்றியது. இது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

டைம் மேனேஜ்மென்ட் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்..!

 

 

பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான வர்கள் நம்மிடம் கூறும் ஒரு ஆலோசனை நேர மேலாண்மையை கடைபிடிப்பது பற்றியது. இது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 

முதலில் எந்த வேலை முக்கியம் என்பதை தீர்மானியுங்கள்:

 

நீங்கள் செய்ய வேண்டிய தினசரி பணிகளின் பட்டியலை தயார் செய்யுங்கள். அவையே உங்கள் ஒருநாளை நகர்த்தி செல்லும் நடத்துநராக இருக்க வேண்டும். இப்படி செய்வதால், தேவையான காரியங்களை செய்து முடிக்க அது தூண்டுகிறது. பட்டியலிடும் முன் உங்கள் பணிகளை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவற்றை எது முக்கியம் எது மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்று பட்டியலிடுங்கள்.

 

அன்றாட வேலை நேரத்தை திறம்பட செலவழிக்க முதலில் திட்டமிடுங்கள்:

 

நேரத்தை எப்படி பிரித்து திட்டமிடுவது. மிக சுலபம். நம் தினசரி வாழ்க்கையை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்.

 

முதலாவது ரூட்டின். இது அதுபாட்டுக்கு நடக்கும். காலைக் கடன், சாப்பிடுவது, தூக்கம் போன்றது.

 

இரண்டாவது வேலை நேரம் இதில் தான் கவனம் தேவை. இங்குதான் அதிக நேரம் செலவாகிறது. சின்ன பேப்பரில் "டூ லிஸ்ட் " எழுதி பழகிக் கொண்டால் வாழ்வின் மிகப்பெரிய தந்திரத்தை பழகிக் கொண்டதாக அர்த்தம்.

 

மூன்றாவது ரிலாக்ஸ் டைம் இந்த நேரத்தில்தான் நாம் நம் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மற்றும் பொழுதுபோக்கு நேரம் என்று செலவழிக்க வேண்டும்.

 

அதிகப்படியான உத்தரவாதம் தராதீர்கள்:

 

எவருக்கும் ஒரு வேலையை முற்றிலும் முடித்து கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள். உங்கள் வேலைக்கு டாலரன்ஸ் கொடுங்கள். "ஒரு வேலையை செய்துவிட்டு "டிக்" அடித்து விட்டு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து செய்யுங்கள்.

 

 

ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்துங்கள்;

 

ஒரு வேலையை செய்ய பல உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தும்போது ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்யுங்கள். கவனச்சிதறல் வராது.

 

சரியான நேரத்தை சரியானவற்றிற்கு பயன்படுத்துங்கள் :

 

வெவ்வேறு பணிகள் அல்லது செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் நாளை வெவ்வேறு தொகுதிகளாகப் பிரிப்பது ஒரு விலைமதிப்பற்ற நேர மேலாண்மைக்கான அணுகுமுறையாகும்.

 

 

உங்களுக்காகவும், உங்களது நேரத்திற்காகவும் இலக்கை நிர்ணயுங்கள்:

 

அன்றாடம் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். அதனை தவிர்த்தால் அது இரண்டு பக்கங்களிலும் மெழுகுவர்த்தியை எரிப்பதற்கு சமம். நீங்கள் வேலை செய்ய மட்டுமே பிறக்கவில்லை. வாழ்க்கையை பிடித்தபடி வாழ்வதற்காக பிறந்துள்ளீர்கள். அதனால் தினமும் ரிலாக்ஸ் செய்ய டைம் ஒதுக்குங்கள்.

 

 

அன்றாட பணிக்கு சுணக்கம் இல்லாதவாறு சகஜமாக வேலைசெய்யும் மனநிவைக்கு வாருங்கள்:

 

எந்த இடமாக இருந்தாலும் தவிர்க்க வேண்டியவற்றுக்கு ‘இல்லை’ என்ற வார்த்தையைப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். இந்த மந்திரச் சொல்லை பழகிவிட்டீர்கள் என்றால், உங்கள் வளர்ச்சியை யாராலும் யவராலும் தடுக்க முடியாது.

 

நீங்கள் செய்யும் வேலையை பகிர முடிந்தால் பகிர்ந்து பாருங்கள்:

 

எல்லா வேலையையும் நம்மால் மட்டுமே செய்ய முடியாது. எனவே முடிந்த மட்டும் உங்கள் வேலையை நம்பிக்கையானவர்களிடம் பிரித்து கொடுத்து வேலையை தொடருங்கள்.

 

 

வேலை நேரத்தில் உங்களை ரிலாக்ஸ் செய்ய கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்;

 

தொடர்ந்து வேலை செய்வதை விட 25 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிட ஓய்வு உங்களை புத்துணர்ச்சியூட்டும். இடைவேளைகளால் உங்கள் வேலைகளில் அதிக கவனத்தைச் செலுத்த முடியும். இது உங்கள் மூளைக்கு ஒரு சின்ன விடுமுறை போன்றதாகும். இதனால் ஒவ்வொரு 30 நிமிடங்களும் ஒரு புதுபிக்கப்பட்ட மனப்பான்மையுடன், கவனத்துடன் உங்கள் பணிக்குத் திரும்ப முடியும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

தன்னம்பிக்கை : டைம் மேனேஜ்மென்ட் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் - குறிப்புகள் [ ] | self confidence : You can achieve anything in life if you have time management - Notes in Tamil [ ]